Monday, March 28, 2011

மறுவாழ்வளித்த மகத்தான நெல்லி

அதுஒருகிராமம்என்றுகூடசொல்லமுடியாதஅளவுஒருசிறியகிராமம்அது...சிவகங்கைமாவட்டத்ல்உள்ள கிளாதிரிஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டது“கோனார்பட்டி“ கிராமம்....ஊருக்குள்நுழைந்த நம்மை வரவேற்கபனைமரங்கள் தவிர யாரும் இல்லை...ஒரு நாளைக்கு மூன்று முறை மட்டுமே பேருந்து வசதி,ஒரு பொது மின்விளக்கு,இருந்த ஒரே ஒரு பள்ளிக்கூடத்தையும் மாணவர்கள் வரத்து இல்லையென மூடி விட்டனர்..இந்த நிலையில் இந்த ஊரில் இருந்தால் வாழ முடியாது என பலர் காலி செய்து பிழைப்பு தேடிசென்று விட்டனர்... இத்தகைய இக்கட்டில் எஞ்சியிருக்கும்மக்களுக்கு மறுவாழ்வளித்தது இந்த நெல்லித்தோட்டம்... ஆம்
இன்று இந்த ஊரினைச் சுற்றிலும் நெல்லித்தோட்டம் இம்மக்களின் உழைப்பினால் உருவாகியுள்ளது... நெல்லி வளரபோதுமான வ்ளமான மண்,குறைவானஅளவு நீர்த்தேவை, பரந்த நிலப்பரப்பு,மக்களின் அயராத உழைப்பு என மக்களின் வாழ்வில்
ஒளியேற்றியுள்ளது.....

அங்கு வேலை செய்யும் பொன்னுப்பிள்ளை“இந்த ஊரு தான் என் பூர்வீகம்... இத தவிர வேற எதுவும் எங்களுக்குத் தெரியாது,அதனாலதான் எல்லாரும் பிழைப்பு தேடி வெளியூர்க்கு போனாலும், நாங்க இங்கயே கிடந்தோம்.. எங்க நேரத்துக்குனே நாலு வருசமா மழை பெய்யாம விவசாயமில்லை,ஆனாலும் ஊரை விட்டு போக மனசில்லை..அப்பொதான் இந்த தோட்டக்காரங்க வந்தாங்க... ஆரம்பத்திலவிதை போடற்து, நெல்லி நாத்துக்களை நடுரது,களை எடுக்கறதுமாதிரியான வேலைகள் தினமும் இருக்கும்...அப்பறமா செடிகள்
வளர்ந்து காய்விட ஆரம்பிச்சபின்னாடி காய் பறிக்கறது, பகுக்கறது,புது செடிவிடறதுனு வருசம் முழுசும் வேலை இருக்கும்“ என்கிறார்... கிராமப்புறவேலைவாய்ப்புத் திட்டம் மூலம் பயன்படாத பள்ளங்களையும், சாலைகளையும் திருத்தும்வேலைகளை வழங்கும் அரசு, ஏன் இது போன்ற மழை பொய்த்த கிராமங்களில் இது போன்ற தோட்டபண்ணைகளை
அமைத்து மக்களின் உழைப்பை உபயோகப்படுத்தக்கூடாது???

No comments:

Post a Comment