Monday, March 28, 2011

மறுவாழ்வளித்த மகத்தான நெல்லி

அதுஒருகிராமம்என்றுகூடசொல்லமுடியாதஅளவுஒருசிறியகிராமம்அது...சிவகங்கைமாவட்டத்ல்உள்ள கிளாதிரிஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டது“கோனார்பட்டி“ கிராமம்....ஊருக்குள்நுழைந்த நம்மை வரவேற்கபனைமரங்கள் தவிர யாரும் இல்லை...ஒரு நாளைக்கு மூன்று முறை மட்டுமே பேருந்து வசதி,ஒரு பொது மின்விளக்கு,இருந்த ஒரே ஒரு பள்ளிக்கூடத்தையும் மாணவர்கள் வரத்து இல்லையென மூடி விட்டனர்..இந்த நிலையில் இந்த ஊரில் இருந்தால் வாழ முடியாது என பலர் காலி செய்து பிழைப்பு தேடிசென்று விட்டனர்... இத்தகைய இக்கட்டில் எஞ்சியிருக்கும்மக்களுக்கு மறுவாழ்வளித்தது இந்த நெல்லித்தோட்டம்... ஆம்
இன்று இந்த ஊரினைச் சுற்றிலும் நெல்லித்தோட்டம் இம்மக்களின் உழைப்பினால் உருவாகியுள்ளது... நெல்லி வளரபோதுமான வ்ளமான மண்,குறைவானஅளவு நீர்த்தேவை, பரந்த நிலப்பரப்பு,மக்களின் அயராத உழைப்பு என மக்களின் வாழ்வில்
ஒளியேற்றியுள்ளது.....

அங்கு வேலை செய்யும் பொன்னுப்பிள்ளை“இந்த ஊரு தான் என் பூர்வீகம்... இத தவிர வேற எதுவும் எங்களுக்குத் தெரியாது,அதனாலதான் எல்லாரும் பிழைப்பு தேடி வெளியூர்க்கு போனாலும், நாங்க இங்கயே கிடந்தோம்.. எங்க நேரத்துக்குனே நாலு வருசமா மழை பெய்யாம விவசாயமில்லை,ஆனாலும் ஊரை விட்டு போக மனசில்லை..அப்பொதான் இந்த தோட்டக்காரங்க வந்தாங்க... ஆரம்பத்திலவிதை போடற்து, நெல்லி நாத்துக்களை நடுரது,களை எடுக்கறதுமாதிரியான வேலைகள் தினமும் இருக்கும்...அப்பறமா செடிகள்
வளர்ந்து காய்விட ஆரம்பிச்சபின்னாடி காய் பறிக்கறது, பகுக்கறது,புது செடிவிடறதுனு வருசம் முழுசும் வேலை இருக்கும்“ என்கிறார்... கிராமப்புறவேலைவாய்ப்புத் திட்டம் மூலம் பயன்படாத பள்ளங்களையும், சாலைகளையும் திருத்தும்வேலைகளை வழங்கும் அரசு, ஏன் இது போன்ற மழை பொய்த்த கிராமங்களில் இது போன்ற தோட்டபண்ணைகளை
அமைத்து மக்களின் உழைப்பை உபயோகப்படுத்தக்கூடாது???

என் இறுதியாண்டு ப்ராஜெக்ட்

தனிநபர் அட்டை வங்கி.(SOLOCARD BANK SYSTEM ):

நமக்காக நம்மக்களுக்காக........
வருந்தி உழைகக்கும் வறியவர்களுக்காக.......
உண்மையாக உழைக்கும் உழைப்பாளிகளுக்காக....
ஏற்றம்பெற எண்ணும் ஏழைகளுக்காக............

இறுதியாண்டு ப்ராஜெக்ட் என்றதும் எதோ ஒரு கம்ப்யூட்டர் சென்டரில்
மொத்தமாக பணத்தைச் செலுத்தி விலை கொடுத்து வாங்கும் மாணவர்கள் மத்தியில்
தம் ப்ராஜெக்ட் மூலமாக மக்களுக்கு எதேனும் பயன்படவேண்டும் என்பதற்காக
தொடங்கப்பட்ட ஒரு அக்கறையுள்ள மாணவர்களின் ஒரு பயனுள்ள ப்ராஜெக்ட்
உங்களுக்காக!!!

விளக்கவுரை:

100கோடி மக்களுக்கும் பொதுவானதே நம் அரசின் கொள்கைகள்.ஒவ்வொரு
குடிமகனுக்கும் வேண்டியவற்றை பல நலத்திட்டங்கள் மூலம் செய்து வருகின்றன
நம் மத்திய,மாநில அரசுகள்.ஆனால் இவ்வாறாக அரசிலிருந்து வழங்கப்படும்
ஒவ்வொரு சலுகையும் முறைப்படி மக்களைச் சென்றடைகிறதா என்பதிலிருந்தே
ஆரம்பிக்கின்றது கேள்விக்குறி! மத்திய,மாநில அரசுகளிடம் இருந்து
வெளிவரும்ஒவ்வொரு திட்டமும் பலர் கைமாறியே மக்களுக்குச்செல்கின்றது.அதிலும் பல இன்னல்களுடன்..இந்த வழிமுறையை மாற்றி,முறைப்படிமக்களுக்குச் சேரும் அரசு->மக்கள் என்ற நேரடி முறையே எங்கள் தனிநபர்அட்டை வங்கி.(SOLOCARD BANK SYSTEM ). ஆண்டிற்கு 23இலட்சம்கோடித்தொகைஇந்த ஊழல்கள் மூலம் மட்டுமே அரசிற்கு இழப்பாகின்றது. 6கோடிமக்கள்,32மாவட்டங்கள்,220 தாலுகாக்கள்,6மாநகராட்சிகள் என பரந்து
இந்தியாவின் அசைக்க முடியாத சக்தியாக விளங்கும் நம்தமிழ்நாட்டில்,ஏறக்குறைய அனைவருமே அரசின் திட்டங்களை அனுபவித்துவருகின்றனர். 2 கோடிக்கும் அதிகமான மக்கள் நேரடியாக நலத்திட்டங்கள்பெறுகின்றனர். இந்த அனைத்து திட்டங்களும் விசயங்களை அடிப்படையாககொண்டுள்ளன. ஒன்று "வயது", மற்றொன்று "வசிக்கும்
பகுதி(கிராமம்,நகரம்,..)". இவ்விசயங்களைக் கொண்டே எங்களின் ப்ராஜெக்ட்
அமையப்பெற்றது.
எங்களின் ப்ரொஜெக்ட் மூலம் அரசு உதவிதிட்டங்கள்ஒவ்வொன்றும் நேரடியாக மக்களே பெறமுடியும்.15 வயதிற்கு மேற்பட்டஅனைவருக்கும் அடையாள அட்டை வழங்கிட உத்தரவிட்டுள்ளது நம் நடுவஅரசு.அதைப் போல நம் மாநிலத்திலுள்ள ஒவ்வொருவருக்கும் அவரின்பெயர்,முகவரி,இருப்பிட அடையாள எண்(area code),அட்டை எண் (id
number),பிரிவுஎண் (category number),அலுவலரின் முத்திரைஇருக்கும்.ஒவ்வொரு மாநகராட்சியும் அதிலுள்ள தாலுகாக்கள் வாரியாகவடக்கு,தெற்கு,கிழக்கு,மேற்கு என பகுதிவாரியாகபிரிக்கப்பட்டுஅனைவருக்கும்அடையாளஅட்டைவழங்கப்படும்.ஒவ்வொருஊரிலும் ஏ.டி.எம்சென்டர்கள் இருப்பது போல SOLOCARD BANK CENTREஅமைக்கப்படும்.தனிநபர்வங்கி மையமும்(scb center) ஒவ்வொருதாலுகாவிலும்அமைக்கப்படும்.
அடையாள அட்டை கார்டு(sim card)வடிவில் இருக்கும்.ஏ.டி.எம் கார்டில் உள்ள கோட்மேக்னடிக்முறையில்அறியப்படுமஇதன்மூலம்எளிதாக மற்றவர்கள் கோட்-டினை பெற இயலும்.ஆனால்நாம் வழங்கும் தனிநபர் அட்டையானது simcardவடிவில்இருக்கும்.இதனயாரும்எளிதாகcopy,hackசெய்யஇயலாது.தனிநபர்வங்கிமையமும்scbcenterஒவ்வொருதாலுகாவிலும்அமைக்கப்படும்.மக்களவயதினைக்கொண்டுஇளையோர்,சிறார்,மகளிர்,அலுவலர்,மூத்தகுடிமக்கள்,மாற்றுத்திறனாளிஎன பிரிக்கப்படுவர்.அவர்கள் பெறும் சலுகை,உதவித்தொகையின்அடிப்படையில்மாதந்தோறும் அவர்களின் SCB சேமிப்புக்கணக்கில் பணம்பதிவேற்றப்படும்.(எ.கா)விதவைகள் ஊக்கத்தொகை என்ற நலத்திட்டத்தின் கீழ்
ஒருவர் மாதந்தோறும் ரூ.500 பெறுவாராயின், அவரது கணக்கில் மாதந்தோறும்
ரூ.500 பதிவேற்றப்படும்.அவர் அதனை மாதத்தின் முதல் நாளில்எடுத்துக்கொள்ளலாம் அல்லது சேமிப்பாகவும் வைக்கலாம்.dynamicagecalculation algorithm மூலம் ஒருமுறை ஒவ்வொருவரின் வயதும் அப்டேட்செய்யப்பட்டு,அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகள் ஆட்டோமேட்டிக்அப்டேட்-ஆக செய்யப்படும்.இதன் மூலம் மக்கள் ஒவ்வொரு முறையும் அரசுஅலுவலகங்களில்காத்திருந்துதாமதம்ஆகததேவைஇல்லை.அரசு,அரசுப்பணியாளர்களுக்கும்ஒவ்வொரு முறையும் சரிபார்க்கும் பளுகுறையும்.


ஒரு பயனாளர் தன் கார்டை உள்நுழைத்தவுடன் அவரைப் பற்றிய அனைத்து
விவரங்களும் திரையில் தோன்றும்.நம் மக்களுக்கு புரியும் வகையில் ஒவ்வொரு
செயலுக்கும் குரல் பதிவு இருக்கும்.இதன் மூலம் படிக்காத மக்களும் எளிதாக
இயக்கலாம். பயனாளர் தம் பிரிவினைத் தேர்ந்தெடுத்து விட்டு,அவர் பெறும்
ஊக்கத்தொகையைப் பெற்றுக்கொள்ளலாம்ஒவ்வொரு முறையும் எவர்களின்
தலையீடுமின்றி எளிதாக மக்கள் தம் பரிவர்த்தனையை மேற்கொள்ளலாம். ஒவ்வொருமுறைப் பணப்பறிமாற்றம் நடக்கும் போது ரூ.11சேவைக்கட்டணமாகஎடுத்துக்கொள்ளப்படும்.இதில்ரூ.10 அப்பயனாளரின் சேமிப்பாகவும்,ரூ.1 சேவைக்கட்டணமாகவும் இருக்கும். இந்த சேவைக்கட்டணம் அரசிற்குச்
சென்று மீண்டும் நலத்திட்டங்கள் வடிவில் மக்களையடையும்.ஒவ்வொரு முறை
பரிவர்த்தனை முடிந்த பின்னும் பின்னூட்டங்கள்,குரல் பதிவு மூலம் தம்
எண்ணங்களை அரசிற்கு அனுப்பலாம்.ஒவ்வொரு பறிமாற்றத்தின் போதும் அரசு
அலுவலர்களைத் தொலைபேசி(interconnected tollfree phone) மூலம் தொடர்பு
கொண்டும் தமது கருத்துக்களைக் கூறலாம். இந்த அட்டையைப் கிரடிட்
கார்டாகவும்அரசுஅலுவலகங்கலில்(ரேசன்,விவசாய அலுவலகம்,தாலுகா
அலுவலகம்....) பயன்படுத்தலாம். மேலும் இதனுடன் ஸ்கேனர் இணைக்கப்பட்டு
சான்றிதழ் சரிபார்க்கவும் செய்யலாம்.
பொதுமக்கள் மட்டுமின்றி அரசுப் பணியாளர்களாக அன்றி
அரசுக்காக பாடுபடும் (எ.கா: சாலைப்பணியாளர்கள்.......)
வேலையாளிகளுக்கும்,இடைத்தரகர்கள் தலையீடின்றி அரசு நிர்ணயித்த தொகையைப்
பெறலாம்.லஞ்சமில்லா நாடு உருவாக எங்களின் சிறுமுயற்சி இது!!!

Monday, March 21, 2011

அறிவியல்..அதிசயம்

உடலசைவில் உலகம்
விரல்நுனியில் விஷயங்கள்!!!


“மாற்றம் மட்டுமெ மாறதது“என்பர்..இவ்வுலகம் ஒவ்வொருநாளும் பல மாற்றங்களைகடந்து ஓடிக்கொண்டுள்ளது. அதைப்போல உலகையே பிரமிப்பில் ஆழ்த்தவுள்ள ஒரு மாற்றம் தான் “சிக்ஸ்த்சென்ஸ் தொழில்நுட்பம்“, ஒரு விரலசைவில் உலகே நம் கையில் என்று வந்தால்?!...இதென்ன உளறல் என்று அதிராமல் மேற்கொண்டு படிங்க பாஸ்!.. ஆம்...இது சாத்யமே, உங்களின் உடலசைவுகளை உணர்ந்து,செயல்களைச் செய்யும் ஒரு மந்திர தொழில்நுட்பம் இது!!.. கையடக்க செல்போன்,ப்ரொஜெக்டர்,கேமரா,நான்கு வண்ணங்களில் டேப்கள் மட்டுமே கொண்டு இந்த அரிய கண்டுபிடிப்பினை உலகிற்களித்தவர் நம் இந்தியாவைச் சேர்ந்த 25வயதே நிரம்பிய “பிரணவ் மிஸ்ட்ரி“ என்பது நாம் பெருமைப்படத்தக்க ஒன்று....
இதெல்லாம் சரி...இத்தொழில்நுட்பம் மூலம் என்ன தான் செய்யலாம்?? நீங்கள் நாளிதழ் வாசித்துக் கொண்டுள்ளீர்கள்.. அச்செய்தியின் சுவாரசியம் உங்களைக் கவர,அதைப் பற்றிய தற்போதைய தகவலினைப் பெற நீங்கள் செய்யவேண்டியதஒன்றே!!உங்கள் விரலிலுள்ள டேப் மூலம் குறிப்பிட்ட அந்த செய்தியினைத் தொட்டால் போதும்... அதன் தற்போதைய அப்டேட்கள் வீடியோ வடிவில் கிடைக்கும்... இத்தொழில் நுட்பம் மூலம் நாம் எந்த பொருட்களைத் தொட்டாலும்,கேமரா அதைக் கிளிக்கி,மொபைல்போனிலுள்ள இனையத்திற்கு அனுப்பி தகவல்களைத் திரட்டும்... அதை ப்ரொஜெக்டர் உதவியுடன் எங்கு(சுவர்,பேப்பர்,திரை,உடல்...)
வேண்டுமானாலும் டிஸ்பிளே செய்யலாம்...ஒரு விரலினைக் கொண்டே வாட்ச்,கையை நீட்டினால் போன் நம்பர் பேட்,ட்ரெய்ன் டிக்கெட் நிலவரம், புத்தக மதிப்புரைகள்,பிரிண்டர் உதவியின்றி தகவலினை காபி செய்தல் என பல செயல்பாடுகளைக் கொண்டுள்ள இத்தொழில்நுட்பம் விரைவில் ஒரு புதிய மாற்றத்தினை நிலைநாட்டவுள்ள மாயாஜாலம்!!

Tuesday, March 15, 2011

உன்னால் முடியும்

என் இனிய நண்பனே!
உறங்குகின்ற உன்
சிந்தனையைத் தட்டி எழுப்பும்
ஓர் இனிய முயற்சிதான்
இக்கவிதை...

நேற்று என்பது
முடிந்துவிட்டது!
நாளை என்பது
இனிவரும் நாள்!
இன்று என்பது
உன் கையில்!

நடந்ததை மறந்துவிடு
நடப்பதை நினைத்திரு
வெற்றி அடையும் வரை
விழித்திரு உனக்கான
விடியலை நோக்கி...

உழைத்திரு...முயற்சித்திரு
உன் வெற்றியை அடைய
எதை தேடுகின்றாய்
புறத்தே தேடினால்
அது கிடைக்காது
அகத்தே ஒளிந்திருக்கும்
உன் சக்தியை
விடாது பற்றிக்கொள்

உனக்கான
வெற்றிக்கனியைப் பறிக்க
என்னால் முடியாது
எதுவும் முடியாது
என்பது "அவநம்பிக்கை"...

உன் கனவுகளை
நிஜமாக்கி உன்னை
வெற்றிமேல் வெற்றி
பெறச்செய்வது
என்பது உன் தன்னம்பிக்கை

வெயில் உள்ளவரை
மட்டுமே உன்
நிழல்கூட உன்னை
தொடர்ந்து வரும்
ஆனால்
உன்னை விடாமல்
பற்றிக் கொண்டு 
தூக்கி நிறுத்திட
உன்னால் முடியும்
என்று சிந்திக்க வைக்கும்
அந்த முன்றாவது கைதான்
உன் "தன்னம்பிக்கை"

விடாமல் பற்றிக்கொள்
விழாமல் எழுந்துநிற்பாய்
உன் வாழ்க்கையில்...