Tuesday, December 24, 2013

உங்களுக்குத் தேவை லைக்குகள் தானே!!!???!!!!...


பேஸ்புக் என்னும் இரண்டாம் உலகமான இங்கு..... குழந்தைத்தொழிலாளர்களினைக் கண்டால் தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் என ஷேர் செய்யும் நீங்கள் யாரும் ரோட்டோரக் கடையில் தண்ணீர் கொண்டு வந்து வைக்கும் சிறுவனிடம் வேண்டாமெனக் கூறுவதுமில்லை,பாதுகாப்பதுமில்லை.இந்திய தேர்தல் கமிசனின் செயல்பாடு சரியில்லை என் விமர்சிக்கும் யாரும் நோட்டாவில் வாக்குபதியபோவதில்லை.மண்ணை பாதுகாப்போம்,மரத்தைப் பாதுகாப்போம்,பறவைகளைப் பாதுகாப்போம் என நொடிக்கொருதரம் சுற்றுச்சூழலுக்காக ஸ்டேடஸ் போடும் யாரும் பாலிதீன் பைகளில் பொருட்கள் வாங்கி செல்லாமலில்லை.கீழ்வெண்மணி படுகொலையாகினும், ஈழப்படுகொலையாகினும் விமர்சிக்கும் போது சூடு பறக்கும் பின்னூட்டங்களினால் ஆத்திரப்படும் யாரும் sign out செய்த பின் தெருவிலிறங்கி போராட்டம் செய்யப்போவதில்லை. உலகம் வெப்பமயமாதலைப் பற்றிய வீடியோக்களை ஷேர் செய்து லைக்குகள் வாங்கிய பின்,ஏ.சி யை ஆன் செய்து 17டிகிரியில் வைத்து தூங்காமல் இருக்கப்போவதில்லை.ஒரு ஆண்டுக்கு சாலை விபத்துக்களின் எண்ணிக்கை இவ்வளவு என் புள்ளி விவரமளிக்கும் யாரும் 50கி.மீ வேகத்திற்கு குறைந்து வாகனம் ஓட்டாமலில்லை.என் தாய்மொழி தமிழ் என கொதிக்கும் யாரும் உங்கள் குழந்தைகளை கான்வென்டிலும்,சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்திலும் படிக்கவைக்காமலில்லை.இலவசங்கள் மக்களைச் சோம்பேறிகளாக்குகின்றன என் பல பக்க கட்டுரையிடும் யாரும் அரசு வழங்கிய கிரைண்டரில் அரைத்த மாவில் தோசை உண்ணாமலில்லை. ஊழலில் மத்திய கட்சிகளும் சரி மாநில கட்சிகளும் சரி சளைத்தவர்களில்லை என கருத்திடும் எவரும் மாற்று அரசியல் கட்சி ஆரம்பிக்க போவதுமில்லை,அப்படி வரும் மாற்றினை ஆதரிக்கப்போவதுமில்லை.இந்திய முன்னேற்றத்திற்கு காரணமே ஊழல் தான் என கொடிபிடிக்கும் யாரும் நகராட்சி அலுவலகத்தில் பிறப்பு சான்றிதழ் பெற 50ரூபாய் டோக்கன் அட்வான்ஸ் லஞ்சமாக கொடுக்காமலில்லை.விளைப்பொருட்களுக்குச் சரியான விலையின்மையும்,மானியக்குறைவுமே இந்திய விவசாயிகளின் இந்த நிலைக்கு காரணம் என் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கும் யாரும் பீட்ஸாவும்,கே.எப்.சி சிக்கனும் விழுங்காமலிருக்கப் போவதில்லை.குடியின் தீமைகளைப் பட்டியலிடும் யாரும் சனிக்கிழமை மாலை டாஸ்மாக் கியூவில் நில்லாமலிருக்கப் போவதில்லை.டெல்லி பெண்ணின் இறப்பிற்கு இரங்கல் கவிதை பகிரும் யாரும் மாநகரபேருந்தில் இருக்கையின்றி நிக்கும் பெண்ணை சிறிதேனும் தவறாக பார்க்காமலில்லை.பிறகு ஏன் பேஸ்புக் போராளிப் பிம்பத்தில் சிக்கியிருக்க வேண்டும்?? நீங்கள் இதுவரை சமுதாய அவலங்களுக்காக இவ்வளவு கவலைப்பட்டதே போதும்..... எப்போதும் போல் பிடித்த நடிகர்களின் படத்தின் இலவச பிரமோசன் ஸ்டேடஸ்களையும், கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் பாடல்களையும்,கூட்டத்தோடு வெளிசென்று எடுத்த போட்டோக்களையும்,பிறந்த நாள் கொண்டாட்டங்க்களையும்,டீம் அவுட்டிங்குகளையும்,பல ஜிம்மிக்ஸ் வேலைகளை செய்த ப்ரொபைல் படங்க்களையும் பகிருங்கள்.... உங்களுக்குத் தேவை லைக்குகள் தானே!!!???!!!!...

