Monday, August 13, 2012

என் ரசனைகள்

"என் ரசனைகள்" என்னும் இப்பகுதியின் கீழ் என் மனம் கவர்ந்தவைகளை பகிரவிருக்கிறேன்!
************************************************************************************
படித்தது:

கள்ளிக்காட்டு மண், உரமுள்ள நெஞ்சங்கள், அழுத்தமான மனிதர்கள், ஆழமான கதை, மனிதனை ஆட்கொள்ளும் அடுக்கடுக்கான சோகம், அற்புதமான வட்டார வழக்குடன் கூடிய தமிழ்.இவை அனைத்தும் அழகாய் கலந்தது தான் இந்த கள்ளிக்காட்டு இதிகாசம்.கள்ளிக்காட்டில் வசிக்கும் பேயத்தேவன், அவனை சார்ந்து வாழும் சொந்தங்கள் பற்றியும் தான் இந்த கதையின் பெரும் பகுதி நகர்கிறது.படித்து முடித்த பின் ஒரு கணமேனும் தாக்கம் மனதில் நிற்கும் ஒரு அற்புத படைப்பு.வைரமுத்துவின் வைரவரிகளுக்காக சாகித்ய அகாடமி வழங்கப்பட்டுள்ளது.
************************************************************************************
கேட்டது:
கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தில் ஏ.ஆர்.ரகுமான் அவர்களின் அற்புத இசையில், சின்மயி-ன் மயக்கும் குரலில் அமையப்பெற்ற அருமையான பாடல்..என் மனம் கவர்ந்த பாடல்களில் ஒன்று!!!!

************************************************************************************
பார்த்தது:
************************************************************************************
ரசித்தது:

"புறாக்கள் வளர்க்கும் பக்கத்து வீட்டுக்காரர் என்னிடமிருந்து பறிக்கிறார்
பூனை வளர்க்கும் சுதந்திரத்தை"

************************************************************************************