
Sunday, January 13, 2013
தை முதல் நாளே தமிழ்புத்தாண்டு என்ற வாதங்கள் இருக்கட்டும்,தமிழ்நாடு மின்மிகை மாநிலமாகும் என்ற நம்பிக்கை இருக்கட்டும், பருவமழை பொய்த்து ஆற்றுப்படுகைகள் பாலைகளாகி நிலம் வறண்டதால் உடலும் உள்ளமும் வறண்ட விவசாயிகள் இருக்கட்டும், சாதியின் பெயரால் கட்டவிழ்க்கப்படும் வன்முறைகள் இருக்கட்டும், பணத்தாசை காட்டி மோசடி செய்யும் ஏமாற்றுமுதலைகள் இருக்கட்டும், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வரும் கொசுக்களும்,நோய்களும்,சுகாதார கேடும்,அதனை கணக்கில் காட்டாத அரசும் இருக்கட்டும்,மலைகள் மடுக்களாக்கிய கிரானைட் முதலாளிகைன் மீதுள்ள கேஸ்களும் இருக்கட்டும், இந்தியாவின் திறந்தவெளி சிறைச்சாலையாகிய இந்திய எல்லைக்குள்ளேயே தீவாகிப் போன கூடங்குளமும் இருக்கட்டும்,வாரிசுக்கு பதவிகளை தாரவார்க்கத்துடிக்கும்,மக்களை இலவசங்களால் சிலையாக்கும்,சாமான்யனை இதுதான் நம் தலைவிதியென ஏற்றுக்கொள்ளவைத்த தன்னலமற்ற மக்கள் தலைவர்களும் இருக்கட்டும்,அரசியல் கொலைகளும் சதிக்கொலைகளும் இருக்கட்டும், சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு நம் நாட்டிற்குத் தான் லாபம் என் வாதாடும் அறிவுஜீவிகள் இருக்கட்டும்,நாளைய சமுதாயமாவது நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கையை கொலைவெறி பாடகளுக்கு லைக்ஸும்,பேஸ்புக் ஸ்டேடஸுக்கு கமெண்டும், பிடித்த நடிகரின் படத்தின் முதல் நாள் காட்சியும்,நல்ல பிகரும், ஐந்திலக்க சம்பளமும்,களிப்பும் பொழுதுபோக்கும் போதுமென தகர்க்கும் இளைய தலைமுறையும் இருக்கட்டும், இனியாவது நம் நிலை மாறும் நம் தமிழ் மக்கள் நம்மை அரவணைப்பர் என்ற நம்பிக்கையுடன் சிதைக்கப்பட்ட கற்பும்,புதைக்கப்பட்ட வீரமுமாக வேலிக்கு பின் கண்ணீர் முகம் காட்டும் ஈழத்தமிழர்களும் இருக்கட்டும், வண்புணர்ச்சி தப்பு தான் ஆனால் தூக்கு தண்டனை அதை விட தப்பு என டெல்லிப்பெண்ணின் உயிரைக் காவு வாங்கிய விலங்குகளின் ஆயுட்காலமும் இன்னும் இருக்கட்டும்.................இவையெல்லாம் அப்படியே இருக்கட்டும் அல்லது போகட்டும்.. நாம் மட்டும் மாதந்தோறும் வரும் பண்டிகைகளுக்கு வாழ்த்து பரிமாறியும்,கொண்டாடியும் மகிழ்வோம்!!!! வீட்டைச் சுத்தம் செய்து,வர்ணமிட்டு,வீட்டுக்கூரையில் கூரைப்பூக்கள் வைத்து,செங்கரும்ப்பு வைத்து,அருகிலுல்லோரை அழத்து விருந்திட்டு,பசுக்களினைக் குளிப்பாட்டி,அலங்கரித்து, அதன் முன்,முக்கோன அடுப்பில் அரிசி அள்ளிப் போட்டு பொங்கல் வைக்க எங்கள் விவசாயியிடம் புதுநெல் இல்லை இவ்வருடம்... ஆகவே குக்கரில் பொங்கலிட்டு, பேஸ்புக்கில் வாழ்த்து சொல்லுவோருக்கே இவ்வருடம் பொங்கல் உண்டு... பொங்கலன்றாவது உங்களின் சொந்த கிராமங்களுக்குச் சென்று வாருங்கள் நகரத்தார்களே!!!!!!!!!!!அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!!!!!
தொடர்புடைய பதிவுகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment