உடலசைவில் உலகம்
விரல்நுனியில் விஷயங்கள்!!!
“மாற்றம் மட்டுமெ மாறதது“என்பர்..இவ்வுலகம் ஒவ்வொருநாளும் பல மாற்றங்களைகடந்து ஓடிக்கொண்டுள்ளது. அதைப்போல உலகையே பிரமிப்பில் ஆழ்த்தவுள்ள ஒரு மாற்றம் தான் “சிக்ஸ்த்சென்ஸ் தொழில்நுட்பம்“, ஒரு விரலசைவில் உலகே நம் கையில் என்று வந்தால்?!...இதென்ன உளறல் என்று அதிராமல் மேற்கொண்டு படிங்க பாஸ்!.. ஆம்...இது சாத்யமே, உங்களின் உடலசைவுகளை உணர்ந்து,செயல்களைச் செய்யும் ஒரு மந்திர தொழில்நுட்பம் இது!!.. கையடக்க செல்போன்,ப்ரொஜெக்டர்,கேமரா,நான்கு வண்ணங்களில் டேப்கள் மட்டுமே கொண்டு இந்த அரிய கண்டுபிடிப்பினை உலகிற்களித்தவர் நம் இந்தியாவைச் சேர்ந்த 25வயதே நிரம்பிய “பிரணவ் மிஸ்ட்ரி“ என்பது நாம் பெருமைப்படத்தக்க ஒன்று....
இதெல்லாம் சரி...இத்தொழில்நுட்பம் மூலம் என்ன தான் செய்யலாம்?? நீங்கள் நாளிதழ் வாசித்துக் கொண்டுள்ளீர்கள்.. அச்செய்தியின் சுவாரசியம் உங்களைக் கவர,அதைப் பற்றிய தற்போதைய தகவலினைப் பெற நீங்கள் செய்யவேண்டியதஒன்றே!!உங்கள் விரலிலுள்ள டேப் மூலம் குறிப்பிட்ட அந்த செய்தியினைத் தொட்டால் போதும்... அதன் தற்போதைய அப்டேட்கள் வீடியோ வடிவில் கிடைக்கும்... இத்தொழில் நுட்பம் மூலம் நாம் எந்த பொருட்களைத் தொட்டாலும்,கேமரா அதைக் கிளிக்கி,மொபைல்போனிலுள்ள இனையத்திற்கு அனுப்பி தகவல்களைத் திரட்டும்... அதை ப்ரொஜெக்டர் உதவியுடன் எங்கு(சுவர்,பேப்பர்,திரை,உடல்...)
வேண்டுமானாலும் டிஸ்பிளே செய்யலாம்...ஒரு விரலினைக் கொண்டே வாட்ச்,கையை நீட்டினால் போன் நம்பர் பேட்,ட்ரெய்ன் டிக்கெட் நிலவரம், புத்தக மதிப்புரைகள்,பிரிண்டர் உதவியின்றி தகவலினை காபி செய்தல் என பல செயல்பாடுகளைக் கொண்டுள்ள இத்தொழில்நுட்பம் விரைவில் ஒரு புதிய மாற்றத்தினை நிலைநாட்டவுள்ள மாயாஜாலம்!!
No comments:
Post a Comment