Showing posts with label விருதுகள். Show all posts
Showing posts with label விருதுகள். Show all posts

Monday, May 23, 2011

புற்றுநோய்' புத்தகம்.. இந்திய அமெரிக்கருக்கு புலிட்ஸர்!



இந்திய அமெரிக்க மருத்துவர் சித்தார்த்த முகர்ஜி எழுதிய 'தி எம்பெரர் ஆஃப் ஆல் மாலடிஸ்: எ பயோகிராஃபி ஆஃப் கேன்சர்' (The Emperor of All Maladies: A Biography of Cancer) என்ற புத்தகத்துக்கு ஃபிக்ஷன் அல்லாத பிரிவின் கீழ் 2011-ம் ஆண்டுக்கான புலிட்ஸர் விருது கிடைத்துள்ளது. எழுத்துலகில் மிக உயரிய விருதுகளில் ஒன்றாகக் கருதப்படும் புலிட்ஸரை வென்றுள்ள மருத்துவர் சித்தார்த்தாவின் புத்தகம், புற்றுநோயை ஆதி முதல் அந்தம் வரை அலசுகிறது விரிவாக அலசுகிறது.புற்றுநோயின் தோற்றம் தொடங்கி, மருத்துவ சிகிச்சையில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் என நீண்ட வரலாற்றை பதிவு செய்திருக்கிறார் சித்தார்த்தா. புலிட்ஸர் விருதுடன் 10 ஆயிரம் டாலர் பரிசுத் தொகையை அவர் பெறவுள்ளார்.
டெல்லியில் 1970-ம் ஆண்டு பிறந்த சித்தார்த்த முகர்ஜி, ஸ்டாண்ட்ஃபோர்ட் பல்கலைக்கழத்தில் மருத்துவம் பயின்றார். பின்னர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பி.எச்டி பெற்றார். ஹார்வர்டு மருத்துவப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்.
தற்போது நியூயார்க்கில் வசித்து வரும் அவர், கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராகவும், கொலம்பியா பல்கலைக்கழ மருத்துவ மையத்தில் புற்றுநோய் மருத்துவராகவும் உள்ளார்.புலிட்ஸர் விருது பெற்றுள்ள இவரது புத்தகத்தில் இருந்து சில பகுதிகளைக் காண.

83வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா - லாஸ் ஏஞ்சல்ஸ்





83வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருது 'தி கிங்ஸ் ஸ்பீச்' படத்தின் இயக்குநர் டாம் ஹூப்பருக்கு வழங்கப்பட்டது.
'பிளாக் ஸ்வான்' படத்தின் நாயகி நதாலி போர்ட்மேனுக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை காலின் ஃபிர்த் பெற்றார். 'தி கிங்ஸ் ஸ்பீச்' படத்தில் நடித்ததற்காக காலின் ஃபிர்த்துக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
வாய்ப்பை இழந்தார் ஏ.ஆ.ரஹ்மான்...
சிறந்த பின்னணி இசைக்காக இந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. இருப்பினும் இவ்வாண்டிற்கான சிறப்பு பின்னணி இசைக்கான விருதை 'தி சோசியல் நெட்வொர்க்' படத்திற்காக டிரன்ட் ரெஸ்னர் மற்றும் அடிகஸ் ரோஸ் ஆகியோர் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
விருதுப் பட்டியல்...
சிறந்த நடிகர் - காலின் ஃபிர்த் (தி கிங்ஸ் ஸ்பீச்)
சிறந்த நடிகை - நதாலி போர்ட்மேன் (பிளாக் ஸ்வான்)
இயக்குநர் - டாம் ஹூப்பர் (தி கிங்ஸ் ஸ்பீச்)
இசை (ஒரிஜினல் பாடல்) - டாய் ஸ்டோரி 3
சிறந்த எடிட்டிங் - தி சோஷியல் நெட்வொர்க்
விஷூவல் எபக்ட்ஸ் - இன்செப்ஷன்
சிறந்த டாக்குமென்டரி - இன்சைட் ஜாப்
குறும்படம் (லைவ் ஆக்ஷன்) - காட் ஆப் லவ்
காஸ்ட்யூம் வடிவமைப்பு - ஆலிஸ் இன் ஒன்டர்லேண்ட்
மேக்கப் - தி உல்ப்மேன்
ஒலிக் கலவை - இன்செப்ஷன்
இசை (ஒரிஜினல் ஸ்கோர்) - தி சோஷியல் நெட்வொர்க்
சிறந்த துணை நடிகர் - கிறிஸ்டியன் பாலே (தி பைட்டர்)
சிறந்த துணை நடிகை - மெலிஸா லியோ (தி பைட்டர்)
சிறந்த வெளிநாட்டுப் படம் - இன் எ பெட்டர் வேர்ல்ட் (டென்மார்க்)
திரைக்கதை (ஒரிஜினல்) - தி கிங்ஸ் ஸ்பீச்
திரைக்கதை (தழுவல்) - தி சோஷியல் நெட்வொர்க்
சிறந்த அனிமேஷன் படம் - டாய் ஸ்டோரி 3
அனிமேஷன் குறும்படம்- தி லாஸ்ட் திங்
ஒளிப்பதிவு - இன்செப்ஷன்
கலை இயக்கம் - ஆலிஸ் இன் ஒன்டர்லேண்ட்

தேசிய விருதுகள்:புதுடெல்லி, மே 19,2011





தேசிய விருதுகள்: சிறந்த நடிகர் தனுஷ், சிறந்த நடிகை சரண்யா; சிறந்த இயக்குனர் வெற்றிமாறன்!
புதுடெல்லி, மே 19,2011



