பேஸ்புக் என்னும் இரண்டாம் உலகமான இங்கு.....
குழந்தைத்தொழிலாளர்களினைக் கண்டால் தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் என ஷேர் செய்யும் நீங்கள் யாரும் ரோட்டோரக் கடையில் தண்ணீர் கொண்டு வந்து வைக்கும் சிறுவனிடம் வேண்டாமெனக் கூறுவதுமில்லை,பாதுகாப்பதுமில்லை.இந்திய தேர்தல் கமிசனின் செயல்பாடு சரியில்லை என் விமர்சிக்கும் யாரும் நோட்டாவில் வாக்குபதியபோவதில்லை.மண்ணை பாதுகாப்போம்,மரத்தைப் பாதுகாப்போம்,பறவைகளைப் பாதுகாப்போம் என நொடிக்கொருதரம் சுற்றுச்சூழலுக்காக ஸ்டேடஸ் போடும் யாரும் பாலிதீன் பைகளில் பொருட்கள் வாங்கி செல்லாமலில்லை.கீழ்வெண்மணி படுகொலையாகினும், ஈழப்படுகொலையாகினும் விமர்சிக்கும் போது சூடு பறக்கும் பின்னூட்டங்களினால் ஆத்திரப்படும் யாரும் sign out செய்த பின் தெருவிலிறங்கி போராட்டம் செய்யப்போவதில்லை. உலகம் வெப்பமயமாதலைப் பற்றிய வீடியோக்களை ஷேர் செய்து லைக்குகள் வாங்கிய பின்,ஏ.சி யை ஆன் செய்து 17டிகிரியில் வைத்து தூங்காமல் இருக்கப்போவதில்லை.ஒரு ஆண்டுக்கு சாலை விபத்துக்களின் எண்ணிக்கை இவ்வளவு என் புள்ளி விவரமளிக்கும் யாரும் 50கி.மீ வேகத்திற்கு குறைந்து வாகனம் ஓட்டாமலில்லை.என் தாய்மொழி தமிழ் என கொதிக்கும் யாரும் உங்கள் குழந்தைகளை கான்வென்டிலும்,சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்திலும் படிக்கவைக்காமலில்லை.இலவசங்கள் மக்களைச் சோம்பேறிகளாக்குகின்றன என் பல பக்க கட்டுரையிடும் யாரும் அரசு வழங்கிய கிரைண்டரில் அரைத்த மாவில் தோசை உண்ணாமலில்லை. ஊழலில் மத்திய கட்சிகளும் சரி மாநில கட்சிகளும் சரி சளைத்தவர்களில்லை என கருத்திடும் எவரும் மாற்று அரசியல் கட்சி ஆரம்பிக்க போவதுமில்லை,அப்படி வரும் மாற்றினை ஆதரிக்கப்போவதுமில்லை.இந்திய முன்னேற்றத்திற்கு காரணமே ஊழல் தான் என கொடிபிடிக்கும் யாரும் நகராட்சி அலுவலகத்தில் பிறப்பு சான்றிதழ் பெற 50ரூபாய் டோக்கன் அட்வான்ஸ் லஞ்சமாக கொடுக்காமலில்லை.விளைப்பொருட்களுக்குச் சரியான விலையின்மையும்,மானியக்குறைவுமே இந்திய விவசாயிகளின் இந்த நிலைக்கு காரணம் என் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கும் யாரும் பீட்ஸாவும்,கே.எப்.சி சிக்கனும் விழுங்காமலிருக்கப் போவதில்லை.குடியின் தீமைகளைப் பட்டியலிடும் யாரும் சனிக்கிழமை மாலை டாஸ்மாக் கியூவில் நில்லாமலிருக்கப் போவதில்லை.டெல்லி பெண்ணின் இறப்பிற்கு இரங்கல் கவிதை பகிரும் யாரும் மாநகரபேருந்தில் இருக்கையின்றி நிக்கும் பெண்ணை சிறிதேனும் தவறாக பார்க்காமலில்லை.பிறகு ஏன் பேஸ்புக் போராளிப் பிம்பத்தில் சிக்கியிருக்க வேண்டும்?? நீங்கள் இதுவரை சமுதாய அவலங்களுக்காக இவ்வளவு கவலைப்பட்டதே போதும்..... எப்போதும் போல் பிடித்த நடிகர்களின் படத்தின் இலவச பிரமோசன் ஸ்டேடஸ்களையும், கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் பாடல்களையும்,கூட்டத்தோடு வெளிசென்று எடுத்த போட்டோக்களையும்,பிறந்த நாள் கொண்டாட்டங்க்களையும்,டீம் அவுட்டிங்குகளையும்,பல ஜிம்மிக்ஸ் வேலைகளை செய்த ப்ரொபைல் படங்க்களையும் பகிருங்கள்.... உங்களுக்குத் தேவை லைக்குகள் தானே!!!???!!!!...
தொடர்புடைய பதிவுகள்
No comments:
Post a Comment