Friday, March 22, 2013

வரலாற்றுச் சோகமும்,கருணாநிதியும்


'சாந்தா அல்லது பழனியப்பன்’ - இது கருணாநிதி போட்ட முதல் நாடகம். 'டெசோ அல்லது புஸ்ஸோ’ - இது கருணாநிதி நடத்த ஆரம்பித்திருக்கும் இறுதி நாடகம்.கோபாலபுரம் வீட்டு வாசலில் முதலமைச்சர் கார் வந்து நிற்க ஆரம்பித்தால், 'தமிழினத் தலைவர்’ நாற்காலியைப் புறவாசலில் கொண்டுபோய்ப் போட்டுவிடுவதும், அந்தக் கார் காணாமல் போனால், தூசி தட்டி 'தமிழினத் தலைவர்’நாற்காலியை எடுத்துவந்து உட்காருவதும் கருணாநிதிக்குக் கைவந்த கலை. இந்த நூற்றாண்டின் வரலாற்றுச் சோகமான ஈழத் தமிழர் வாழ்க்கையைவைத்தும் அவர் இப்படி நாடகம் ஆடுவதைத் தான் பார்க்கச் சகிக்கவில்லை. ஈழத்தில் கொடுமை நடந்து 100 ஆண்டுகள் ஆகிவிடவில்லை. மூன்று ஆண்டுகளே முழுமையாக முடியவில்லை. அந்த அவலம் அரங்கேறியபோது,தமிழ்நாட்டின் அதிகாரம் பொருந்திய நாற்காலியில்அமைச்சர்களோடு அமர்ந்து நாளரு பாராட்டு விழா, நித்தம் ஒரு கொண்டாட்டம், கவர்ச்சி ஆட்டம்பாட்டங்களைக் கண்டுகளித்தவர் கருணாநிதி. அப்போது அவரது கட்சியின் தயவை நம்பித்தான் மத்தியில் காங்கிரஸ் அரசாங்கம் இருந்தது. மன்மோகன், சோனியா, பிரணாப் முகர்ஜி ஆகிய மூன்று அதிகார மையங்களிடமும் அரை மணி நேரத்தில் தொடர்புகொண்டு, தான் நினைத்ததைச் சொல்லும் சக்திகருணாநிதிக்கு இருந்தது. அப்போதெல்லாம் கேளாக் காதினராய், பாராக் கண்ணுடையவராய் இருந்துவிட்டு, 'என்னது... சிவாஜி செத்துட்டாரா?’ என்று மறதி நாயகன் கேட்பதுபோல, இப்போது 'ஈழத்தில் எவ்வளவு அவலம் பார்த்தாயா உடன்பிறப்பே!’ என்று கேட்பது சினிமாவுக்கு வேண்டுமானால் சிரிப்பைத் தரலாம். அரசியலில் இதற்குப் பெயர் துரோகம்... பச்சைத் துரோகம்! முதலமைச்சராக இருக்கும்போது ஒரு பேச்சு, எதிர்க் கட்சி ஆனதும் மறுபேச்சு. நரம்பு இல்லாத நாக்கு எப்படி வேண்டு மானாலும் வளையும் என்பார் கள். ஆனால்,இப்படியெல்லாம் வளைய முடியுமா என்று கருணாநிதியின் அறிக்கை களைப் பார்த்து அதிர்ச்சியடை யத்தான் வேண்டும். கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக கருணாநிதி எதையெல்லாம் சொல்லிவந்தாரோ, அதை எல்லாம் கடந்த இரண்டு, மூன்று வாரங்களாக உல்டா அடிக்க ஆரம்பித்திருக்கிறார். ''இலங்கையை சர்வாதிகாரப் பாதையில் செலுத்திக்கொண்டு இருக்கும் ராஜபக்ஷேவை, மனித உரிமைகள், மனிதநேயம்ஆகியவற்றுக்கு எதிராகப் பல்வேறு வகையான போர்க் குற்றங்களைப் புரிந்த சர்வதேசக் குற்றவாளி என உலக நாடுகள் பார்க்கின்றன. அவர் இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்று கேட்கும் அளவுக்குப் பேசி இருக்கிறார். சிங்களப் பேரினவாதத்தின் சின்னம் ராஜபக்ஷே. நமது இந்தியப் பேரரசு தற்போதாவது விழித்துக்கொண்டு ராஜபக்ஷே வின் சுய உருவத்தையும், குணத்தையும்,நோக்கத்தையும் புரிந்துகொள்ள வேண்டும்'' என்று இப்போது அறிக்கைவிட்ட கருணாநிதிதான் தமிழ்நாடு சட்டசபையில்'முதல்வராக’ இருந்தபோது, ''நாம் தமிழர்களைக் காப்பாற்ற அவர்களுடைய வாழ்வாதாரத்தை வளமாக்கப்பாடுபடப்போகிறோமா? அல்லது ராஜபக்ஷேவை குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தப்போகிறோமா? வாழ்வா தாரத்தைப் பெருக்க வேண்டுமானால், இன்றைக்கு இருக்கிற சிங்கள அரசின் மூலமாகத்தான் அதைச் செய்ய முடியும். அங்கே இருக்கிற தமிழர்களுக்கு நன்மை செய்ய வேண்டுமானால், நாம் இங்கே ஆத்திரப்பட்டோ அல்லதுவெறுப்பு உணர்வுடனோ அங்குள்ள சிங்கள இனத்தினரைப் பற்றி ஒன்றைச் சொல்லி, அது வேறு விதமான விளைவுகளை உண்டாக்கினால் நல்லதல்ல. இலங்கையிலே உள்ள தமிழனைக் காப்பாற்ற வேண்டுமானால், சிங்களவர்கள் கோபத்தை அதிகமாக ஆக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எதிலும் ஒரு நீக்குப்போக்கு வேண்டும்'' என்று சொல்லிச் சமாளித்தவர். லட்சக்கணக்கான தமிழர்கள் கொத்துக் கொத்தாகக் கொலை செய்யப்பட்டது மே மாதம் 17-ம் தேதி. கருணாநிதி இப்படிச்சொன்னது ஜூலை 1. லட்சம் பேர் செத்ததைப் பார்த்து ஆத்திரம் வரவில்லை. அனுதாபம் கூட வரவில்லை.'கோபப்படாதே’ என்று ஈழ தாகத்தின் வேரில் வெந்நீர்ஊற்றினார். அதற்கு ஒரே காரணம்தான். அதையும் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்குக் கொடுத்த பேட்டியில் அவர் ஒப்புக்கொண்டார். 'இலங்கைப் பிரச்னையில் மத்தியஅரசின் நிலைக்கு மாறாக நடந்திருந்தால், என் ஆட்சியையே இழக்க வேண்டி வந்திருக்கும்’ என்பது பட்டவர்த் தனமான அவரது வாக்குமூலம். ''பதவி என்தோளில் கிடக்கும் துண்டு, கொள்கைதான் வேட்டி'' என்று பேசியது எல்லாம் ஊருக்குத்தானோ?! ''இலங்கை அரசு அறிவித்த போர் நிறுத்தத்தை உண்மைஎன்று நானும் நம்பி, இந்திய அரசும் அதை நம்பி எனக்குத் தெரிவித்ததால், உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றேன்'' என்று புதுக்கதை விட ஆரம்பித்துள்ளார்கருணாநிதி. அவரை இத்தனை சுலபமாக ஏமாற்ற முடியும் என்பதை அவரது எதிரிகளும் ஏற்க மாட்டார்கள். அவர் அப்போதும் இப்போதும் தமிழ்நாட்டு மக்களைஏமாற்றுகிறார் என்பதே உண்மை. 'போரை நிறுத்திவிட்டோம்’ என்று ராஜபக்ஷே சொன்னதை,ப.சிதம்பரம் நம்பலாம். ப.சி. சொன்னதை மு.க-வும் நம்பலாம். தவறில்லை. ''அன்றைய தினம்தான் எட்டு இடங்களில் கொத்துக் குண்டுகளைப் போட் டார்கள்'' என்று விடுதலைப் புலிகளின் அரசியல் பொறுப் பாளர் நடேசன்,பி.பி.சி. வானொலியில் அன்று இரவே கதறினாரே... அப்போது கருணாநிதி அளித்த பதில் என்ன?கருணாநிதியின் அறிவிப்பைப் பார்த்துதான் 'பாதுகாப்பானஇடத்துக்கு’ அப்பாவி மக்கள் இடம்பெயர்ந்தார்கள். அந்த இடத்தில் குண்டுகள் போடப்பட்டு கொலைகள் நடந்தன. கருணாநிதி சொன்னதை நம்பியதால் தமிழர்கள்உயிரைவிட்டார்கள். ஆனால், இப்போது கருணாநிதி அறிக்கைவிட்டு ஊதுபத்தி ஏற்றுகிறார். ''நீங்கள் போர் நிறுத்தம் செய்துவிட்டதாகச் சொல்லிஉண்ணாவிரத்தத்தை முடித்துவிட்டீர்கள். ஆனால்,அன்றைய தினம்கூட குண்டுபோட்டுள்ளார்களே?'' என்று மனசாட்சி உள்ள ஒரு பத்திரிகையாளன் கேட்டபோது, ''மழைவிட்டும் தூவானம் தொடர்வது வழக்கம்தான். இதைப் போலத்தான் இலங்கையிலே இப்போதும் தொடரும் விமானத் தாக்குதல்களைக் கருத வேண்டும்'' என்று கருணாநிதி சொன்ன வாசகம், மிகக் கொடூரமான சினிமா வில்லன்கள் கூடப் பேசாத வசனம். உரிமை மனோபாவம் கொண்டவன் உடலில் உடைகூட இருக்கக் கூடாது என்றுநிர்வாணப்படுத்திக் கண்ணைக் கட்டி சிட்டுக்குருவிகளைப் போல சுட்டுக் கொன்ற காட்சிகளைப் போர் முடிந்த நான்காவது மாதம் சேனல் 4 வெளிப்படுத்தியது. 'கொன்றுவிட்டார்கள்... கொடுமைப்படுத்தினார்கள்... சித்ரவதை செய்தார்கள்’என்று அதுவரை சொல்லிக் கொண்டுதான் இருந்தார்கள். முதன்முதலாக அந்த வீடியோ காட்சிகள், அம்பலப்படுத்தி அதிரவைத்தன. அப்போதும் 'முதல்வர்’ கருணாநிதி, ''இந்தக் காட்சிகள் பழையவை. இப்போது எடுக்கப்பட்டவை அல்ல''என்று எல்லாம் தெரிந்தவராகச் சொன்னார். ராஜ பக்ஷேவின் கண்துடைப்பு நாடகத்தில் தானும் ஒரு பாத்திர மாகப் பங்கேற்கும் வகையில் 10 பேரை அனுப்பிவைத்தார் கருணாநிதி. அவர்களை சென்னை விமான நிலையத்தில் வரவேற்கும் தினத்திலும், ''போரின்போதுதான் சித்ரவதை கள் நடந்தன. இப்போது அல்ல. இப்போது தமிழர்கள் யாரும் கடத்திச் செல்லப்படுவது இல்லை'' என்றார். அதாவது,இலங்கை அரசாங்கத்தை, ராஜபக்ஷேவைக் குற்றம்சாட்டி யார் கேள்வி கேட்டாலும் கருணாநிதிக்குச் சுருக்கென்றது. அதனால்தான் ராஜபக்ஷேவும் மன்மோகனும் பதில் சொல்ல வேண்டிய கேள்விகளுக்கு எல்லாம் கருணா நிதியே வலியப் போய் பதில் சொன்னார். இந்த அதீத ஆர்வத்துக்கு ஒரு பின்னணி இருந்தது. இலங்கையில் நடந்த அனைத்தும் அவருக்கு முன்கூட்டியே சொல்லப்பட்டன. ''இறுதிப் போர் நடந்த காலகட்டத்தில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே அதிகாரப்பூர்வமற்ற முறையில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஒரு குழுவை அமைத்தோம். எங்கள் நாட்டின் சார்பில் நானும் பசில் ராஜபக்ஷே, லலித் வீரதுங்க ஆகிய மூவரும்இடம்பெற்றோம். இந்தியாவின் சார்பில் எம்.கே.நாராயணன்,சிவசங்கர்மேனன், விஜய்சிங் ஆகிய மூவரும் இருந்தார்கள்''என்று கோத்த பய ராஜபக்ஷே சொன்னார். போர் நடந்த காலகட்டத்தில் கருணாநிதியை எம்.கே.நாராயணன் எத்தனையோ தடவை சந்தித்தார். இலங்கை போய்விட்டு இங்கே வருவார். அல்லது கருணாநிதியைப் பார்த்துவிட்டு அங்கே போவார். போரை வழி நடத்திய ஒருவர் தன்னை அடிக்கடி வந்து சந்திக்கிறாரே என்று அப்போதாவது கருணாநிதிக்குக் குற்றவுணர்ச்சி வந்திருக்க வேண்டும்.'போர் நிறுத்தம் செய்வதற்கு இந்தியா முயற்சிக்காவிட்டால், உங்களுக்குத் தரும் ஆதரவை வாபஸ் பெறுவேன்’ என்று மானஸ்தர் சொல்லி இருக்க வேண்டும். ''போர் நிறுத்தம் செய்யச் சொல்வது எங்களது வேலை அல்ல'' என்று கருணாநிதி வீட்டு வாசலில் நின்றுகொண்டு அன்றைய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி சொன்னபோதாவது, கருணாநிதிக்கு ஆத்திரம் வந்திருக்க வேண்டும். ''அங்கே போர் முடிவுக்கு வரப்போகிறது'' என்று சந்தோஷ அறிவிப்பை நாடாளுமன்றத்தில் பிரணாப் வெளியிட்டபோதாவது, கோபம் வந்திருக்க வேண்டும்.''ராஜபக்ஷே என்ன முடிவெடுத்தாலும் இந்தியா வழக்கம்போல ஆதரிக்கும். இந்தியாவின் போரை நாங்கள் நடத்தினோம் என்று ராஜபக்ஷே சொன்னது ஒருவகையில் சரியானதுதான்'' என்று சிவசங்கர் மேனன் சொன்னபோதாவது, அவமானம் வந்திருக்க வேண்டும். இத்தனை கழுத்தறுப்புகளையும் மறைப்பதற்கு டெசோ ஷோவை கருணாநிதி இப்போது ஆரம்பிக்கிறார். போர் உச்சகட்டத்தில் இருந்த போது, ''முதல்வர் கருணாநிதி யின் உயிருக்கு விடுதலைப் புலிகளால் ஆபத்து'' என்று சென்னை போலீஸ் கமிஷனரை வைத்து அறிக்கை விடவைத்து, முத்துக்குமார் உள்ளிட்ட 17 தமிழ்த் தியாகிகள் தங்களது தேகங்களை ஈழத் தாய்க்கு அர்ப்பணித்தபோது வேடிக்கை பார்த்ததுடன், ''அவர்கள் ஈழத் தமிழர்களுக்காகத் தீக்குளிக்கவில்லை... பொண்டாட்டியிடம் தகராறு. அதனால் தீக்குளித்தனர்'' என்று கொச்சைப்படுத்தும் காரியத்தை போலீஸ்காரர்களை வைத்து முடுக்கிவிட்டு, தமிழ்நாடு ஒரே உணர்வில் இருக்கிறது என்பதைக் காட்ட கடையடைப்பு நடத்தப்பட்டபோது, ''இது சட்டப்படி குற்றம். கடையை அடைக்கச் சொன்னால் தேசப் பாதுகாப்புச் சட்டப்படி கைது செய்வோம்'' என்று மிரட்டல் விடுத்து, பிரபாகரன் படத்தைப் பார்த்தாலே கிழிக்கும் வேலையை போலீஸாருக்குக்கொடுத்து... இப்படிச் செய்த அனைத்துப் பாவங்களுக்கும் இப்போது பரிகாரம் தேட நினைக்கிறார் கருணாநிதி. சென்னையில் இருந்த இலங் கைத் தூதரக வட்டாரத்துக்கும் அன்றைய தி.மு.க. ஆட்சியின் போலீஸ் உளவுத் துறைக் கும் இருந்த பிரிக்க முடியாத பாசத்தை கருணாநிதி உணரத் தவறியதன் விளைவுதான், இன்று நித்தமும் உடன்பிறப்பு களுக்குக் கடிதம் எழுதியாக வேண்டிய அவஸ்தையைக்கொடுக்கிறது. உயிரோடு வந்த பாட்டி பார்வதியை, அநாதை யாக வானத்தில் திருப்பி அனுப்பிய சோகத்தை பேரன் பாலச்சந்திரன் படம் பார்த்து அறிக்கை வெளியிட்டுப் போக்கியாக வேண்டியிருக் கிறது. ''பாவிகளின் கொலை வெறிக்குப் பலியான பாலகன் பாலச்சந்திரன்'' என்று இன்று கண்ணீர்க் கவிதை வடிப்பவர், ''விடுதலைப் புலிகள் கல்லறை கள் கட்டுவதில் காலம் கழித்து விட்டார்கள்''என்று கிண்டல் அடித்ததும், ''இன்று அனைவரும் ஒன்று சேர்ந்து போராடுவோம்'' என்பவர், அன்று, ''ஈழ ஆதரவாளர்கள் அனைவரும் கடல் வழியாகப் போய் போராட வேண்டியதுதானே. நான் கரையில் இருந்து கண்டுகளிப்பேன்'' என்று வயிற்றெரிச் சலைக் கொட்டியதும் தமிழன் மறக்கக் கூடாத வாக்குமூலங்கள். ஊழல் வழக்கில் ஏ.சி முருகேசன் தன் கையைப் பிடித்துத் தூக்கியதால் ஏற்பட்ட சிவப்புக் காய்ப்பை 100 வீடியோ கேமராக்களுக்கு முன்னால் காட்ட வேண்டுமானால்,பாளையங்கோட்டை சிறையில் பல்லி ஓடியதையே 50ஆண்டுகள் சொல்ல முடியுமானால், வளரும் கருவை வயிற்றில் இருந்து எடுத்துப் பொசுக்கிய காட்டுமிராண்டிக்கூட்டத்தைப் பற்றி இன்னும் எத்தனை ஆண்டுகள் சொல்லித் தொலைத்தாலும் ஆத்திரம் அடங்காது. அந்த சோகத்தில்கூட அரசியல் செய்ய நினைப்பது, அந்தக் கொடூரத்தை விடக் கொடூரமானது. காங்கிரஸை மிரட்டுவதற்கு, அல்லது காங்கிரஸ் தங்களைவிரட்டிவிட்டால் ஈழ ஆதரவுக் கட்சிகளைக்கொண்ட கூட்டணி அமைப்பதற்கு, அதுவும் இல்லா விட்டால் ஈழப் பிரச்னையை எதிர் அணியினர் பயன்படுத்தாமல்இருப்பதற்கு... என்று சாவு வீட்டிலும் லாபநஷ்டங்களுக்கு,கடல் தாண்டிய சொந்தங்களின் சோகத்தை முதலீடு ஆக்குவது ஆபத்தானது. தன்னுடைய கடந்த காலத்தவறுகளை மறைக்க இன்றைக்கு கருணாநிதிக்குத் தேவை முகமூடி. ஏற்கெனவே வீரமணி, திருமாவளவன் ஆகிய இருவரும் சிக்கிவிட்டார்கள். பெரியாரைக்காப்பாற்றுவதைவிட, அம்பேத்கர் புகழைப் பரப்புவதைவிட இவர்களுக்கு கருணாநிதியை நியாயப்படுத்துவதே முழு நேரத் தொழிலாக மாறிவிட்டது. ''ஓட்டுக்காக எவனும் எதையும் செய்வான். யார் காலையும் நக்குவான். இதற்குயாரும் விதிவிலக்கு இல்லை!'' என்று தந்தை பெரியார் சொன்னார். அதற்காக, ஈழத் தமிழர் பிணங்களைமா? நன்றி: ஆனந்த விகடன்

Wednesday, March 6, 2013

ஏன் பிறந்தாய் தோழி?


ஏன் பிறந்தாய் தோழி? அழகான குடும்பம்..அளவான நட்புவட்டம்.. எழில்மிகு தோற்றம்..பன்முக திறமை மாற்றம்.. எழுச்சியுறும் எண்ணம்..மனத் திண்ணம்.. தன்னபிக்கைத் தந்த படிப்பு..பெற்றோரின் கனவினை நனவாக்கிய துடிப்பு. என எல்லாம் கொண்டிருந்தாயே..! கனவுகள் முழுமையாக பலிக்கும் முன் காலன் பறித்தவளே! உன் மரணம் வெறும் மரணமாக மட்டுமிருந்தால் இன்று இப்பதிப்பு தேவையில்லை.. வேதியியல் ஆசிரியர் திட்டி திட்டி சொல்லித் தந்தபோதும் புரியாத அமில கார வேறுபாடு உன்னால் புரிந்தது! தீபாவளிக்கு வெடித்த பட்டாசுகளின் வீரியம் காய்ந்து பண்டிகைச்சுவை போகும் முன் உன் உடலில் அமிலச்சுவையை அணுஅணுவாய் ஏற்றாய்... காதலின் பெருமை புரியா கயவனின் வெறியில் மண்ணில் கரைந்தவளே!! நேர்கொண்ட உன் பார்வை அமிலச் சாற்றில் அழிந்தது! கவிதை பாடிய உன் குரல் தீய்ந்த தீயில் குலைந்தது! கட்டான உன் உடல் கருவிஷத்தில் உடைந்தது! சிதைந்தது உன் முகமும் மாரும் மட்டுமல்ல இப்பொய்ச் சமுதாயத்தின் முகமுடியும் தான்! சாம்பலாகப் போனது உன் உடல் மட்டுமே! உன் குரலே இப்பாதகத்தின் சாட்சி! கசங்கிய பூவாய் ரத்த நாளங்களும் நசிந்து, குருதியும் குறைந்து,உணவும் மறுத்து, தூக்கம் மறந்த நீ வடித்த கண்ணீரிலும் வலி சுமந்தாய்!! நீ முனங்கிய முணகல்களிலும்,கொப்பளித்த கொப்புளங்களிலும் உன் மரண சாசனம் என்றும் அழியாவண்ணம் எழுதிவிட்டாய்.. ஒட்டு மொத்த பெண்குலத்தின் குரலானாய்... உன் மரணத்தினை தடுக்கவியலாத எங்களுக்கு உன் இறப்பினையே பாடமாக்கினாய்! ஆனாலும் சில மரணங்கள் மட்டுமே உயிரை உலுக்கும் முத்துக்குமார்களைப் போல...செங்கொடிகளைப் போல.... பாலகுமாரன்களைப் போல...... அவர்களின் வரிசையில் நீயும் உன் தடம் பதித்தாயோ? பெண்சமூக விழிப்புக்கு விதை விதைத்தாயோ? மரணத்தினை கையில் வைத்திருந்த நொடியிலும் உன் மனவலிமையினை ரசிக்க வைத்தாய்..பொட்டிலடித்தாற் போல புரிய வைத்தாய்! மரண விளிம்பில் நீ பட்ட வலி ஒவ்வொன்றும் சமூகத்திற்களித்த சாபம்........ ஆனால் உலுக்கிய உன் மரணத்தினையும் சில நாட்கள் தலைப்புச் செய்தியாக கடந்து விடும் இப்பாழான சமுதாயத்தில் ஏன் பிறந்தாயடி தோழி..பின் ஏன் இறந்தாயடி தோழி...!!!!!!!!!?!!!!

Monday, January 28, 2013

பதிவுலகம் ஒரு பார்வை....எங்கே செல்லும் இந்த பாதை


"""கூகுளில் 6,94,445 தேடல்கள்,ப்ளிக்கரில் 6600 புகைப்படங்கள்,யூடியூப்பில் 600 வீடியோக்கள்,பேஸ்புக்கில் 6,95,000 ஸ்டேடஸ்கள்,79,364 வால் போஸ்ட்கள், 510,040 கமெண்ட்கள், 1,68,000,000 மெயில்கள்,70புதிய டொமைன்கள்,ட்விட்டரில் 98,000 ட்விட்கள்,லிங்க்ட்இன்-ல் 100புது அக்கவுண்ட்கள்,ஸ்கைப்பில் 3,70,000 கால்கள்...................."""" இவையெல்லாம் என்னவென்று யோசிக்க வேண்டாம்.இணையம் என்னும் மாயவெளியில் ஒரு நொடியில் நிகழும் நிகழ்வுகளே இவை.. இப்படி நாளொரு மேனியும்,பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வரும் இணைய சமுத்திரத்தில்,கல் தோன்றி மண் தோன்றா காலத்தே தோன்றிய மூத்தக்குடியினர் நாங்கள் என்று மார்தட்டும் நம் செம்மொழி கணினி தமிழர்கள் என்னவெல்லாம் செய்கின்றனர் என்பதைப் பற்றிய ஒரு ஜாலி ஆய்வே இது...
கூகுளில் "தமிழ்" என்று டைப்பினாலே ஏதேனும் ஒரு வலைப்பதிவிற்குள் தான் செல்கின்றது,அப்படிப்பட்ட நிலையில் அவை எத்தகு தரத்துடன் இருக்க வேண்டும்,ஆனால் அதற்கான பொறுப்புகள் எதுவுமின்றி பிரபலமாக வேண்டும் என்ற ஒரே வெறியுடன் எழுதி தள்ளி வருகின்றனர்.. தமிழில் ஓரளவேனும் தீவிரமான விஷயங்களை வெளியிடும் இணையதளங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம் "ப்ளாக்குகள்" எனப்படும் வலைப்பதிவுலகம் நமக்கு மிகப்பெரும் வரப்பிரசாதம் எனலாம்.. முன்பெல்லாம் எழுத்தாளர் ஆகும் ஆசையில்,ஒரு முறையேனும் தம் பெயர் ஏதேனும் இதழில் வராதாவென,50பைசாவிற்கு போஸ்ட் கார்டு வாங்கி,தம் மனதில் பட்டதைக் கதை,கவிதை என்ற பெயரில் எழுதி,அனைத்து பத்திரிக்கைகளுக்கும் அனுப்பி,அவற்றில் எதும் பிரசுரமாகாமல் திரும்பி வந்தாலும் தளராது மீண்டும் அனுப்பி,எதுமே அச்சேறாமல் இருக்க, எப்பமாவது ஒரு முறை வாசகர் கடித பகுதியில் தம் பெயர் வந்ததே தம் வாழ்நாள் சாதனையாக ஊர் முழுதும் காட்டி மகிழும் நம்மவருக்கு, தமக்குத் தோன்றியதை எழுதும் இடமும், நினைத்ததை விமர்சிக்கும் தருணமும்,தமது சுயவிளம்பரத்தோடு வெளிபடுத்தும் அலாவுதீன் விளக்காக ""வலைப்பதிவுலகம்""" கிடைத்தது.ஆனால் தமிழ் கூறும் நல்லுலகம் இதனை பயன்படுத்தி காட்டும் அட்ராசிட்டிக்கு ஒரு எல்லை என்பதே இல்லை.. நீங்கள் பிரபல பதிவராக உங்களிடம் ஒரு இணைய வசதியுடன் கூடிய கணினியும்,கொஞ்சம் ஜனரஞ்சகமாக எழுதவும்,மொக்கை போடவும் தெரிந்தாலே போதும்.இதில் பிரபல பதிவர், நம்பர் 1 பதிவர் என்று தமக்கு தாமே பட்டங்கள் வேறு.. இலங்கைப் பிரச்சனையினைப் பற்றிய ஒரு கட்டுரையும்,தமிழக மீனவர்கள் பற்றிய ஒரு கட்டுரை ஆய்வினையும் எங்காவது படித்து தொலைந்து,அதை பற்றி அரைகுறையாக பதிவிட்டால் அவர்தான் "சமூக பதிவர்".. "அமுங்கி போன அன்னா ஹசாரே,ஆர்ப்பரிக்கும் அரவிந்த் கெஜ்ரிவால், ஆளப் போவது யார்?", அழகிரியின் அடுத்த அதிரடியும் கனிமொழியின் கலங்களும்","2016 இல் பா.ம.கா இருக்குமா?" என்று போகிற போக்கில் தலைப்புகளில் தாழித்து விட்டு பத்திரிக்கைச் செய்திகளை கலந்து கட்டி அடித்து விட்டால் அவர்தான் "அரசியல் பதிவர்"... பர்மா பஜாரில் கிடைக்கும் உலகப்பட டிவிடிக்களை சப் டைட்டிலோடு வாங்கிட்டு வந்து,ஞாயிற்றுக்கிழமை மதிய வேளையில் தூக்கம் வர வேண்டுமென்பதற்காக அதைப் போட்டுப் பார்த்துவிட்டு,பாதியிலேயே தூங்கிவிட்டு,பின் அதனைப் பற்றி விமர்சிக்கின்றேன் என்னும் பெயரில் விக்கிபீடியாவில் கதையை முழுவதும் படித்து,அங்கிருந்து கொஞ்சம் இங்கிருந்து கொஞ்சம் என காப்பி பேஸ்ட் செய்து,உலக சினிமா,பார்க்க வேண்டிய படம்,தமிழ் ல எடுக்கரதெல்லாம் படமா?னு ஒரு கேள்வியைக் கேட்டு, எந்த படம் மக்களால் அதிகம எதிர்பார்க்கப்படுதோ அது எந்த இங்க்லீஷ் படத்தோட அப்பட்டமான காப்பின்னு,4 ஸ்டில்ஸ் ஒட போட்டு,காப்பி டைரக்டர்ஸ்னு ஒரு லிஸ்ட் போட்டு எல்லாரயும் அடிச்சு,துவைச்சு, லாஜிக் இல்லை,மேக்கிங் இல்ல,லைட்டிங் போகஸிங் இல்ல, என எக்ஸ்ட்ரா பிட்டுகளைப் போட்டு கலந்து கட்டி எழுதினா அவர் சினிமா பதிவர்.
. நாலு வரியில ஒரு உரைநடைய எழுதிட்டு,கொஞ்சம் புரியாத வார்த்தையப் போட்டு தாளிச்சு கவிதைன்னு எழுதினா அவர் கவிதை பதிவர், இது தவிர ஜோக்குன்ற பேருல கோபம் வர மாதிரி காமெடி பண்ற காமெடி பதிவர்கள்,பெண்களுக்காக மட்டுமே ஆண்கள் ப்ராகிபிட்டெட் என்று ஆவக்காய் ஊறுகாய் அவியாமல் போடுவது எப்படி,ஆமை முட்டை சாப்பிட்டால் பெண்களுக்கு ஆஸ்த்துமா வராதா?,எந்த சீரியலில் மாமியார் நல்லவர்? என்று கொலையாய் கொல்லும் பெண்ணிய பதிவர்கள், சிறுகதை என்னும் பெயரில் ஆரம்பித்து முடியாத தொடர்கதையாய் நீளும் கதைகளை மட்டுமே எழுதும் கதைப் பதிவர்கள், 12ராசிகளுக்கும் பங்குனி மாத பலன்கள்,வைரக்கல் மோதிர வாங்கலாமா?,வாஸ்த்து, யோக பலன்,கோவில் பரிகாரங்கள் என ஜல்லியடிக்கும் ஜோசிய பதிவர்கள், இன்னா நடந்தா இன்ன நைனா நான் மொக்க மட்டும் தான் போடுவேன்னு மண்டை காய வைக்கும் மொக்கை பதிவர்கள், ராம் என்று பெயரை வைத்துக் கொண்டு,இந்தியாவைப் பற்றி பேசினால் கூட இவன் இந்துத்வாவாதி,பார்பனியன் என்றும், கமெண்ட்டுகளைப் போட்டும்,மதம் சார்ந்த பதிவிடும் மதவாதி பதிவர், இப்படி பலதரப்பட்ட வகைகளில் இருக்கும் பதிவர்களைக் கிண்டலடிப்பதையே தொழிலாக கொண்டு,பிரபல பதிவர்கள் எனப்படுபவர்களை "ஸ்பூப்" செய்யும் ஸ்பூப் பதிவர்கள், இவர்கள் எல்லாவற்றிற்கும் மேலாக அனைத்து பதிவுகளிலும் போய் கமெண்ட் போடுவதை,எதிர்வினை மட்டுமே செய்யும் "கமெண்ட் பதிவர்கள்"..மற்றும் பெயரே இல்லாமல் உலவும் அனானிகள் என இவர்களின் பட்டியல் நீள்கின்றது.. ஆரம்ப கட்ட காமெடியே இவர்களின் ப்ளாக்குகளின் தலைப்புகளில் தான் தொடங்குகின்றது,தலைப்பு ஒன்னு சும்மா பார்க்கும் போதே பத்திக்கர மாதிரி(எகா:பாட்டாசு பாலு,தீவெட்டி தீரன், கற்பூர கண்ணா) இருக்கனும்இல்ல பார்க்கும்போதே ஜிவ்வுனு கவர்ந்து இழுக்கர மாதிரி(எகா: காந்தகண்ணழகி காந்தா, சொக்க வைக்கும் சொர்னாக்கா)இருக்கனும்அதுவும் இல்லேனா பார்க்கும் போதெ குப்புனு சிரிப்பு வர மாதிரி(எகா:ஆத்தா நான் பாஸ் ஆயிட்டேன், வாவ் சட்டை மேலே எவலோ பட்டன்ஸ்)இருக்கனும்இதே மாதிரி தான் பதிவுகளுக்கு தலைப்பு வைக்கும் போதும் கவரனும். பின்ன படிக்கற நாலு பேருக்கு நாற்பது பேரு எழுதினா அவங்கள மசாலா போட்டு இழுத்தா தானே முடியும்..அப்ப தானே ஹிட்ஸ் விழும்,ரேங்கிங் நம்பர் ஒன் ஆகலாம்.பிரபல பதிவர் ஆகனும்னா இங்க ரெம்ப ஈஸி,இருக்கரதுல யாரோடது நம்பர் ஒன்ல இருக்கோ அங்க போய் அவங்க போடற பதிவுக்கெல்லாம் எதிர்த்து கமெண்ட் பண்ணனும். அந்த பிரபல பதிவரோட பதிவுகளைப் படிக்க வரவங்க இவரையே எதிர்த்துட்டானே யாருடா இவன்னு ப்ரொபைல பார்த்து அந்த ப்ளாக்கு போவாங்க..அப்பறமென்ன பேஜ் ஹிட்ஸ் கிடைக்கும்.வாரத்தில எப்டியும் 20பதிவு போட்றனும்,அதில 4சினிமா விமர்சனம்,2எங்கயாவது ஓசியா சாப்பிட்ட சாப்பாட்ட பற்றி,3 நம்மளப் பத்தின சுயவிளம்பரம்,2தமிழ்நாட்டில நிலவற மின்வெட்டு பத்தி,2கதை,கவிதை,3பயணத்தொடர்களைப் பற்றி,2சின்னத்திரை பதிவு,3 நடப்பில ஹாட்டா இருக்கற பற்றிய கருத்துக்கள்,2 கில்மா மேட்டர்ஸ்,2காப்பி பேஸ்ட்.... இது போதும்...அப்பறமென்ன ஆட்ப்ளை,ஆட்சென்ஸ்,மத்த விளம்பரங்களை போட்டு காசும் பார்களாம்.
உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா இப்பவே கண்ண கட்டுதே போதும் டா சாமின்னு பேஸ்புக் பக்கம் நுழைந்தா அங்க அதுக்கும் மேல. நாலாங்க்ளாஸ் படிக்காதவன் லாம் நாசா ல வேலை பாக்கறேன்னு ப்ரொபைல் வைச்சுகிட்டு,எங்கயாவது ஆத்துமேட்டு பக்கம் போய் மரத்தடில நின்னு போட்டோ எடுத்துட்டு "இட்ஸ் மை கூல் ஸ்னாப் அட் மை ட்ரெக்கிங்"னு குடுக்கற அலம்பல பாக்காம எஸகேப் ஆகிடலாம்டான்னு ஒடினாலும்,tag ஆப்சன்ல நம்மல கோர்த்து விட்டு மரண பயத்த காட்டிருவாய்ங்க, அதில இருந்து தப்பிச்சா "அகில உலக அப்பாடக்கர் தலைவர் பாசறை" ல ஆரம்பிச்சு " நடிப்பு வராத நடிகரை நாயை விட்டு ஒழிப்போர் சஙகம்" வரைக்கும் க்ரூப் ஆரம்பிச்சு நம்மள நாசூக்கா சேர்க்க ஒரு கூட்டம், மின்வெட்டுக்கு மாற்று எரிபொருளா ஆமணக்கிலிருந்து பவர் எடுக்கலாம்னு அறிவாளியா ஒருத்தன் ஸ்டேடஸ் போட்டா அதற்கு ஏண்டா மொக்கை போடற?அன்லைக் பட்டன் இல்லையா மச்சினு கமெண்ட் பண்ணீட்டு,மாற்றான்ல காஜல் அகர்வால்க்கு கண்ணழகா?கன்னமழகா?னு ஸ்டேடஸ் போட்டா ஒரு பத்தியே கமெண்ட் பண்ற ஒரு கூட்டம்,தினமும் கண்ணில தண்ணி வரவைக்கற ஒரு போட்டோவை போட்டோஷாப்ல எடிட் பண்ணி எப்பூடின்னு கேக்கற ஒரு கூட்டம், கருத்து சொல்றேன்னு சமுதாயத்தை சாக்கடைன்னு ஆரம்பிச்சு 10வரியில அலற வைக்கற ஒரு கூட்டம், இன்னைக்கு முதல் தடவயா தோசை சுட்டேன்,முதல் தடவையா கண்மை இல்லாம காலேஜ்க்கு போனேன்னு சீன் கிரியேட் பண்ற பெண்கள் கூட்டம், காதலியால் கைவிடபட்டவர்கள் கவனத்திற்க்கு என்று காதல் தோல்வி பீலிங்ஸ்-யை அடிடா அவளன்னு போஸ்ட் போட்டு படுத்தும் மாடர்ன் தேவதாஸ்கள் ஒரு பக்கம், ரிலீஸ் ஆகும் தேதியன்று மார்னிங் ஷோவில் போய் படத்தைப் பார்த்து தொலைந்து விட்டு,படம் பர்ஸ்ட் சீனில் ஹீரோ என்ட்ரியில் ஆரம்பித்து கிளைமாக்ஸ் டைட்டில் கார்டு ஒடும் வரை வரிக்கு வரி ஸ்டேடஸ் தட்டிவிட்டு,முடிவாக படம் மொக்க யாரும் போய்டாதீங்க என்று தயாரிப்பாளரின் தலையில் முதல் நாளே துண்டினை போடும் கூட்டம் ஒரு பக்கம், இன்டர்னல் எக்ஸாம்ல எதுக்குமே ஆன்ஸர் தெரியலேனா இந்த ரியாக்ஸன்,அப்பா அசிங்கமா திட்டும் போது இந்த ரியாக்ஸன் என்று வடிவேலு,சந்தானம் வகையறாக்களின் காமெடி எக்ஸ்பிரசன்களை கலந்து கட்டி ஷோவாக்கும் ஒரு கூட்டம்,இப்படி எக்கசக்க அலப்பறைஸ்..இப்படி, சினிமா அரட்டைகள், கிசுகிசுக்கள், வம்புச்சண்டைகள்,பேன்பேஜ்கள்,ஈவென்ட்கள்,க்ரூப்கள்,லைக்குகள்,ஷேர்கள்,கமெண்ட்கள் என மானாவாரியாக கொட்டிகிடக்கின்றன இந்த பேஸ்புக் சுவற்றில்.ஆக பேஸ்புக்கில் இந்த எதிர்கால தமிழ் சமுதாயத்திடம் அடிபடுவது பவர்ஸ்டாரும்,சாம் ஆண்டெர்ஸனும்,மதுரை ஆதீனமும், நித்தியானந்தாவும் மட்டுமே அல்ல நம் தமிழும்,பண்பாடும் தான் என நொந்து கொண்டே ட்விட்டெர் பக்கம் பார்வை வீசினால்,
அங்கு அதற்கு மேல், விகடன் வலைபாயுதேவில் வர வேண்டும் என்பத்ற்காகவே எழுதும் சிலர்,பாத்ரூம் போனால் கூட அதை ட்வீட்டும் பலர்,"சப்பாத்தினா லேசா இருக்கும்,பூரின்னா உப்பியிருக்கும்###அவதானிப்பு" என்று போகிற போக்கில் உலகமகா தத்துவத்தினை போடும் இறுமாப்பு,அதனையும் ரிட்வீட் செய்யும் பாலோயர்கள், நடிச்சா ஹீரோ தான் என்ற வசனங்கள்,உப்பு பெறாத சண்டைகள், உதவாத வாதங்கள்,சர்ச்சைகள் என புது உலகில் பயணித்துக் கொண்டுள்ளனர். முடியல என்று வீடியோ சைட்டுகளான யூடியூப் பக்கம் சென்றால், பல்லில் படுமாறு ப்ரஷ் செய்வது எப்படி, பிகரிடம் அடி வாங்காமல் சைட் அடிப்பது எப்படி என்பது போன்ற ஹெள ட்டூ ட்டு? வகை விடியோக்களும்,4க்கு 4 ரூமிற்குள் எடுக்கப்பட்டு தமிழின் சிறந்த திகில் குறும்படம் என்ற வகை விடியோக்களும், கொலவெறி ஸ்டைலில் ரெகார்டிங் ரூமில் வேண்டுமென்றே எடுக்கப்பட்ட இயல்பான வகை விடியோக்களும், காப்பி இசையமைப்பாளார்கள்,இயக்குனர்கள் என காப்பியவதிகளை கலங்கடிக்கும் வகை விடியோக்களும், டீவியில் பார்ப்பது போதாது என்று சீரியல்,டீவி நிகழ்ச்சிக்கள் வகை விடியோக்களும் நிமிடத்திற்கொரு முறை அப்லோட் செய்யப்படுகின்றன...
இவை மட்டும் தான் இணையமா என்ற ஆயாசையில் தேடினால் பல நல்ல தளங்களும்,ஆழமான கருத்துக்களை முன்வைக்கும் வாதங்களும் நிகழும் தளங்களும், தொல்காப்பியம் முதல் ரமனிசந்திரன் நாவல் வரை மின் நூல்களாக வழங்கும் தளங்களும்,கல்வி ஆலோசனை,வேலைவாய்ப்பு தகவல்களைப் பகிரும் அருமையான தளங்களும் இன்னும் பல சுவையான அறிவார்ந்த பொழுதுபோக்கும் தளங்களும் இருக்கத்தான் செய்கின்றன இருக்கத்தான் செய்கின்றன..ஆனால் படிக்க யாருமின்றி ஈ ஓட்டிக்கொண்டு...மொத்ததில் இந்த இணைய பூதம் நம் இளைய சக்திகளின் நேரத்தினை மட்டுமே விழுங்கி கொண்டிருக்கின்றது என்றால் மிகையல்ல..

Sunday, January 13, 2013

மனதை கனக்க வைத்த பொங்கல்...

div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
தை முதல் நாளே தமிழ்புத்தாண்டு என்ற வாதங்கள் இருக்கட்டும்,தமிழ்நாடு மின்மிகை மாநிலமாகும் என்ற நம்பிக்கை இருக்கட்டும், பருவமழை பொய்த்து ஆற்றுப்படுகைகள் பாலைகளாகி நிலம் வறண்டதால் உடலும் உள்ளமும் வறண்ட விவசாயிகள் இருக்கட்டும், சாதியின் பெயரால் கட்டவிழ்க்கப்படும் வன்முறைகள் இருக்கட்டும், பணத்தாசை காட்டி மோசடி செய்யும் ஏமாற்றுமுதலைகள் இருக்கட்டும், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வரும் கொசுக்களும்,நோய்களும்,சுகாதார கேடும்,அதனை கணக்கில் காட்டாத அரசும் இருக்கட்டும்,மலைகள் மடுக்களாக்கிய கிரானைட் முதலாளிகைன் மீதுள்ள கேஸ்களும் இருக்கட்டும், இந்தியாவின் திறந்தவெளி சிறைச்சாலையாகிய இந்திய எல்லைக்குள்ளேயே தீவாகிப் போன கூடங்குளமும் இருக்கட்டும்,வாரிசுக்கு பதவிகளை தாரவார்க்கத்துடிக்கும்,மக்களை இலவசங்களால் சிலையாக்கும்,சாமான்யனை இதுதான் நம் தலைவிதியென ஏற்றுக்கொள்ளவைத்த தன்னலமற்ற மக்கள் தலைவர்களும் இருக்கட்டும்,அரசியல் கொலைகளும் சதிக்கொலைகளும் இருக்கட்டும், சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு நம் நாட்டிற்குத் தான் லாபம் என் வாதாடும் அறிவுஜீவிகள் இருக்கட்டும்,நாளைய சமுதாயமாவது நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கையை கொலைவெறி பாடகளுக்கு லைக்ஸும்,பேஸ்புக் ஸ்டேடஸுக்கு கமெண்டும், பிடித்த நடிகரின் படத்தின் முதல் நாள் காட்சியும்,நல்ல பிகரும், ஐந்திலக்க சம்பளமும்,களிப்பும் பொழுதுபோக்கும் போதுமென தகர்க்கும் இளைய தலைமுறையும் இருக்கட்டும், இனியாவது நம் நிலை மாறும் நம் தமிழ் மக்கள் நம்மை அரவணைப்பர் என்ற நம்பிக்கையுடன் சிதைக்கப்பட்ட கற்பும்,புதைக்கப்பட்ட வீரமுமாக வேலிக்கு பின் கண்ணீர் முகம் காட்டும் ஈழத்தமிழர்களும் இருக்கட்டும், வண்புணர்ச்சி தப்பு தான் ஆனால் தூக்கு தண்டனை அதை விட தப்பு என டெல்லிப்பெண்ணின் உயிரைக் காவு வாங்கிய விலங்குகளின் ஆயுட்காலமும் இன்னும் இருக்கட்டும்.................இவையெல்லாம் அப்படியே இருக்கட்டும் அல்லது போகட்டும்.. நாம் மட்டும் மாதந்தோறும் வரும் பண்டிகைகளுக்கு வாழ்த்து பரிமாறியும்,கொண்டாடியும் மகிழ்வோம்!!!! வீட்டைச் சுத்தம் செய்து,வர்ணமிட்டு,வீட்டுக்கூரையில் கூரைப்பூக்கள் வைத்து,செங்கரும்ப்பு வைத்து,அருகிலுல்லோரை அழத்து விருந்திட்டு,பசுக்களினைக் குளிப்பாட்டி,அலங்கரித்து, அதன் முன்,முக்கோன அடுப்பில் அரிசி அள்ளிப் போட்டு பொங்கல் வைக்க எங்கள் விவசாயியிடம் புதுநெல் இல்லை இவ்வருடம்... ஆகவே குக்கரில் பொங்கலிட்டு, பேஸ்புக்கில் வாழ்த்து சொல்லுவோருக்கே இவ்வருடம் பொங்கல் உண்டு... பொங்கலன்றாவது உங்களின் சொந்த கிராமங்களுக்குச் சென்று வாருங்கள் நகரத்தார்களே!!!!!!!!!!!அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!!!!!