58-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இதில், முக்கிய விருதுகளை வென்று தமிழ் சினிமா ஆதிக்கம் செலுத்தியுள்ளது.சிறந்த நடிகர் தனுஷ்...'ஆடுகளம்' படத்துக்காக, தனுஷ் சிறந்த நடிகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருடன், 'ஆதாமிண்டே மகன் அபு' என்ற மலையாளப் படத்துக்காக சிறந்த நடிகருக்கான விருதை, நடிகர் சலிம் குமார் பெறுகிறார்.இம்முறை சிறந்த நடிகர் பிரிவில் இருவருக்கு தேசிய விருது வழங்கப்படுகிறது.வெற்றி மாறனுக்கு 2 விருதுகள்...ஆடுகளம் படத்துக்காக சிறந்த இயக்குனர், சிறந்த திரைக்கதை ஆசிரியர் ஆகிய இரு பிரிவுகளிலும் தேசிய விருதுகளை அள்ளியிருக்கிறார், இயக்குனர் வெற்றி மாறன்.
இயக்குனர் பாலுமகேந்திராவிடம் சினிமா பயின்றவர்களில் குறிப்பிடத்தக்கவரான வெற்றி மாறன், 'பொல்லாதவன்' படத்தின் மூலம் தனது தனித்துவத்தை தமிழ் சினிமாவில் பதிவு செய்தவர்.
ஸ்பெஷல் மென்ஷன் எனும் சிறப்புப் பிரிவில், ஆடுகளம் படத்துக்காக வி.ஐ.எஸ். ஜெயராமனும் தேசிய விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கெளரவிக்கப்பட்ட 'தென்மேற்குப் பருவக்காற்று'...
வர்த்தக ரீதியில் குறிப்பிடத்தக்க வெற்றியை பெறாவிட்டாலும், ஆழமான கதைக் களத்தைக் கொண்ட 'தென்மேற்குப் பருவக்காற்று', சிறந்த மாநில மொழி திரைப்படம் பிரிவில், சிறந்த தமிழ்ப் படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சிறந்த நடிகை சரண்யா...
தேசிய விருதுகளில் சிறந்த நடிகர் பிரிவுக்கு இணையாக உயரியதாக போற்றப்படும், சிறந்த நடிகை விருதை, 'தென்மேற்குப் பருவக்காற்று' படத்துக்காக நடிகை சரண்யா பொன்வண்ணன் பெறுகிறார்.
இம்முறை சிறந்த நடிகை விருதும் இருவருக்கு வழங்கப்படுகிறது. மராத்தியின் 'பாபூ பந்த் பாஜா' என்ற படத்துக்காக நடிகை மிதாலீ ஜக்தாப் பரந்தர் என்ற நடிகையும் இவ்விருதை வென்றுள்ளார்.
வைரமுத்துக்கு விருது...
தென்மேற்கு பருவக்காற்று படத்தில் இடம்பெற்றுள்ள பாடலுக்காக, கவிஞர் வைரமுத்துவுக்கு சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.
தம்பி ராமையா...
'மைனா' படத்துக்காக தம்பி ராமையாவுக்கு சிறந்த உறுதுணை (சப்போர்ட்டிங்) நடிகருக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.
நகைச்சுவை நடிகராக வலம் வந்த தம்பி ராமையா, 'மைனா' படத்தில் நகைச்சுவையையும் தாண்டி உணர்வுப்பூர்வமான காட்சிகளில் அசத்தி, ரசிகர்களின் மனத்தை வெகுவாகக் கவர்ந்தது கவனத்துக்குரியது.
உறுதுணை நடிகை...
சிறந்த உறுதுணை நடிகைக்கான விருதை சுகுமாரி பெறுகிறார். இவர், 'நம்ம கிராமம்' என்ற தமிழ்த் திரைப்படத்தில் நடித்ததற்காக இவ்விரு வழங்கப்படுகிறது.
சிறந்த நடன இயக்குனர்...
ஆடுகளம் படத்துக்காக சிறந்த நடன இயக்குனர் விருதை, தினேஷ் குமார் தட்டிச் சென்றுள்ளார்.
சிறந்த படத்தொகுப்பு..
சிறந்த படத்தொகுப்பான விருதினை ஆடுகளம் படத்துக்காக எடிட்டர் டி.இ.கிஷோர் வென்றுள்ளார்.
பிற விருதுகள் (தமிழுக்கு)...
சிறந்த ஆடை வடிவமைப்புக்கான விருதினை 'நம்ம கிராமம்' படத்துக்காக இந்திரன்ஸ் ஜெயன் பெறுகிறார்.
சினிமா குறித்த எழுத்துப் படைப்புக்காக, ஓவியர் ஜீவா எழுதிய 'திரைச்சீலை' என்ற புத்தகம் தேசிய விருதை வென்றுள்ளது.
எந்திரனுக்கு 2 விருதுகள்...
ரஜினிகாந்த் - ஷங்கர் கூட்டணியில் உருவான 'எந்திரன்', இரண்டு பிரிவுகளில் தேசிய விருதைப் பெற்றுள்ளது.
சிறந்த ஸ்பெஷல் எஃபெக்ட் மற்றும் சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு ஆகிய பிரிவுகளில் எந்திரன் தேசிய விருதுகளை தட்டிச் சென்றுள்ளது.
சிறந்த திரைப்படம் 'ஆதாமிண்டே மகன் அபு'!
58 தேசிய திரைப்பட விருதுகளில், இந்திய அளவில் சிறந்த திரைப்படத்துகான விருதை மலையாள மொழியின் 'ஆதாமிண்டே மகன் அபு' என்ற படம் வென்றுள்ளது.
சிறந்த பொழுதுபோக்கு திரைப்படத்துக்கான விருதை சல்மான் கான் நடித்த 'தபாங்' கைப்பற்றியுள்ளது.