Monday, May 23, 2011

புற்றுநோய்' புத்தகம்.. இந்திய அமெரிக்கருக்கு புலிட்ஸர்!



இந்திய அமெரிக்க மருத்துவர் சித்தார்த்த முகர்ஜி எழுதிய 'தி எம்பெரர் ஆஃப் ஆல் மாலடிஸ்: எ பயோகிராஃபி ஆஃப் கேன்சர்' (The Emperor of All Maladies: A Biography of Cancer) என்ற புத்தகத்துக்கு ஃபிக்ஷன் அல்லாத பிரிவின் கீழ் 2011-ம் ஆண்டுக்கான புலிட்ஸர் விருது கிடைத்துள்ளது. எழுத்துலகில் மிக உயரிய விருதுகளில் ஒன்றாகக் கருதப்படும் புலிட்ஸரை வென்றுள்ள மருத்துவர் சித்தார்த்தாவின் புத்தகம், புற்றுநோயை ஆதி முதல் அந்தம் வரை அலசுகிறது விரிவாக அலசுகிறது.புற்றுநோயின் தோற்றம் தொடங்கி, மருத்துவ சிகிச்சையில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் என நீண்ட வரலாற்றை பதிவு செய்திருக்கிறார் சித்தார்த்தா. புலிட்ஸர் விருதுடன் 10 ஆயிரம் டாலர் பரிசுத் தொகையை அவர் பெறவுள்ளார்.
டெல்லியில் 1970-ம் ஆண்டு பிறந்த சித்தார்த்த முகர்ஜி, ஸ்டாண்ட்ஃபோர்ட் பல்கலைக்கழத்தில் மருத்துவம் பயின்றார். பின்னர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பி.எச்டி பெற்றார். ஹார்வர்டு மருத்துவப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்.
தற்போது நியூயார்க்கில் வசித்து வரும் அவர், கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராகவும், கொலம்பியா பல்கலைக்கழ மருத்துவ மையத்தில் புற்றுநோய் மருத்துவராகவும் உள்ளார்.புலிட்ஸர் விருது பெற்றுள்ள இவரது புத்தகத்தில் இருந்து சில பகுதிகளைக் காண.

No comments:

Post a Comment