Tuesday, March 15, 2011

உன்னால் முடியும்

என் இனிய நண்பனே!
உறங்குகின்ற உன்
சிந்தனையைத் தட்டி எழுப்பும்
ஓர் இனிய முயற்சிதான்
இக்கவிதை...

நேற்று என்பது
முடிந்துவிட்டது!
நாளை என்பது
இனிவரும் நாள்!
இன்று என்பது
உன் கையில்!

நடந்ததை மறந்துவிடு
நடப்பதை நினைத்திரு
வெற்றி அடையும் வரை
விழித்திரு உனக்கான
விடியலை நோக்கி...

உழைத்திரு...முயற்சித்திரு
உன் வெற்றியை அடைய
எதை தேடுகின்றாய்
புறத்தே தேடினால்
அது கிடைக்காது
அகத்தே ஒளிந்திருக்கும்
உன் சக்தியை
விடாது பற்றிக்கொள்

உனக்கான
வெற்றிக்கனியைப் பறிக்க
என்னால் முடியாது
எதுவும் முடியாது
என்பது "அவநம்பிக்கை"...

உன் கனவுகளை
நிஜமாக்கி உன்னை
வெற்றிமேல் வெற்றி
பெறச்செய்வது
என்பது உன் தன்னம்பிக்கை

வெயில் உள்ளவரை
மட்டுமே உன்
நிழல்கூட உன்னை
தொடர்ந்து வரும்
ஆனால்
உன்னை விடாமல்
பற்றிக் கொண்டு 
தூக்கி நிறுத்திட
உன்னால் முடியும்
என்று சிந்திக்க வைக்கும்
அந்த முன்றாவது கைதான்
உன் "தன்னம்பிக்கை"

விடாமல் பற்றிக்கொள்
விழாமல் எழுந்துநிற்பாய்
உன் வாழ்க்கையில்... 


2 comments: