ஒரு பாலைவனம் பனித்துளியாகியது
"பீபீபீப்ப்ப் ஒத்தை ஆலமரம் ஸ்டாப்லாம் இறங்குங்கப்பா" என்ற கண்டக்டரின் குரல் கவனத்தைக் கலைக்க பிரகாஷ் கண்விழித்தான்.கண்ணைக் கசக்கி,முகம் துடைத்து நிமிர்ந்த போது பஸ் கல்லம்பட்டி விலக்கினைத் தாண்டியிருந்தது.பத்து வருடங்களுக்கு முன் கிராமத்தை விட்டுச் சென்று மெரீட்டில் பொறியியல் படித்து கம்ப்யூட்டர்,டேடாபேஸ்,ப்ரொஜெக்ட்,கார்ப்பொரேட் மீட்டிங் என அலுவல்களில் மூழ்கி,கனத்த பேங்க் பேலன்ஸுடன் கார்,பங்களா சீருடன் மனைவி அமையப்பெற்று,ஓய்வுநேரத்தில் ட்விட்டர்,பிளாக்கர் என கண்டதைக் கிறுக்கி வாழும் இருபத்தொன்றாம் நூற்றாண்டின் யுவனான ப்ரகாஷிற்கு கிராமபயணம் புதியதாய் இல்லையென்றாலும் உடன் வந்த அமெரிக்க யுவன் அமருக்கு ஒவ்வொரு விசயமும் புதியதாக தோன்ற ஒவ்வொன்றாக கேட்டுக்கொண்டே வந்தான்."கார்-ல போங்கனு சொன்னா கேக்க மாட்டேங்கறீங்க,பாத்து போய்ட்டு வாங்கையா" என்ற அம்மாவின் குரல் பிரகாஷின் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருந்த்து..உலகெங்கும் பறந்து நவீனயுகத்தின் நொடிக்கொரு மாற்றங்களை கண்டுகளித்த பிரகாஷிற்கு சொந்தக்கிராமத்தின் வழித்தடங்கள் இன்னும் மாறாதது அதிர்ச்சியே
தந்தது.
பஸ் இப்போது கண்மாயை நெருங்கிவிட்டிருந்தது.ஊரின் அடையாளமே மலையடிவாரத்தில் கடலென விரிந்துள்ள இக்கண்மாயும்,மலையோரமுள்ள மரங்களாய் வேரூன்றியுள்ள ஆலமரவிழுதுகளும் தான்.. நினைவுகள் பின்னோக்கின, நினைவின் கிளைகளில் டவுசர்,புல்லட்,சங்கிலி,கருப்பு,தவுடா என்ற பெயர்களுடன் "மில்லி தாத்தா"-வும் நினைவிலாடினார்.
"டேய் கருப்பு தவுடனை பாருடா கிளைல எம்மா ஒயரத்துல இருந்து குதிக்கறானு" என்று புல்லட் முடிக்கும் முன் "இது என்னடா இப்ப பாரு" என சங்கிலி படபடவென மரத்திலேறி உச்சியிலிருந்து மூன்றாக வளைந்து குதித்தான்.
"பிரகாஷ் கம்மா ரெம்ப ஆழம்பா,கரையிலேயே உக்காந்து குளிச்சுட்டு வந்துருயா, அம்பி,நந்து கூட சேர்ந்து பத்திரமா வந்துடுபா"என்ற அம்மாவின் குரல் காதில் ஒலித்துக்கொண்டே இருப்பதால் பிரகாஷ் ஆசையிருந்தும் மற்றவருடன் சேராமல் கரையருகிலேயே குளிப்பான்.
அனைவரும் ஹேய்ய்ய்ய் என கத்த புல்லட் "டேய் மில்லி தாத்தா வந்துட்டாருடா.. " என அடியிலிருந்து கத்தினான்...கரையருகில் உக்கார்ந்திருந்த பிரகாஷ் திரும்பி பார்க்க,எல்லாக் குழந்தைகளும் அவரை நோக்கி ஓடின.
மில்லி தாத்தா.. மிலிட்டரியிலிருந்து வந்ததாலோ,மில்லில் வேலை பார்த்ததாலோ என்னவோ மில்லி தாத்தா என்ற பெயர் வந்தது போல என சொல்லுவார்கள். நெடுநெடுவென்ற உயரம்,செட்டியார் தோப்பு பெரிய மாமரத்து காய்களையே நின்று கொண்டே பறித்து விடுவார். அடர்சுருள் முடியில் இரு முடிகளை வளைத்து முன்னால் காற்றில் பறக்கவிட்டிருப்பார். பத்து பேர் கூடி நின்று அடித்தாலும் தாங்கும் வலுவுள்ள உடல்வாகு,காடு போன்ற புருவத்தின் இடையில் எப்போதும் மிளிரும் செந்தூரம்,மூக்கு மட்டும் சப்பையாக,புகையிலை காவிப்பற்கள், இடது கையில் மிளிரும் வெண்கலக் காப்பு,கழுத்தில் இருதாயத்துக்களுடன் கனத்த கருப்புக் கயிறு,இறுகிய முகம்,கணுக்காலில் முடிகயிறு என அவரின் தோற்றமே அவரின் மேல் ஒரு வித பயத்தை ஏற்படுத்தும் பிரகாஷிற்கு.. "டேய் நம்ம ஊருலயே பெரிய ஆளு யாரு தெரியுமாடா நம்ம மில்லிதாத்தா தாம்டா" என டம்ளர் வாய் ஓயாது சொல்லுவான்
ஆனாலும் அவர் குழந்தைகள் மேல் காட்டும் பிரியம் அலாதியானது.அவரின் அன்றாட வேலைகளில் தவறாமல் இடம் பிடிப்பது காலையில் கண்மாய்க்கு வந்து உடற்பயிற்சி செய்து,குளிப்பது.அந்தக் காலத்துல மில்லிக்காரரு விரா மீனு கணக்கா நீந்தி, குளிக்கறதப் பாக்கவே, வயசுபொண்ணுகளாம் தண்ணிக்கு போரேம்னு போவாளுவ என்று அம்மாச்சி சொல்லிவிட்டு ஒருமூச்சு விடும் போது அவர் குறிப்பிட்ட வயசு பொண்ணுகளில் அவரும் ஒருவரோ என சந்தேகம் எழ சிரித்துக்கொண்டே ஓடுவேன்.
ஞயிற்றுக்கிழமையானால் தாத்தா பிள்ளைகளுக்காக சீக்கிரம் வந்து விடுவார்.
ஊரிலுள்ள இளந்தாரிகள் முதல் வாண்டு வரை நீச்சலடிப்பது அவரினால் தான்.படர்ந்த மார்பின் முன்னே கைகளை நீட்டி அதில் நீச்சலடிப்பவனை கிடத்தி அவன் போக்கிலேயே நீந்தவிட்டு,பிடியைத் தளர்த்தி,கைகளை எடுத்துவிட்டு அவர் சொல்லிகொடுப்பதே ஒரு கலை போல தோன்றும். எனக்கும் அவரிடம் கற்றுக்க்கொள்ள ரெம்ப ஆசையிருந்தும் போகமாட்டேன்.
அன்றும் அப்படித்தான் எல்லாரயும் நீந்த சொல்லி,தானும் விதவிதமாய் வித்தை காட்டினார்.
அப்போது கருப்பு “பிரகாஷ் உள்ள இறங்கி வாடா" என்றான்... நான் தலையைக் குனிந்தபடியே,
இல்லேடா நான் வரல,அம்மா அடிக்கும் என்றேன். அடுத்தடுத்து தவுடன்,புல்லட்,சங்கிலி என ஒவ்வொருத்தனாக கூப்பிட இவன் நிமிர்ந்துகூட பார்க்காமல் சோப்பை எடுத்து போட ஆரம்பித்தான். அப்போது தான் சுந்தரி "ஏய் பிரகாசு, நீ என்ன பெட்டையால, நாங்கலே பயமில்லாம குதிக்கறோம்,உனக்கு என்னடா வாடா" என்னும் போது தான் மில்லி தாத்தா திரும்பினார்."யாருடா அவன், கோசல பேரனா வாடே,உங்கப்பன் இருக்கற வரைக்கும் அவனுக்கும் எனக்கும் தாம்ல நீச்சல்ல போட்டி,கோட்டிபய நல்லா கெளங்காமீனு கணக்கா நீந்துவான்,ஆனா ஒரு நா கூட எம்மகிட்ட பந்தயம் அடிக்கமுடியாதுல்ல, உங்கொப்பன் கணக்க நீ தீருடா வாடே" என கரகரகுரலில் அவ்ர் கூப்பிட்ட தொனியே என் வயிற்றில் புளிக்கரைத்தது.
எதுமே சொல்லாமல் கரையை நோக்கித் திரும்பினேன்... "என்னடா இவம் இப்டி ஒடுரான்... இவம் பேரென்ன பிரகாஷா.... சரியான பயந்தோலி பிரகாசுடா"என தாத்தா சொல்லிவிட்டு சிரிப்பதும்,தொடர்ந்து மற்றவர்கள் சிரிப்பதும் என் காதுகளில் விழும் போது நான் கரையைத் தாண்டியிருந்தேன். அன்றோடு அது முடியவில்லை... பள்ளி,கோவில்தெரு,சாவடி என எங்கு சென்றாலும் "பயந்தோலி பிரகாசு" என்பதே என் பெயரானது.அவர்கள் அப்டி கூப்பிடும் போதெல்லாம் வீட்டிற்க்குள் வந்து தேம்பி அழுவேன்..
அப்போதெல்லாம் மில்லிதாத்தா மீது தான் கோபம் வரும்.அம்மாச்சி இறந்தபிறகு ஊரைவிட்டு வந்து, நாட்கள் பல ஓடியும் பயந்தோலி பிரகாசு என்ற பேரும்,மில்லிதாத்தாவின் மீதான வெறுப்பும் மட்டும் மறையவில்லை. நன்றாக ஒரு நிலைமைக்கு வந்தபின் மில்லித்தாத்தாவிடம் சென்று, நான் ஒன்னும் பயந்தோலி இல்ல,பாத்தீங்களா என மார் தட்டி கேக்கனும்நு எனக்கு நானே சமாதானம் சொல்லிக்கொள்வேன், காலஒட்டத்தில் பத்து வருடங்களுக்கு பின் இன்று தான் என் ஊருக்கு நண்பருடன் வந்திருக்கிறேன்.
நினைவுகளில் நீந்தியவனை அமரின் குரல் "ப்ரிஷ் பஸ் ஹேட் ஸ்டாப்ட்,ஷால் வீ மூவ்?" தடுக்க யா,யா என்றவாறே பைகளை எடுத்துக்கொண்டேன்.ஊரில் எனக்கு சொந்தமென்று சொல்லிக்கொள்ளவிருந்த அத்தை வீட்டை அடைந்து, கொண்டு வந்த பொருட்களையெல்லாம் அளித்து, தடுக்க எம் அண்ணன் மவம் எப்பூடி வளர்ந்துருக்கு என கண்ணீர் வழிய,பழைய கதைகளை கேட்டு,அத்தையின் கைப்பக்குவ மீன்குழம்பினை சுவைத்து,பள்ளிப்பருவ தோழர்களைச் சந்திது அளவளாவிய போது தான் மில்லி தாத்தாவின் நினைவு வந்தது.. அருகில் அமரிடம் சிறார் பருவகதைகளை அளந்து விட்டுக்கொண்டிருந்த புல்லட் பேச்சை நிறுத்தி, மில்லிதாத்தா எங்கடா இருக்காரு? என்றேன்.
யாரடா கேக்கர? மில்லி தாத்தாவயா..இன்னும் மறக்கலியாட நீ.. எண்ணும்போதே அவன் குரல் தழுதழுத்தது.ஏன் தடுமாறி பேசுகிறான் என்று நான் யோசித்துக் கொண்டிருக்கும்போதே, தொடர்ந்தான், சொளையா நாலு பயலுகளைப் பெத்தாரு,என்ன ப்ரயொசனம் ஆத்தா போனதுமே ஆளு அரையாளா போய்ட்டாரு,ஒவ்வொரு மகனுக்கும் குடித்தனம் தனியா வந்துட்ட பொறவு, வீட்டுல மரியாதையில்லாம போச்சு, நாலாவது மவம் மட்டும் நல்லா வச்சுருப்பான்,விதிக்கொடுமைல அவனும் ஆக்ஸிடென்ட்ல குடும்பத்தோட போய்ட்டான், மருமகளுக ஆளுக்காளு தோது போட்டுக்கிட்டு அசிங்கப்படுத்த,ஊருக்குள்ள மரியாதையா இருந்த மனுசன் ரெம்ப நொந்து தோப்பு பக்கம் ஒரு குடிசைய போட்டு அங்க இருக்கறாருப்பா என்றான்.
அவன் சொல்ல சொல்ல,மனதிற்குள் இனம் புரியாத மகிழ்ச்சி பரவியது.எப்படியெல்லாம் நான் மருகியிருப்பேன்,எல்லாம் என் பாவம் தான்..என்ன ஆணவம்,என்ன அலப்பறை..இவருக்கு இது வேனும் என எண்ணியவாறே, அவர்கிட்ட கூட்டிட்டு போடா என்றேன்.வழி நெடுக பயந்தோழி பிரகாசு என்ற ஆர்ப்பரித்த அவரின் குரலும்,சிரிப்புமே நினைவில் நின்றன.
இருயா,வரேன்.. நானா பயந்தோழி நீதாம்யா தோப்புகுள்ள பதுங்கியிருக்கற பயந்தோழினு சொல்றேன்...என என் மனம் பல ஒத்திகைகளைப் பார்த்துக்கொண்டது.
நூறு தென்னைமரங்கள் சிலு சிலுவென காற்றால் வருடிவிட,தூரத்தில் ஒருவர் தென்னோலையில் முடங்கி படுத்துக் கொண்டிருந்தது தெரிந்தது.அருகே செல்ல செல்ல, அவ்வுருவத்தின் வடிவம் நன்றாகத் தெரிந்தது. கால்கள் சூம்பி,மார்புகூடு எலும்புகளின் எண்ணிக்கையை அழகாக வெளிக்காட்டி,கைகளில் ஒன்று இழுத்து இயபு நிலையிலிருந்து வளைந்து,முகத்தில் கண்கள் மட்டுமே பெரியதாக கொண்டிருந்த அம்மனிதனை மெல்ல நெருங்கிய புல்லட், தாத்தா பிரகாசு வந்துருக்கான்,வெளிநாட்டில இருந்து உங்களைப் பார்க்க என்றான். மெல்ல எழுந்து,திரும்பிய முதியவர் யாரு...ஏடெ பயந்தோலி பிரகாஷாடா.... அய்யயோ மன்னிச்சுக்கோயா, நீ எம்பூட்டு பெரிய ஆளா வந்துருக்க.எப்டியா இருக்க? என வினவியவாறே என் கைகளைத்தொட்டார்.. என் மனம் ஒருவித பேரதிர்ச்சிக்கு ஆளாகியிருப்பது என் அமைதியிலேயே புரிந்தது,இவர் தான் மில்லிதாத்தா என்பதை நம்புவதற்கே எனக்கு சில கணங்கள் பிடித்தன...யோசித்துக்கொண்டு நின்ற என்னைபார்த்தபடியே என்னயா என தீர்க்கமாக பார்த்தார்..செந்தூரம் ஏந்திய அவரின் நெற்றியை பார்த்தபடி "தாத்தா எனக்கு நீச்சல் கத்துக்குடுப்பீங்களா" என்றேன்.....தாத்தாவின் முகத்தில் வெவ்வேறு உணர்ச்சிக்கலவைகள் என்னைக் கட்டிக் கொண்டு ஓ-வென பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தார்..
அமர் நடப்பது என்னவென்றறியாமல் திகைக்க “அமர்,பலசாலிகள் பலவீனமாவதும்,பலவீனமானவங்க பலமாவதும் சூழ்நிலைகளால் தான்" அவனுக்கு புரிந்ததோ இல்லையோ,எனக்கு வாழ்வின் அர்ததம் புரிந்தது.. தாத்தாவை கட்டிக்கொண்டேன்.எனது பாலை மனது பனியானது...
Wednesday, October 12, 2011
Sunday, October 9, 2011
Monday, September 12, 2011
மலர்களின் மரணம்
டொன் டொன் டொன்....எப்படா மழை பெய்யும்னு காத்துக்கிடக்கற விவசாயிக்கு விடாம மழை பெய்தால் எப்படியிருக்குமோ அதை விட அதிக பூரிப்புடன் அந்த மணிச்சத்தம் காதில் இன்பமாக ஒலிக்க ஹைய்யா என மனதிற்குள் குதூகலித்தபடி பையைத் தோளில் போட்டுக்கொண்டு ஓடினாள் கனிமொழி...வேனில் ஏறி தன் தோழியின் அருகில் அமர்ந்தவளின் மனம் முழுதும் " நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை.." என்பது மட்டுமே நினைவிலோடியது.வேன் வீட்டருகிலிருக்கும் ரோட்டிற்கு அருகில் நிறுத்த, வழியிலிருந்த செடிகளைத் தன் கையிலிருந்த பையால் தடவியவாறே,அதில் ஒட்டியிருந்த பட்டாம்பூச்சிகளைவிரட்டியபடி,"அம்மா எனக்கு லீவு" என கத்தியபடி வீட்டிற்குள் ஓடினாள்.இரவு முழுதும் தூக்கமே வரல, நாளைக்கு என்னென்ன விளையாடலாம் என்றே மனம் கணக்கு போட்டுக் கொண்டிருந்தது.விடிந்தது தான் தாமதம், கனிமொழியை ஆளையே காணோம்.. ஏலா,கனி ஞாயித்துகிழமையானாலேஉங்கூட இதே ரோதன தானா,காலையிலிருந்து சாப்புடாமக்கூட அப்டி என்னதாம்டி விளையாடரே என்ற ஏலம்மாவின் குரலுக்கு செவி சாய்க்கும்நிலையில்,கனி இல்லை... ஆலமரத்தடியில் ஆரம்பித்த அவளின் விளையாட்டு,கண்ணாமூச்சி,கல்லா மண்ணா,பல்லாங்குழி,கிச்சு கிச்சு தாம்பாலம் என நீண்டதே தவிர குறையவில்லை.இரண்டொருமுறை வந்து பார்த்த ஏலம்மாவும்,ஒருநா தானே விளையாடிட்டு போகுது என திரும்பிவிட்டாள்.
இருட்டிக்கொண்டு வந்தது,அனைவரும் வீடு திரும்பினர்,கனி மட்டும் யாருமற்ற ஆலமரத்தையே வெறித்து பார்த்தாள். பின் வீட்டிற்கு வந்து,சாப்பிட்டு முடித்த கையோடு,காலண்டரை எடுத்தாள், எதோ மனதிற்க்குள்கணக்கு போட்டபடி, அம்மா மறுபடியும் ஞாயிற்றுக்கிழமை வர இன்னும் ஏழு நாளாகுமா? என ஏக்கத்துடன் கேட்டாள்.ஆமாம் கன்னு இப்ப தூங்கு,நாளைக்கு காத்தால எந்திருச்சு கிளம்பனும்..விடிந்தது.எழுந்தவுடன் குளித்து,பையில் டிபனை எடுத்துவைத்து,கிளம்பி ரோட்டிற்க்குச் சென்றுவேனிற்காக நின்றிருந்தாள்.எதிரே பள்ளிப் பையோடு சென்று கொண்டிருந்த,அம்முவிடம் கையைக் காட்டி, "அடுத்த ஞாயித்துக்கிழமை விளையாடலாம்...எனக் கை காட்டினாள்.தூரத்தே வேன் வந்து கொண்டிருந்தது "பரமேஸ்வரா ஃபயர் வொர்க்ஸ்" என்ற பெயரைத் தாங்கியபடி,சாப்பாட்டுபை தாங்கியிருந்த
தீப்பெட்டிக் கருப்பேறிய கைகளைக் காட்டி வேனை நிறுத்தினாள் "கனிமொழி என்னும் குழந்தைத் தொழிலாளி"...
இருட்டிக்கொண்டு வந்தது,அனைவரும் வீடு திரும்பினர்,கனி மட்டும் யாருமற்ற ஆலமரத்தையே வெறித்து பார்த்தாள். பின் வீட்டிற்கு வந்து,சாப்பிட்டு முடித்த கையோடு,காலண்டரை எடுத்தாள், எதோ மனதிற்க்குள்கணக்கு போட்டபடி, அம்மா மறுபடியும் ஞாயிற்றுக்கிழமை வர இன்னும் ஏழு நாளாகுமா? என ஏக்கத்துடன் கேட்டாள்.ஆமாம் கன்னு இப்ப தூங்கு,நாளைக்கு காத்தால எந்திருச்சு கிளம்பனும்..விடிந்தது.எழுந்தவுடன் குளித்து,பையில் டிபனை எடுத்துவைத்து,கிளம்பி ரோட்டிற்க்குச் சென்றுவேனிற்காக நின்றிருந்தாள்.எதிரே பள்ளிப் பையோடு சென்று கொண்டிருந்த,அம்முவிடம் கையைக் காட்டி, "அடுத்த ஞாயித்துக்கிழமை விளையாடலாம்...எனக் கை காட்டினாள்.தூரத்தே வேன் வந்து கொண்டிருந்தது "பரமேஸ்வரா ஃபயர் வொர்க்ஸ்" என்ற பெயரைத் தாங்கியபடி,சாப்பாட்டுபை தாங்கியிருந்த
தீப்பெட்டிக் கருப்பேறிய கைகளைக் காட்டி வேனை நிறுத்தினாள் "கனிமொழி என்னும் குழந்தைத் தொழிலாளி"...
Sunday, August 21, 2011
கூகிள் வரலாறு..
கூகிள் எப்படி உருவானது என்று நம்மில் பலருக்கு தெரியாது.அப்படி தெரியாதவர்களுக்காகவே இந்த பதிவு." நாங்க ஜாலியா படம் எடுக்கிறோங்க" என்று சொல்லிட்டு சென்னை 28 என்ற மிகப்பெரும் ஹிட் படம் ஒன்றை எடுத்திருந்தார் வெங்கட்பிரபு. அதுமாதிரிதான் "நாங்க ஜாலியா கம்பனி ஆரம்ம்பிக்கிறோம் " என்று ஆரம்பிக்கப்பட்ட ஒரு சிறிய கம்பனிதான் இந்த கூகிள்.அந்த கம்பனிதான் இணைய உலகில் ஒரு விருட்சமாய் வளர்ந்து நிற்கிறது.
நீங்க நம்ப மாட்டிங்கன்னு தெரிஞ்சுதான் கூகிள் நிறுவனத்தோட உள்ளக படங்களையெல்லாம் இணைத்திருக்கிறேன். இது எவ்வளவு ஜாலியான கம்பனின்னு படங்களை பார்த்தாலே தெரியும்.
ஷெல் என்பவர் முப்பத்தேழு வயதுப் பெண்மணி. ஒரு பெரிய அமெரிக்கக் கம்பெனியில் பொறுப்பான பதவியில் இருக்கிறார். ஒரு நாள் அலுவலகத்தில் ஒரு பெரிய தப்பு செய்துவிட்டார். அவசரமாக முடிவு எடுத்து, ஆலோசிக்காமல் செயல்பட்டு, அகலக் கால் வைத்துவிட்டார். அவரால் கம்பெனிக்கு பல லட்சம் டாலர் நஷ்டம். தன் மடத்தனம் புரிந்தவுடன் தயங்கிக்கொண்டே முதலாளியிடம் போய் விஷயத்தைத் தெவித்தார்.
இந்த நிலையில் பாஸ் என்ன செய்வார்?வேறொரு கம்பெனியாக இருந்திருந்தால் உடனே ஷெலுக்கு சீட்டுக் கிழிவதுடன், அவருடைய சூப்பர்வைசருக்கு சூப்பர்வைசருக்கு சூப்பர்வைசர் வரை அத்தனை பேருக்கும் அண்டர்வேருடன் நிறுத்தி வைத்து பரேடு நடந்திருக்கும். ஆனால் ஷெலின் பாஸ் புன்னகையுடன், ""அப்படியா, தாங்க்ஸ்!'' என்றார்
""தயங்கித் தயங்கி, ஒரு முடிவும் எடுக்காமல் களிமண் மாதிரி உட்கார்ந்திருப்பவர்கள்தான் தப்பே செய்ய மாட்டார்கள். அடிக்கடி தடுக்கி விழுபவர்கள்தான் நம் கம்பெனிக்குத் தேவை. அவர்கள்தான் நாலு கால் பாய்ச்சலில் ஓடிக் கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தம்!''
இந்த வித்தியாசமான கம்பெனிதான் கூகிள். அதன் வினோதமான முதலாளிதான் லாரி பேஜ். தன் கல்லூரித் தோழர் செர்ஜி ப்ன்னுடன் சேர்ந்து காலேஜ் படிக்கும்போதே கம்பெனி ஆரம்பித்தவர். (படிப்புதான் குட்டிச் சுவராகிவிட்டது!) எட்டு வருடத்தில் உலகத்தின் நம்பர் ஒன் இன்டர்நெட் கம்பெனியாக வளர்ந்து போட்டியே இல்லாமல் இணைய மலையின் உச்சியில் போய் உட்கார்ந்து கொண்டிருக்கிறது கூகிள்.
லாரியும், செர்ஜியும் பிட்ஸா சப்ளை செய்து சம்பாதித்த காசில் மிச்சம் பிடித்து கம்ப்யூட்டர் வாங்கித் தங்கள் ஹாஸ்டல் அறையில் கம்பெனியை ஆரம்பித்தார்கள். பிறகு ஒரு வீட்டு கராஜை வாடகைக்கு எடுத்து ஆறு ஊழியர்களுடன் கம்பெனி நடத்தினார்கள். இன்றையத் தேதிக்கு கூகிளின் மதிப்பு பன்னிரெண்டாயிரம் கோடி டாலருக்கு மேல்.
கணிதத்தில் கூகால் (googol) என்ற ஒரு பெரிய நம்பர். ஒன்று போட்டு நூறு சைபர். எத்தனை கோடி வலைப் பக்கங்கள் இருந்தாலும் தேடித் தந்துவிடுவோம் என்ற அர்த்தத்தில் இந்தப் பெயரை வைத்தார்கள். ஆனால் நம் கதாநாயகர்களுக்கு ஸ்பெல்லிங் கொஞ்சம் தகராறு. (கூகால்) என்பதற்குப் பதிலாக (கூகிள்) என்று தப்பாக எழுதிவிட்டார்கள். யாரும் கவனிக்காததால் அந்தப் பெயரே நிலைத்துவிட்டது.
இதை உருவாக்கி முடித்ததும் இந்த தேடல் நுட்பத்தை Yahoo போன்ற பெரும் தலைகள் யாருக்காவது விற்கலாம் என முடிவெடுத்தனர்.வாங்க யாரும் இல்லாததால் 1998-ல் Google என்ற கம்பெனி உருவானது.1998 நவம்பரில்
தான் கூகிள் இணையதளம் முதலாக தலைக்காட்ட தொடங்கி யிருந்தது.ஆரம்பத்தில் பணம் ஒன்றும் அவ்வளவாய் சம்பாதிக்க இயலவில்லை.Sun-னும் IBM-மும் சில Sun Ultra II,F50 IBM RS/6000
செர்வர்களை தானமாக வழங்கியிருந்தனர்.2001-ல் யாகூ கூகிளை வாங்க விலைப்பேசி கொண்டிருந்ததாம்.தேடல் இயந்திரத்தின் வலிமை அறியா யாகூ ஒரு தேடல் இயந்திரத்துக்கு இத்தனை விலையா ($5 Billion) என ஒதுங்கி விட்டது.(அன்று யாகுவிடம் விலைபோயிருந்தால் கூகிள் என்னவாயிருக்கும்?...யூகிக்க கூட இயலவில்லை.)
நிறுவனத்தில் எட்டாயிரம் பேர் வேலை செய்கிறார்கள். எல்லாம் பொறுக்கி எடுத்த மணி மணியான என்ஜினீயர்கள். அவர்களுடைய கலிபோர்னியா ஆபீசில் போய்ப் பார்த்தால் ஏதோ பல்கலைக்கழகக் கட்டடத்துக்குள் நுழைந்துவிட்ட மாதிதான் இருக்கிறது. இளைஞர் பட்டாளம் ஏக இரைச்சலாகச் சிரித்துக் கொண்டு அடித்துக் கொண்டு கானா பாட்டுப் பாடிக் கொண்டிருக்கிறது. வராந்தாவில் ஊழியர்கள் வளர்க்கும் செல்ல நாய்கள் உலவிக் கொண்டிருக்கின்றன. ஒரு பக்கம் டேபிள் டென்னிஸ் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். மடியில் குழந்தையை வைத்துக் கொண்டே வேலை செய்யும் தாய்மார்கள், மூடு வருவதற்காகப் பாட்டுக் கேட்கும், பியானோ வாசிக்கும் இளைஞர்கள்... ஆபீஸ் மாதிரியாகவா தெரிகிறது?
கூகிள் ஊழியர்களுக்கு கம்பெனி செலவில் சாப்பாடு, காப்பி இலவசம். கூகிள் கான்டீன் என்பது நம் மியூசிக் அகாதெமி கான்டீன் போல பிரபலமானது. அதைத் தவிர அலமாரி அலமாரியாக நொறுக்குத் தீனிகள், பழங்கள், பானங்கள். கொடுத்து வைத்தவர்கள், பிரித்து மேய்கிறார்கள்!
கூகிள் பிறந்த புதிதில் சர்ச் எஞ்சின் எனப்படும் வலைத் தேடல் இயந்திரமாக மட்டும்தான் இருந்தது. மசால் தோசை என்று தேடினால் இன்டர்நெட்டில் இருக்கும் கோடியோ கோடிக்கணக்கான தகவல் பக்கங்களில் புகுந்து புறப்பட்டுத் தேடி வினாடி நேரத்தில் விடை கொண்டு வந்துவிடும். இந்த மின்னல் வேகத் தேடல் டெக்னாலஜியைக் கண்டுபிடித்தவர்கள் பேஜும் பின்னும்தான். இதைச் செய்ய அவர்கள் பெரிய சூப்பர் கம்ப்யூட்டர்கள் எதையும் உபயோகிக்கவில்லை; சாதாரணமாகக் கடையில் கிடைக்கும் எட்டணா கம்ப்யூட்டர்களை ஏராளமான எண்ணிக்கையில் வாங்கிப் போட்டு அவற்றை ஒத்துழைக்க வைத்த சாப்ட்வேர் சாணக்கியத்தனம்தான் அவர்கள் செய்தது.
கூகிளில் வேலை செய்பவர்கள் எல்லோருக்கும் வாரம் நாலு நாள் ஆபீஸ் வேலை, ஒரு நாள் சொந்த வேலை. அதாவது, உங்களுக்கு ஏதாவது புது ஐடியா தோன்றினால் அதை முயற்சித்துப் பார்க்க கம்பெனி காசில் வசதி செய்து தருகிறார்கள். கூகிள் அறிமுகப்படுத்தியுள்ள பல புதுமையான சேவைகள் இப்படி ஆளாளுக்கு குருட்டாம்போக்கில் யோசித்து ஆரம்பித்து வைத்ததுதான். ""ஒவ்வோர் ஐடியாவும் ஒரு வைரம்; "தினப்படி வேலையில் பிசியாக இருக்கிறேன், யோசிக்க நேரமில்லை' என்பதனால் எந்த நல்ல ஐடியாவும் வீணாகிவிடக் கூடாது'' என்பது கூகிள் கொள்கை.
கூகிள் ஊழியர்கள் எல்லாரும் கிட்டத்தட்ட சுதந்திரமாக, தமக்குத் தாமே வேலை செய்துகொள்கிறார்கள். பின்கை கட்டிக் கொண்டு பின்பக்கம் உலாத்திக் கண்காணித்துக் கொண்டே இருக்கும் சூப்பர்வைசர்கள் கிடையாது. ""எவ்வளவுக்கு எவ்வளவு மானேஜ்மென்ட் இருக்கிறதோ, அவ்வளவுக்கவ்வளவு தொழிலாளர்களின் உற்பத்தித் திறன் குறைந்துடும். ஃப்ரீயாக விட்டால்தான் எல்லாரும் பொறுப்பாக வேலை செய்வார்கள்'' என்கிறார்கள். (கார்ப்பரேட் சர்வாதிகாரிகளே! கவனித்தீர்களா?)
கூகிள் வருவதற்கு முன்னும் பற்பல தேடல் இயந்திரங்கள் இருந்திருக்கின்றன. அவற்றில் எல்லாம் ஒரே குறைபாடு, குப்பைத் தொட்டியிலிருந்து அள்ளி வந்த மாதிரி சம்பந்தா சம்பந்தமில்லாத வலைப் பக்கங்களையெல்லாம் பீறாய்ந்து கொண்டுவந்து போட்டுவிடும். தங்கள் வெப் சைட்தான் முதலில் வர வேண்டும் என்பதற்காக சர்ச் எஞ்சினை நயவஞ்சகமாக ஏமாற்றுவதற்குப் பலர் சதித் திட்டங்கள் வேறு செய்து வைத்திருந்தார்கள்.
கூகிள்தான் முதல் முதலாக பக்கங்களைத் தரப்படுத்தி மார்க் போட்டு உருப்படியான தகவல்களை முதலில் கொண்டு வந்து தர ஆரம்பித்தது. பேஜ் ராங்கிங் (Page ranking) என்ற இந்த டெக்னிக்கை கண்டுபிடித்தவர் லாரி பேஜ். ஒரு வலைப் பக்கத்தை நிறையப் பேர் சிபாரிசு செய்து இணைப்புச் சங்கிலி போட்டு வைத்திருந்தால், அதிலும் பெரிய மனிதர்கள் சிபாரிசு செய்தால் அதிக மார்க் என்பது இதன் தத்துவம். கூகிளையும் ஏமாற்ற முடியும்; ஆனால் கஷ்டம்.
கூகிள் ஆராய்ச்சிசாலை என்று புதிது புதிதாக என்னவோ கண்டுபிடித்துக் கொண்டே இருக்கிறார்கள்.
கூகிள் நியூஸ் என்பது உலகத்தில் உள்ள அத்தனை செய்திகளையும் ஒரே இடத்தில் தருகிறது;
கூகிள் மேப் என்ற சேவையில் அமெரிக்காவின் வரைபடம் மொத்தமும் வைத்திருக்கிறார்கள். ஏதாவது ஓர் ஏரியாவில் போய் நின்றுகொண்டு இங்கே பக்கத்தில் பிட்ஸா எங்கே கிடைக்கும் என்றால் உடனே காட்டுகிறது.
லட்சக்கணக்கான புத்தகங்கள் கொண்ட இலவச லைப்ரரி நடத்துகிறார்கள்.
பி.எச்டி மாணவர்கள் காப்பி அடிக்க ஆராய்ச்சிக் கட்டுரைகள் தேடித் தருகிறார்கள்.
பறவைப் பார்வையாக சாட்டிலைட்டிலிருந்து உலகத்தைப் பார்க்கவும் வசதி செய்திருக்கிறார்கள் (ஊரான் வீட்டு நெய்யே என்று இந்தியாவின் தலைப்பக்கம் கொஞ்சம் கிள்ளி பாகிஸ்தானுக்குக் கொடுத்திருப்பதுதான் பார்க்கச் சகிக்கவில்லை.)
கூகிள் பயண சேவையில் பஸ், ரயில் நேரங்கள், வழித் தடங்கள் சொல்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட ஸ்டாப்பில் அடுத்த பஸ் எப்போது வரும் என்பது வரை காட்டுகிறது (ஆழ்வார்பேட்டையில் அல்ல, அமெரிக்காவில்!). கூகிள் செவ்வாய் என்ற ப்ராஜெக்டில் செவ்வாய் கிரகத்தின் நுணுக்கமான போட்டோக்களை கலர் கலராக சேமித்து வைத்திருக்கிறார்கள்.
உங்களுக்கே சொந்தமாக இணையத்தில் ஓர் ஒண்டுக் குடித்தனம்- ஒரு வலைப் பக்கம் தேவை என்றால் ஐந்து நிமிடத்தில் அமைத்துக்கொள்ளலாம். டைப் அடிக்கத் தெரிந்தால் போதும்; மற்றதெல்லாம் அவர்கள் பார்த்துக்கொள்கிறார்கள்.
ஜி மெயில்தான் இப்போது சூடான மெயிலை விட அதிகம் நாடப்படுகிறது. எல்லா இ-மெயில் கம்பெனிகளும் பிசுகிப் பிசுகி ஐம்பது மெகாபைட், நூறு மெகாபைட் என்று இடம் தந்துகொண்டிருந்தபோது கூகிள் மட்டும் ஒரேயடியாக ஆயிரம் எம்.பி. இலவசம் என்று அறிவித்துப் போட்டியாளர்களைப் பதறி ஓட வைத்தார்கள். பிறகு இது இரண்டாயிரத்தைத் தாண்டி இலவசமாக இன்னும் வளர்ந்துகொண்டே போகிறது.
இன்டர்நெட் பூராவும் அநியாயத்துக்குக் கொட்டிக் கிடக்கும் மற்றொரு விஷயம் செக்ஸ். குழந்தைகள் கூகிளில் தேடும்போது பலான சமாச்சாரங்கள் எதுவும் வந்துவிடக் கூடாதே என்பதற்காக முக்கியமான வார்த்தைகளை வைத்து மேற்படி சரக்கா என்பதை நிர்ணயித்து வடிகட்டி விடுகிறார்கள். ஆனால் படங்களைப் பொறுத்தவரை கம்ப்யூட்டருக்கு கண்ணில்லை. ஒரு படத்தைக் காட்டி பக்திப் படமா, பலான படமா என்று கம்ப்யூட்டரை சரியாகச் சொல்ல வைத்துவிட்டால் கேள்வி கேட்காமல் டாக்டர் பட்டம் கொடுக்கலாம். சில கூகிள் விஞ்ஞானிகள் சேர்ந்து இதற்கு ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறார்கள்.
மனித வடிவம், தோல் நிறம் எல்லாவற்றையும் எண்களாக மாற்றி ஸ்டாடிஸ்டிக்ஸ் கணக்குப் போட்டு படத்திலிருப்பது சம்திங் சம்திங்தான் என்பதை பெரும்பாலும் கண்டுபிடித்து விடுகிறார்கள்.
எந்த வார்த்தையை எந்த ஊர் ஜனங்கள் அதிகம் தேடுகிறார்கள் என்று தேதி வாரியாகப் படம் வரைந்து காட்டுகிறார்கள்.
அப்துல் கலாம் என்ற பெயரை கோவை மக்கள்தான் அதிகம் தேடுகிறார்கள்.
ஷகீலாவை கேரளத்து ரசிகர்கள் கூகிள் பூராத் தேடித் துரத்தியிருக்கிறார்கள்.
இந்தியாவின் டாப் டென் என்று பார்த்தால் பொதுவாக நாம் கிரிக்கெட் பற்றித்தான் அதிகம் விசாரித்திருக்கிறோம். அடுத்தபடி சானியா மிர்ஸா, ப்ரியங்கா சோப்ரா, நமீதா வருகிறார்கள்.
சில படிக்கிற பையன்கள் இந்திரா காந்தி யுனிவர்சிட்டியையும் தேடியிருக்கிறார்கள்.
ஆயிரக்கணக்கான x86 செர்வர்களில் தாங்களே உருவாக்கியுள்ள Linux-ல் தாங்களே உருவாக்கிய வெப்செர்வரில் எல்லாவற்றையும் ஓட்டுகிறார்கள்.அவர்கள் வெப் செர்வர் பெயர் GWS/2.1 அதாவது Google Web Server, current Version 2.1.அதாவது Apache-ன் கூகிள் வடிவம் என்கிறார்கள்.
கூகிள் செர்வர்கள் 450,000-ஐயும் ஓட்ட 20 மெகாவாட்டுகள் மின்சாரம் தேவையாம்.அதாவது மாதம் கூகிளுக்கு கரண்ட் பில் $2 மில்லியன்கள்.அம்மாடியோவ்!!!
Friday, August 12, 2011
வந்தே மாதரம் நாட்டு வணக்கம்

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே-அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே-அவர்
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து
சிறந்ததும் இந்நாடே-இதை
வந்தனை கூறி மனதில் இருத்தி, என்
வாயுற வாழ்த்தேனோ-இதை
'வந்தே மாதரம், வந்தே மாதரம்'
என்று வணங்கேனோ? 1
இன்னுயிர் தந்தெமை ஈன்று வளர்த்து, அருள்
ஈந்ததும் இந்நாடே- எங்கள்
அன்னையர் தோன்றி மழலைகள் கூறி
அறிந்ததும் இந்நாடே- அவர்
கன்னிய ராகி நிலவினி லாடிக்
களித்ததும் இந்நாடே-தங்கள்
பொன்னுடல் இன்புற நீர்விளை யாடி, இல்
போந்ததும் இந்நாடே-இதை
'வந்தே மாதரம், வந்தே மாதரம்'
என்று வணங்கேனோ? 2
மங்கைய ராயவர் இல்லறம் நன்கு
வளர்த்ததும் இந்நாடே-அவர்
தங்க மதலைகள் ஈன்றமு தூட்டித்
தழுவிய திந்நாடே-மக்கள்
துங்கம் உயர்ந்து வளர்கெனக் கோயில்கள்
சூழ்ந்ததும் இந்நாடே-பின்னர்
அங்கவர் மாய அவருடற் பூந்துகள்
ஆர்ந்ததும் இந்நாடே-இதை
'வந்தே மாதரம், வந்தே மாதரம்'
என்று வணங்கேனோ?
Thursday, June 16, 2011
ஓவியர் இளையராஜாவின் அற்புதப் படைப்புகள் -
Tuesday, June 7, 2011
தலைவன் சே குவேரா

ஜூன்14-birthday of சே குவேரா!!!
சே குவேரா அல்லது எல் சே என பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்ற்றோ குவேரா டி லா செர்னா (Ernesto Guevara de la Serna) (ஜூன் 14, 1928 - ஒக்டோபர் 9, 1967) அர்ஜென்டீனாவை பிறப்பிடமாகக் கொண்ட ஒரு சோசலிசப் புரட்சியாளர், மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதி, கியூபா மற்றும் பல நாடுகளின் (கொங்கோ உட்பட) புரட்சிகளில் பங்குபற்றிய போராளி எனப் பல முகங்களைக்கொண்டவர்.
சே குவேரா 1928 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் நாள் அர்ஜென்டீனாவில் உள்ள ரொசாரியோ என்னும் இடத்தில் பிறந்தார். ஸ்பானிய, பாஸ்க்கு, ஐரிய மரபுவழிகளைக் கொண்ட ஒரு குடும்பத்தில் ஐந்து பிள்ளைகளில் இவர் மூத்தவர். இவரது குடும்பம் இடதுசாரி சார்பான குடும்பமாக இருந்ததால் மிக இளம் வயதிலேயே அரசியல் தொடர்பான பரந்த நோக்கு இவருக்குக் கிடைத்தது. இவரது தந்தை, சோசலிசத்தினதும், ஜுவான் பெரோனினதும் ஆதரவாளராக இருந்தார். இதனால், ஸ்பானிய உள்நாட்டுப் போரில் ஈடுபட்ட குடியரசு வாதிகள் இவர் வீட்டுக்கு அடிக்கடி வருவதுண்டு. இது சோசலிசம் பற்றிய இவரது கருத்துக்களுக்கு வழிகாட்டியது.
வாழ்க்கை முழுவதும் இவரைப் பாதித்த ஆஸ்மா நோய் இவருக்கு இருந்தும் இவர் ஒரு சிறந்த விளையாட்டு வீரராக விளங்கினார். இவர் ஒரு சிறந்த "ரக்பி" விளையாட்டு வீரர். இவரது தாக்குதல் பாணி விளையாட்டு காரணமாக இவரை "பூசெர்" என்னும் பட்டப் பெயர் இட்டு அழைத்தனர். அத்துடன், மிக அரிதாகவே இவர் குளிப்பதால், இவருக்கு "பன்றி" என்னும் பொருளுடைய சாங்கோ என்ற பட்டப்பெயரும் உண்டு.
தனது தந்தையிடமிருந்து சதுரங்கம் விளையாடப் பழகிய சே குவேரா, 12 ஆவது வயதில் உள்ளூர் சுற்றுப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். வளர்ந்த பின்பும், பின்னர் வாழ்நாள் முழுவதும் இவர் கவிதைகளின் மீது ஆர்வம் கொண்டிருந்தார். நெரூடா, கீட்ஸ், மாச்சாடோ, லோர்க்கா, மிஸ்ட்ரல், வலேஜோ, வைட்மன் ஆகியோரது ஆக்கங்கள் மீது இவருக்குச் சிறப்பு ஆர்வம் இருந்தது.
குவேராவின் வீட்டில் 3000 நூல்களுக்கு மேல் இருந்தன. நூல்களை வாசிப்பதில் அவருக்கு இருந்த ஆர்வத்துக்கு இது ஒரு காரணம் எனலாம். இவற்றுள், மார்க்ஸ், போல்க்னர், கைடே, சல்காரி, வேர்னே போன்றவர்கள் எழுதிய நூல்களில் அவருக்குச் சிறப்பான ஆர்வம் இருந்தது. இவை தவிர நேரு, காப்கா, காமுஸ், லெனின் போன்றவர்களது நூல்களையும், பிரான்ஸ், ஏங்கெல்ஸ், வெல்ஸ், புரொஸ்ட் ஆகியோருடைய நூல்களையும் அவர் விரும்பி வாசித்தார்.
அவரது வயது அதிகரித்த போது, அவருக்கு இலத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களான குயிரோகா, அலெக்ரியா, இக்காசா, டாரியோ, ஆஸ்டூரியாஸ் போன்றோருடைய ஆக்கங்களின் பால் ஈடுபாடு ஏற்பட்டது. செல்வாக்கு மிக்க தனி நபர்களின் கருத்துருக்கள், வரைவிலக்கணங்கள், மெய்யியற் கருத்துக்கள் போன்றவற்றை எழுதிவந்த குறிப்புப் புத்தகத்தில் இவர்களுடைய கருத்துக்களையும் அவர் குறித்து வந்தார். இவற்றுள், புத்தர், அரிஸ்ட்டாட்டில் என்போர் பற்றிய ஆய்வுக் குறிப்புக்கள், பேட்ரண்ட் ரஸ்ஸலின் அன்பு, தேசபக்தி என்பன குறித்த ஆய்வு, ஜாக் லண்டனின் சமூகம் பற்றிய கருத்துக்கள், நீட்சேயின் இறப்பு பற்றிய எண்ணங்கள் என்பனவும் அடங்கியிருந்தன. சிக்மண்ட் பிராய்டின் ஆக்கங்களாலும் கவரப்பட்ட சே குவேரா, அவரைப் பல வேளைகளில் மேற்கோள் காட்டியுள்ளார்.
1948 ஆம் ஆண்டில் மருத்துவம் படிப்பதற்காக சேகுவேரா, புவனஸ் அயர்ஸ் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். ஆனால் 1951 ஆம் ஆண்டில் படிப்பில் இருந்து ஓராண்டு விடுப்பு எடுத்துக்கொண்டு, அவரது நண்பரான ஆல்பர்ட்டோ கிரெனாடோவுடன் சேர்ந்து கொண்டு, மோட்டார் ஈருளியில் தென்னமெரிக்கா முழுதும் பயணம் செய்தார். பெரு நாட்டில் அமேசான் ஆற்றங்கரையில் இருந்த தொழுநோயாளர் குடியேற்றம் ஒன்றில் சில வாரங்கள் தொண்டு செய்வது அவரது இப்பயணத்தின் இறுதி நோக்கமாக இருந்தது. இப்பயணத்தின் போது அவர் எடுத்த குறிப்புக்களைப் பயன்படுத்தி "மோட்டார் ஈருருளிக் குறிப்புக்கள்" (The Motorcycle Diaries) என்னும் தலைப்பில் நூலொன்றை எழுதினார். இது பின்னர் நியூ யார்க் டைம்சின் அதிக விற்பனை கொண்ட நூலாகத் தெரிவு செய்யப்பட்டது. பின்னர் 2004 இல், இதே பெயரில் எடுக்கப்பட்ட திரைப்படம் விருதுகளையும் பெற்றது.
பரவலான வறுமை, அடக்குமுறை, வாக்குரிமை பறிப்பு என்பவற்றை இலத்தீன் அமெரிக்கா முழுதும் கண்ணால் கண்டதினாலும், மார்க்சிய நூல்களின் செல்வாக்கும் ஒன்று சேர ஆயுதம் ஏந்திய புரட்சி மூலமே சமூக ஏற்றத் தாழ்வுகளுக்குத் தீர்வு காண முடியும் என சே குவேரா நம்பலானார். பயணத்தின் முடிவில், இவர், இலத்தீன் அமெரிக்காவைத் தனித்தனி நாடுகளாகப் பார்க்காமல், ஒட்டு மொத்தமான கண்டம் தழுவிய விடுதலைப் போர் முறை தேவைப்படும் ஒரே பகுதியாகப் பார்த்தார். எல்லைகளற்ற ஹிஸ்பானிய அமெரிக்கா என்னும் சே குவேராவின் கருத்துரு அவரது பிற்காலப் புரட்சி நடவடிக்கைகளில் தெளிவாக வெளிப்பட்டது. ஆர்ஜெண்டீனாவுக்குத் திரும்பிய சேகுவேரா தனது படிப்பை முடித்து 1953 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் மருத்துவ டிப்ளோமாப் பட்டம் பெற்றார்.
1953 ஜூலையில் மீண்டும் பயணமொன்றைத் தொடங்கிய சேகுவேரா, இம்முறை பொலீவியா, பெரு, ஈக்குவடோர், பனாமா, கொஸ்தாரிக்கா, நிக்கராகுவா, ஹொண்டூராஸ், எல் சல்வடோர் ஆகிய நாடுகளுக்குச் சென்றார். அதே ஆண்டு டிசம்பரில் சேகுவேரா குவாதமாலாவுக்குச் சென்றார். அங்கே மக்களாட்சி அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் ஒன்றுக்குத் தலைமை தாங்கிய குடியரசுத் தலைவர் ஜாக்கோபோ ஆர்பென்ஸ் குஸ்மான் என்பவர் நிலச் சீர்திருத்தங்களின் மூலமும் பிற நடவடிக்கைகளாலும் பெருந்தோட்ட (latifundia) முறையை ஒழிப்பதற்கு முயன்று கொண்டிருந்தார். உண்மையான புரட்சியாளனாக ஆவதற்குத் தேவையான அனுபவங்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் குவேரா, குவாத்தமாலாவிலேயே தங்கிவிட முடிவு செய்தார்.
குவாத்தாமாலா நகரில், சே குவேராவுக்கு ஹில்டா கடேயா அக்கொஸ்தா என்னும் பெண்ணின் பழக்கம் கிடைத்தது. இவர் பெரு நாட்டைச் சேர்ந்த ஒரு பொருளியலாளரும், இடதுசாரிச் சார்புள்ள அமெரிக்க மக்கள் புரட்சிகர கூட்டமைப்பு (American Popular Revolutionary Alliance) என்னும் இயக்கத்தின் உறுப்பினரும் ஆவார். இதனால் அவருக்கு அரசியல் மட்டத்தில் நல்ல தொடர்புகள் இருந்தன. இவர் ஆர்பென்சின் அரசாங்கத்தின் பல உயரதிகாரிகளைச் சேகுவேராவுக்கு அறிமுகப்படுத்தினார். அத்துடன் பிடல் காஸ்ட்ரோவுடன் தொடர்புகளைக் கொண்டிருந்தவர்களும், கியூபாவைவிட்டு வெளியேறி வாழ்ந்துவந்தவர்களுமான தொடர்புகளும் சே குவேராவுக்குக் கிடைத்தன. இக் காலத்திலேயே "சே" என்னும் பெயர் இவருக்கு ஏற்பட்டது. "சே" என்பது நண்பர் அல்லது தோழர் என்னும் பொருள் கொண்ட ஆர்ஜெண்டீனச் சொல்லாகும்.
கியூபாவில் புரட்சி
சில காலத்தின் பின்னர் சே குவேரா தன்னை பிடல் காஸ்ட்ரோவின் போராட்ட இயக்கத்தில் இணைத்துக்கொண்டார். அவ்வியக்கம் 1959 இல் கியூபாவின் ஆட்சி அதிகாரத்தினைக் கைப்பற்றியது. கியூபாவின் புதிய அரசில் பல முக்கியமான பதவிகளை சே குவேரா வகித்திருந்தார். அக்காலகட்டத்தில் கரந்தடிப் போர்முறை பற்றிய பல கட்டுரைகளையும், புத்தங்களையும் எழுதியிருந்தார். அதன்பின்னர், கொங்கோ-கின்ஸாசா (தற்போது கொங்கோ ஜனநாயகக் குடியரசு) மற்றும் பொலிவியா போன்ற நாடுகளின் சோசலிசப் போராட்ட வளர்ச்சிக்கு தனது பங்களிப்பினை அளிப்பதற்காக 1965 ஆம் ஆண்டில் கியூபாவில் இருந்து வெளியேறினார்.
பொலிவியாவில் சே குவேரா
பொலிவியாவில் சி.ஐ.ஏ மற்றும் அமெரிக்க சிறப்பு இராணுவத்தினது இராணுவ நடவடிக்கை ஒன்றின்போது சே கைது செய்யப்பட்டார். பொலிவிய இராணுவத்தினரால் வல்லெகிராண்டிற்கு அருகில் உள்ள லா கிகுவேரா என்னுமிடத்தில் ஒக்டோபர் 9, 1967 இல் சே குவேரா கொல்லப்பட்டார். சாட்சிகள் மற்றும் கொலையில் பங்குபற்றியவர்களிடமிருந்து கிடைத்த தகவலின்படி, சட்டத்தின் முன் நிறுத்தப்படாமல் கொல்லப்பட்டது உறுதிப்படுத்தப்படுகிறது.கைதியாக அகப்பட்டு நின்ற நேரத்தில் கூட மரணத்தை வரவேற்றார்.தன்னை கொல்ல வந்தவனைப் பார்த்தும் ஒரு நிமிடம் பொறு நான் எழுந்து நிற்கிறேன் பிறகு என்னை சுடு என்று கூறி எழுந்து நின்றிருக்கிறார்.(காலில் அப்போது குண்டடி பட்டிருந்தது)
அவரது மரணத்தின்பின், சே குவேரா உலகிலுள்ள சோசலிச புரட்சி இயக்கங்களினால் மிகவும் மரியாதைக்குரியவராக கொண்டாடப்படுகிறார். சே 1966ம் ஆண்டின் கடைசிகளில் கொரில்லாப் போரை வழி நடத்தும் பொருட்டு உருகுவே நாட்டு போலி பாஸ்போர்ட்டுடன் பொலிவியா நாட்டுக்குள் நுழைந்தார். பல காரணங்களால் பொலிவியா நாட்டைத் தேர்ந்தெடுத்தார் என்று நம்பப்படுகிறது. அமெரிக்கா பொலிவியாவைவிட கரிப்பியன் பேசின் நாடுகளே தங்கள் பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்கக்கூடும் என்று நம்பியதும், அதனால் அமெரிக்காவின் பார்வை பொலிவியா மீது அவ்வளவு தீர்க்கமாக விழவில்லை என்பதும் ஒரு காரணம் . இரண்டாவதாக பொலிவியாவின் ஏழ்மையும் அங்கு நிலவிய சமூக மற்றும் பொருளாதார நிலைகளும் எந்நேரமும் அங்கு புரட்சி வெடிக்க சாதகமாக இருந்தது . மூன்றாவதாக பொலிவியா ஐந்து பிற நாடுகளுடன் தன் எல்லையை பகிர்ந்து கொண்டிருந்தது . பொலிவியாவில் கொரில்லாப் போராட்டம் வெற்றி பெறுமேயானால் அதை மற்ற ஐந்து நாடுகளுக்கும் பரவச் செய்துவிடலாம் என்று குவேரா நினைத்தது. (ஆனால் ஃபிடெல் காஸ்ட்ரோ தன்னை வஞ்சித்து விட்டதாக சே குவேரா மிகவும் வருந்தியதாக 1998ம் ஆண்டு ஓய்வு பெற்ற பொலிவிய ராணுவ அதிகாரி ஒருவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். நினோ டி குஸ்மான் என்ற அந்த அதிகாரி குவேராவை சுட்டுக் கொல்வதற்கு முன்பு அவனிடம் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்ததாகவும் அப்போது சே அவனுடைய மனக்குமுறலை வெளியிட்டதாகவும் கூறினார். தான் பெரு நாட்டில் புரட்சி செய்ய முடிவெடுத்ததாகவும் ஆனால் காஸ்ட்ரோ தான் தன்னை வற்புறுத்தி பொலிவிய நாட்டில் கலகம் விளைவிக்கக் கூறியதாகவும் சே குவேரா கூறியதாக தகவல் வெளியாயிற்று !!!! மேலும் சே குவேரா பெரு நாட்டின் விவசாயிகள் தன்னுடைய புரட்சிக்கு ஆதரவு கொடுத்திருப்பார்கள் என்றும் பொலிவிய நாட்டில் விவசாய மறுமலர்ச்சி திட்டத்தால் மக்கள் அவ்வளவு அதிருப்தியடையாததால் அவர்களின் ஆதரவு எதிர்ப்பார்த்த அளவுக்குக் கிடைக்கவில்லை என்றும் கூறியதாக அந்த அதிகாரி கூறியிருந்தார்.)
Thursday, June 2, 2011
பாரதியார் கவிதைகளில் பிடித்தவை!!



மனதில் உறுதி வேண்டும்
மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கினப் பொருள் கைப்பட வேண்டும்
கனவு மெய்ப்பட வேண்டும்
கைவசமாவது விரைவில் வேண்டும்
தனமும் இன்பமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும்
கண் திறந்திட வேண்டும்
காரியத்தில் உறுதி வேண்டும்
பெண் விடுதலை வேண்டும்
பெரிய கடவுள் காக்க வேண்டும்
மண் பயனுற வேண்டும்
வானகம் இங்கு தென் பட வேண்டும்
உண்மை நின்றிட வேண்டும்
ஓம்! ஓம்! ஓம்! ஓம்!
காலா!!
தேடிச் சோறுநிதந் தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிப் கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?
அறிவிலே தெளிவு,நெஞ்சிலே உறுதி,
அகத்திலே அன்பினோர் வெள்ளம்,
பொறிகளின்மீது தனியர சாணை,
பொழுதெலாம் நினதுபே ரருளின்
நெறியிலே நாட்டம்,கரும யோகத்தில்
நிலைத்திடல் என்றிவை யருளாய்
குறிகுண மேதும் இல்லதாய் அனைத்தாய்க்
குலவிடு தனிப்பரம் பொருளே!
யார்க்கும் குடியல்லேன் யானென்ப
தோர்ந்தனன் மாயையே!-உன்றன்
போர்க்கஞ்சு வேனோ பொடியாக்குவேன்
உன்னை-மாயையே!
காலா!உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்;என்றன்
காலருகே வாடா!சற்றே உனை மிதிக்கிறேன்
செந்தமிழ் நாடு
செந்தமிழ் நாடெனும் போதினிலே-இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே-எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே-ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே (செந்தமிழ்)
வேதம் நிறைந்த தமிழ்நாடு-உய்
வீரம் செறிந்த தமிழ்நாடு-நல்ல
காதல் புரியும் அரம்பையர்போல்-இளங்
கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு (செந்தமிழ்)
காவிரி தென்பெண்ணை பாலாறு-தமிழ்
கண்டதோர் வையை பொருனைநதி-என
மேவி யாறு பலவோடத்-திரு
மேனி செழித்த தமிழ்நாடு. (செந்தமிழ்)
முத்தமிழ் மாமுனி நீள்வரையே-நின்று
மொய்ம்புறக் காக்கும் தமிழ்நாடு-செல்வம்
எத்தனை யுண்டு புவிமீதே-அவை
யாவும் படைத்த தமிழ்நாடு. (செந்தமிழ்)
நீலத் திரைக்கட லோரத்திலே-நின்று
நித்தம் தவஞ்செய் குமரிஎல்லை-வட
மாலவன் குன்றம் இவற்றிடையே-புகழ்
மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு. (செந்தமிழ்)
கல்வி சிறந்த தமிழ்நாடு-புகழ்க்
கம்பன் பிறந்த தமிழ்நாடு-நல்ல
பல்வித மாயின சாத்திரத்தின்-மணம்
பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு. (செந்தமிழ்)
வள்ளுவன் தன்னை உலகினுக்கே-தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு-நெஞ்சை
அள்ளும் சிலப்பதி காரமென்றோர்-மணி
யாரம் படைத்த தமிழ்நாடு. (செந்தமிழ்)
சிங்களம் புட்பகம் சாவக-மாதிய
தீவு பலவினுஞ் சென்றேறி-அங்கு
தங்கள் புலிக்கொடி மீன்கொடியும்-நின்று
சால்புறக் கண்டவர் தாய்நாடு. (செந்தமிழ்)
விண்ணை யிடிக்கும் தலையிமயம்-எனும்
வெற்பை யடிக்கும் திறனுடையார்-சமர்
பண்ணிக் கலங்கத் திருள்கெடுத்தார்-தமிழ்ப்
பார்த்திவர் நின்ற தமிழ்நாடு. (செந்தமிழ்)
சீன மிசிரம் யவனரகம்-இன்னும்
தேசம் பலவும் புகழ்வீசிக்-கலை
ஞானம் படைத்தொழில் வாணிபமும்-மிக
நன்று வளர்த்த தமிழ்நாடு. (செந்தமிழ்)
Wednesday, June 1, 2011
JOBNEWS

Wipro : Eligibility for WASE 2011:
B.Sc. (CS/ IT/ Electronics / Physics / Mathematics / Statistics) / BCA / BCM)
50% aggregate marks in 10th & 12th
60 % aggregate marks in graduation till date
Mathematics or statistics as one subject in 12th – Mandatory
Only 2011 students are eligible or students who are currently in the final year of graduation
Chennai
Date: 7th May to 11th June - Every Monday to Saturday
Venue: Wipro Technologies, CDC3, 105, Anna Salai, Guindy, Chennai. (Next to ABT Maruthi Showroom)
Time: 9:30 am - 11:30 am
Contact Person: RS Aiswarya
Bangalore
Date: 7th May to 31st May - Every Monday to Saturday
Venue: Wipro Technologies, , Ganappa Towers, 53/1, Hosur Main Road, Madivala, Bangalore 68.
Landmark: Next to Madivala Police Station
Time: 9:30 am - 11:30 am
Contact Person: Shashank Vagale
Syntel Campus Recruitment : http://www.syntelcampus.com/registration.html
TCS for Freshers : http://www.careers.tcs.com/CareersDesign/Jsps/CareersHome.jsp
Cognizant for Freshers : https://careers.cognizant.com/OffCampus/GeneralInstruction.aspx
HCL for Freshers : https://wf20.myhcl.in/RMSExternal/
Infosys : Send Resume to Process_executives@infosys.com (KPO/BPO) & graduates@infosys.com (Off Campus) & freshers@infosys.com (Fresher)
Tech Mahindra Off Campus : Send Resume to bscfreshers@techmahindra.com / bscfresher@techmahindra.com
--
Interview Tips & Job Alerts @ www.gfstips.blogspot.com
==================
REGARDS SENTHAMIL.V
Sunday, May 29, 2011
விஜய் டி.வி-The real awrads




விஜய் டி.வி. சார்பில் ஆண்டுதோறும் பிரமாண்டமான முறையில், கலை நிகழ்ச்சிகளுடன் இசை விருதுகள் வழங்கப்படுகிறது. அதேபோல் இந்தாண்டும் 2010ம் ஆண்டுக்கான இசை விருதுகள் வழங்கப்பட்டன. அதில் சிறந்த இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் தேர்வு செய்யப்பட்டார்.
சிறந்த பாடகருக்கான விருது, "விண்ணைத்தாண்டி வருவாயா" படத்தில் "ஹோசானா..." பாடலுக்காக, விஜய் பிரகாஷ்க்கு வழங்கப்பட்டது.
சிறந்த பாடகிக்கான விருது, "விண்ணைத்தாண்டி வருவாயா" படத்தில் "மன்னிப்பாயா..." பாடலுக்காக, ஸ்ரேயா ஹோசலுக்கும், "ஆயிரத்தில் ஒருவன்" படத்தில் "மாலை நேரம்..." பாடலுக்காக, ஆண்ட்ரியாவுக்கும் வழங்கப்பட்டது.
சிறந்த பாடலாசிரியருக்கான விருது, நா.முத்துக்குமாருக்கு வழங்கப்பட்டது.
நடிகர் பாடிய பாடலுக்கான விருது, "மன்மதன் அம்பு" படத்தில், "நீல வானம்..." பாடலுக்காக கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டது.
சிறந்த பாடல் கம்போசிங்கான விருது, "பையா" படத்தில் "என் காதல் சொல்ல நேரமில்லை..." பாடலுக்காக, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கு வழங்கப்பட்டது.
புதுமுக இசையமைப்பாளர் விருது, "தமிழ்படம்" படத்திற்காக கண்ணனுக்கு வழங்கப்பட்டது.
சிறந்த சவுண்ட் மிக்சிங்கான விருது, கே.ஜெ.சிங், தீபக், ரசூல் பூக்குட்டி ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
வாழ்நாள் சாதனையாளர் விருது, பிரபல பின்னணி பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ்க்கு வழங்கப்பட்டது.
இசை சக்கரவர்த்தி விருது, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு வழங்கப்பட்டது.
இந்திய அளவில் இசையமைப்பில் சாதனை புரிந்ததற்காக, ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது.
2010ம் ஆண்டின் சிறந்த ஆல்பம் விருது, "விண்ணைத்தாண்டி வருவாயா" படத்திற்கு வழங்கப்பட்டது.
பிரபல பின்னணி பாடகருக்கான விருது "ராவணன்" படத்தில் "உசுறே போகுது..." பாடலுக்காக, கார்த்திக்கு வழங்கப்பட்டது.
சிறந்த டூயட் பாடலுக்கான விருது, "பையா" படத்தில் "அடடா மழை..." பாடலுக்கு கிடைத்தது.
சிறந்த மெலோடிஸ் பாடலுக்கான விருது, "பையா" படத்தில் "துளி.. துளி..." பாடலுக்கு கிடைத்தது.
Wednesday, May 25, 2011
proud to be an INDIAN




"I AM AN INDIAN'
The co-founder of Sun Microsystems- Vinod Khosla
the creator of Pentium chip (needs no introduction as 90% of the today's computers run on it)-Vinod Dahm
The third richest man on the world According to the latest report on Fortune Magazine, it is Azim Premji, who is the CEO of Wipro Industries. The Sultan of Brunei is at 6th position now.
The founder and creator of Hotmail (Hotmail is world's No.1 web based email program)- Sabeer Bhatia
The president of AT & T-Bell Labs (AT & T-Bell Labs is the creator of program languages such as C, C++, Unix to name a few)- Arun Netravalli .
the GM of Hewlett Packard-Rajiv Gupta
the new MTD (Microsoft Testing Director) of Windows 2000, responsible to iron out all initial problems?-A. Sanjay Tejwrika .
the Chief Executives of CitiBank-Mckensey & Stanchart,Victor Menezes, Rajat Gupta, and Rana Talwar.
We Indians are the wealthiest among all ethnic groups in America, even faring better than the whites and the natives. There are 3.22 millions of Indians in USA (1.5% of population). YET,
38% of doctors in USA are Indians.
12% scientists in USA are Indians.
36% of NASA scientists are Indians.
34% of Microsoft employees are Indians.
28% of IBM employees are Indians.
17% of INTEL scientists are Indians.
13% of XEROX employees are Indians.
You may know some of the following facts. These facts were recently published in a German magazine, which deals with WORLD HISTORY FACTS ABOUT INDIA.
1. India never invaded any country in her last 1000 years of history.
2. India invented the Number system. Aryabhatta invented 'zero.'
3. The world's first University was established in Takshila in 700BC. More than 10,500 students from all over the world studied more than 60 subjects. The University of Nalanda built in the 4th century BC was one of greatest achievements of ancient India in the field of education
4. According to the Forbes magazine, Sanskrit is the most suitable language for computer software.
5. Ayurveda is the earliest school of medicine known to humans.
6. The art of navigation was born in the river Sindh 5000 years ago. The very word "Navigation" is derived from the Sanskrit word NAVGATIH.
7. The value of pi was first calculated by Budhayana, and he explained the concept of what is now known as the Pythagorean Theorem. British scholars have last year (1999) officially published that Budhayan's works dates to the 6th Century, which is long before the European mathematicians.
8. Algebra, trigonometry and calculus came from India. Quadratic equations were by Sridharacharya in the 11th Century; the largest numbers the Greeks and the Romans used were 106 whereas Indians used numbers as big as 1053.
9. According to the Gemological Institute of America, up until 1896, India was the only source of diamonds to the world
10. Chess was invented in India.
பெண்


அன்று!
தந்தையின் கண்ணீர்,அன்னையின் அழுகுரல்
கடந்து மண்ணில் விழுந்தேன் நான்...
மண்ணைத் தொட்டதும் என்னைத் தொட்டனரோ
இல்லையோ... என் பெண்மையைத் தொட்டு என்னைத்
தொடவில்லை எவரும்..
கரைபடிந்த மனிதரெல்லாம் கரைவேட்டிகளிலிருக்க
கள்ளமறியா நாங்கள் மட்டும் கரைந்தோம்....
கருவறைக்குமின்றி கல்லறைக்குமின்றி கருவிலேயே
கலைந்தோம்....
தீண்டாமலிருக்க நாங்கள் என்ன பாம்பா?
தொடமலிருக்க நாங்கள் என்ன மின்சாரம?
வீட்டினுள் சிறை,கயவருக்கு இரை
அடிமைகளாய் சிறை,இதுவே எங்கள் வரையறை..
எதிர்பார்ப்புகள் எமாற்றங்களான பின் எண்ணங்களும்
எழுச்சியுறவில்லை...
நளினமென்னும் பெயரால் நசுக்கப்பட்டோம்..
அழகென்னும் பெயரால் அடிமையக்கப்பட்டோம்..
வெட்கமென்னும் பெயரால் வெகுளியாக்கப்பட்டோம்..
இன்று
மலர்ப்பாதைகள் எங்களை வரவேற்கத் தயாராக
உள்ளபோது நாங்கள் ஏன் முட்களுக்கு இரத்ததானம்
செய்யவேண்டும்?...
சொர்க்கம் எங்களைச் சிங்காரிக்கத் தயாராக
உள்ளபோது நாங்கள் ஏன் நரகத்தில் நாற்காலி கேட்க
வேண்டும்?...
என பட்டறிவு பகுத்தறிவூட்ட பயணிக்கின்றோம்
புதுவுலகில்..
சாதனைகள் மலைக்குமளவு சாதனைகள் புரிய
மனமிருக்க வானளவில் வளர்ந்தோம்...
தரணியெங்கும் பெண்கள் தலையெடுக்க
தனிச்சிறப்புடன் உயர்ந்தோம்..
பெண்வளர்ச்சியில்லா சமுதாயவளர்ச்சியில்லை என
பார் போற்ற திகழ்ந்தோம்..
பெண்வளர்ச்சியை மண்வளர்ச்சியாக்கி
மகத்துவங்கள் புரிகிறோம் இன்று..
நாளை!
ஆணுக்கு பெண் என்பது மேலாகி ஆணை விடப் பெண்
என்றாகும்..
பொறுமையுடன் பேறாற்றலும்,
அடக்கமுடன் ஆளுமையும்,
நளினமுடன் நாகரீகமும்,
அச்சமுடன் ஆர்வமும்,
நாணமுடன் நாவாற்றலும்,
மடமுடன் மாண்பும்,
பயிர்ப்புடன் பண்பும்,
கொண்டோராய் உலகை வென்றோராய்....
கனவுமங்கையாய்.......
by
YOURS SENTHAMIL
தலைவன் பிரபாகரன்

தமிழன் யார் என்பதை அகிலமே திரும்பிப் பார்க்க வைத்தவர் ஒரு நாட்டின் வரலாற்றை மாத்தரமல்ல உலகின் பெரும் பகுதி வரலாற்றையே தலைகீழாக புரட்டிப் போட்ட ஈழப் போராட்டத்தின் நாயகன் பெயர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உலகத் தமிழினத்தின் எண்ணம், சொல், செயல், மாற்றமடையக் காரணமானவர் பிரபாகரன்தமிழர்களுக்கு தமிழுணர்வை ஊட்டியவர். சோம்பிக் கிடந்த இனத்தைத் தட்டியெழுப்பினவர் என்பதோடு நிறுத்த முடியாது. பூமிப் பரப்பெல்லாம் தமிழின் விதை விதைக்கக் காரணமானவர் அவர்தான.; சென்ற இடத்தில் மறைந்து வாழ்ந்த தமிழர்களை நான் தமிழன் என்று துணிந்து சொல்ல வைத்தவர் பிரபாகரன் தான் .தமிழன் யார் என்பதை அகிலமே திரும்பிப் பார்க்க வைத்தவர் ஒரு நாட்டின் வரலாற்றை மாத்தரமல்ல உலகின் பெரும் பகுதி வரலாற்றையே தலைகீழாக புரட்டிப் போட்ட ஈழப் போராட்டத்தின் நாயகன் பெயர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உலகத் தமிழினத்தின் எண்ணம், சொல், செயல், மாற்றமடையக் காரணமானவர் பிரபாகரன்
தமிழர்களுக்கு தமிழுணர்வை ஊட்டியவர். சோம்பிக் கிடந்த இனத்தைத் தட்டியெழுப்பினவர் என்பதோடு நிறுத்த முடியாது. பூமிப் பரப்பெல்லாம் தமிழின் விதை விதைக்கக் காரணமானவர் அவர்தான.; சென்ற இடத்தில் மறைந்து வாழ்ந்த தமிழர்களை நான் தமிழன் என்று துணிந்து சொல்ல வைத்தவர் பிரபாகரன் தான் .இனித் தமிழர் வரலாறு தூக்க நிலைக்குத் திரும்ப வாய்ப்பில்லை அவர் அடியெடுத்த போராட்ட மரபு தொடரும். கூலிகள் என்றும் வந்தேறு குடிகள் என்றும் நாதியற்றவர்கள் என்றும் தூற்றப்பட்ட உலகத் தமிழர்களை வலிமை பெற்று உரிமை கோர வைத்தவர் தலைவர் பிரபாகரன்.இணையத்தில் தமிழ் உலகின் முக்கிய மொழிகளில் ஒன்றாகத் திகழக் காரணமானவர் தமிழியலுக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் ஊக்கு கருவியாகத் திகழ்பவர் தமிழ் இலக்கியம், தமிழ்ப் பண்பாடு, தமிழன் தோற்றம், வளர்ச்சி பற்றிய ஆய்வுக்குத் தோன்றாத் துணையாக நிற்பவர்பலரை வரலாறு படைக்கின்றது ஒரு சிலர் வரலாற்றைப் படைக்கிறார்கள் அந்தச் சிலரில் ஒருவர் பிரபாகரன். மிக விரைவில் பிரபாகரன் யுகம் தோன்றும் அப்போது உலகம் நினைத்துப் பார்க்காத உயரத்திற்க்குத் தமிழினத்தைப் பிரபாகரன் தூக்கிச் சென்று நிறுத்தியதைத் தமிழினம் உணரும்.
அன்று தொட்டு இன்று வரை தமிழரின் போரட்டம் அற வழியைத் தழுவி நிற்கின்றது அகிம்சை வழியிலும் சரி, ஆயுத வழியிலும் சரி தமிழர் வரித்துக் கொண்ட போராட்டம் தர்மத்தின் நியமத்தில் நெறிப்பட்டு நிற்கின்றது அவர் நடத்திய ஈழவிடுதலைப் போர் தார்மீக அடிப்படையிலானது. அது தமிழர்களின் ஆன்மபலமாகவம் இருந்து வருகிறது.சிங்களவர்கள் உண்மையான புத்த மதத்தினராக இருந்தால் தமிழீழ விடுதலைப் போருக்கான அவசியம் இராது சமாதானப் பேச்சென்றாலும் சரி, போர் என்றாலும் சரி, சிங்களவர்கள் நேர்மை, நிதானம், காருண்யம் அற்றவர்களாக வெளிப்படுகிறார்கள் சிங்களப் பயங்கரவாதம் ஈழத் தமிழர்களின் தேசிய ஆன்மாவில் விழுத்திய வடுக்கள் என்றுமே மாறப்போவதில்லை.
“ விடுதலைப் போராட்டம் என்பது இரத்தம் சிந்தும் புரட்சிகர அரசியல் பாதை’ என்று பிரபாகரன் மிகச் சுருக்கமாகக் கூறியிருக்கிறார். அவர் தொடர்ந்து பேசுகிறார் விடுதலை என்ற இலட்சியத்தை நாம் இலகுவாகத் தேர்ந்தெடுக்கவில்லை. வரலாறுதான் அதை எம்மிடம் வலுக்கட்டாயமாகக் கையளித்துள்ளது சுதந்திரம் வேண்டுவதைத் தவிர வேறு வழி எதையும் வரலாறு எமக்கு விட்டு வைக்கவில்லை .
தமிழர்களை ஏமாற்றுவதும் அடிமை கொள்ளும் நோக்குடன் இன அழிப்புச் செய்வதும் சிங்கள தேசத்தின் பாரம்பரிய நடைமுறை. தற்காக புத்த மதத்தைத் துணைக்கு அழைக்க அவர்கள் தயங்கியதில்லை சிங்கள மக்களின் பாலி மொழி இதிகாசமான மகாவம்சத்தின் நாயகனான துட்ட காமினி போர் மரபை மீறீத் தமிழ் மன்னன் எல்லாளனை வஞ்சகமாகக் கொன்றான் பல்லாயிரம் தமிழர்களையும் அதே போரில் அவன் கொன்றான்.
இரத்த வெறி அடங்கியபிறகு அவன் சோர்வடைந்து மாளிகை உப்பரிகையில் படுத்திருந்தான் உயிர்ப்பலி அவனை துயரடையச் செய்ததாக மாகவம்சம் கூறுகிறது அவனுக்கு ஆறதல் மொழி கூறுவதற்காக எட்டு புத்த பிக்குகள் வான் மூலம் பறந்து அவனிடம் வந்து சேர்ந்தனர்.புத்த மதத்தைச் செராதவர்களைக் கொல்வதில் பாவமில்லை என்ற ஞான உபதேசத்தை பிக்குகள் மன்னனுக்கு வழங்கி அவனுக்குப் புத்துணர்ச்சி ஊட்டியதாக மகாவம்சம் கூறுகிறது அண்மையில் புத்த பிக்கு ஒருவர் வெளியிட்ட ஆங்கில ஆய்வு நூலில் சிங்கள தேசியத்தின் அதியுச்சம் துட்டகாமினியின் தமிழ்ப் படுகொலைகளின் போது எட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.சிங்கள பௌத்தம் என்ற புதிய மதத்தைச் சிங்களப் பேரினவாதிகள் உருவாக்கியுள்ளனர் திவ்வியஞான சபையைச் சேர்ந்த (Theosophical society ) காலஞ்சென்ற கிருஷ்ணமூர்த்தி கொழும்பு வந்த போது இதைக் கடுமையாகச் சாடியுள்ளார் .
சிறிலங்கா தனது அரசியல் சாசனத்தின் மூலம் புத்த மதத்திற்கு மேலிடம் வழங்கியுள்ளது புத்த மதத்தைத் பாதுகாத்தல் அரசின் பொறுப்பு என்று அரசியல் சாசனம் இடித்துரைக்கிறது. சிறிலங்கா மதச் சார்புள்ள நாடு. படிப்படியாகப் பிற மதங்களின் சுதந்திரம் பறிக்கப்படுகிறதுதமிழ் நாட்டிலும் தமிழீழத்திலும் தமிழர் மத்தியில் புத்த மதம் முன்னர் செழித்தோங்கி இருந்தது 7ம் நூற்றாண்டில் தொடங்கிய சிவ மதத்தின் மறுமலர்ச்சிக்குப் பிறகு இரு பகுதிகளிலும் புத்த மதம் மங்கிவிட்டது ஆனால் வரலாற்றுச் சின்னங்கள் கிடைக்கின்றன.ஈழத் தமிழர் வாழும் பகுதிகளில் புத்த சின்னங்களும், புத்த கோயில்களின் எச்சங்களும் காணப்படுகின்றன இவை சிங்கள பௌத்தத்தின் அடையாளங்கள் என்று சிங்கள பௌத்த பேரினவாதிகள் புதிய வரலாறு படைக்கின்றனர் யாழ் கந்தரோடையிலுள்ள புத்த மத இடிபாடுகள் சிங்கள பௌத்தத்திற்கு உரியவை என்ற வாதம் நிறுவப்படுகிறது.
கந்தரோடை இடிபாடுகளுக்கு சிங்களப் பெயர் சூட்டப் பட்டுள்ளதோடு சிங்களப் புத்த பிக்குகளும் அங்கு நிலைகொண்டுள்ளனர் பிக்குகளின் பாதுகாப்பிற்காக சிங்கள இராணுவ அணி நிறுத்தப்பட்டுள்ளது பாலஸ்தீன அரபு மக்களின் பூர்வீக நிலத்தை ஆக்கிரமிக்கும் யூத அரசு போலி வரலாற்று செய்திகளைக் கூறுவது வழமை.பழைய ஏற்பாட்டில் இருந்து எடுக்கப்பட்ட பெயர்களை ஆக்கிரமிப்புச் செய்த நிலத்திற்குச் சூட்டியபின் அது புராதான கால யூத நிலம் என்று உரிமை கோருவது இஸ்ரேலிய நடைமுறை இதைச் சிங்கள அரசும் பின்பற்றுகிறது சிறிலங்கா சுதந்திரம் பெற்ற நாட்தொட்டுத் தமிழர் நிலத்தில் சிங்களக் குடியேற்றங்கள் இடைவிடாது நடக்கின்றன.எந்தக் கட்சி ஆட்சியைப் பிடித்தாலும் வெப்ப வலய மேம் பாட்டுத் திட்டம் என்ற பெயரில் சிங்களக் குடியேற்றம் தமிழர் எதிர்ப்பையும் மீறி முன்னெடுக்கப் படுககின்றது இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படை தமிழர்களை விரட்டுவதற்கும் குடியேற்ற வாசிகளுக்குப் பாதுகாப்பு வழங்குவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
தமிழர் நிலத்திற்க்குப் புதிய சிங்களப் பெயர் சூட்டும் செயற்பாடு இன்னுமோர் பக்கத்தில் நடக்கிறது பெயர் மாற்றம் செய்யப்பட்ட தமிழ் மண்ணின் பட்டியல் மிக நீளமானது மிக அண்மையில் முல்லைத்தீவு மூலதூவ என்றும் கிளிநொச்சி கிரானிக்கா என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இனப் படுகொலையின் அங்கமாகவும் சிங்களக் குடியேற்றத்தை பார்க்கலாம் மணலாறில் வாழ்ந்த தமிழ்க் குடும்பங்கள் nஐனரல் ஐhனகா பெறேரா தலைமையிலான இராணுவத்தால் சுட்டும் வெட்டியும் கொன்று விரட்டப்பட்டுள்ளன.ஓரு தமிழ்க் கிராமத்திற்கு ஐhனகாபுர என்று தன்னுடைய பெயரை அவர் சூட்டியுள்ளார் குடியேற்றத்தின் மூலம் தமிழர்கள் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, மணலாறு ஆகிய பகுதிகளில் சிறுபான்மையினராக ஆக்கப்பட்டுள்ளனர் இப்போது வடக்கில் குடியேற்றம் தொடங்கிவிட்டது.குடியேற்றத்தின் மூலம் இனப் பிரச்சனைக்குத் திர்வு காணமுடியும் என்று கூறும் புவியியல் ஆய்வு நூல்கள் வெளிவந்துள்ளன. வடக்கு கிழக்கில் தமிழர் வாழும் நிலம் சிங்களவருடைய நிலம் என்று வாதிடும் சிங்களப் பேரினவாதிகள் ஒரு நூற்றாண்டுக்கு மேலாக இலங்கையில் நிலவிய சோழர் ஆட்சியின் போது தாம் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டதாகக் கூறுகிறார்கள்தாம் குடியேறும் நிலத்திற்கு தாமே சொந்தக்காரர்கள் தமிழர்கள் அல்லவென்றும் வாதிடுகிறார்கள். இது போதாதென்று 1956 தொடக்கம் காலத்திற்கு காலம் அரசு ஆதரவு பெற்ற சிங்களக் காடையர்கள் இராணுவ மற்றும் பொலிஸ் பாதுகாப்புடன் தமிழர் மீது தாக்குதல் நடத்தினார்கள். உயிரிழப்புக்களையும் சொத்திழப்புக்களையும் தமிழர்கள் சந்தித்தனர் 1983ல் இது உச்சம் அடைந்தது.பாதிக்கப்பட்ட தமிழர்கள் வெளிநாடுகடுளுக்குத் தப்பியோடும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது தமிழ் டயஸ் போறா எனப்படும் புலம்பெயர் தமிழர் சமூகம் அனைத்துலக மட்டத்தில் தோன்றியது உலகத் தமிழர் என்றால் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் என்ற கருத்து நிலவுவதற்கு இது தான் காரணம்
தமிழர் தாயகம் மனிதப் புதைகுழிகள் நிறைந்த பூமி மட்டு அம்பாறைத் தமிழுறவுகள் கொடுத்த விலை மிக அதிகம் கொக்கட்டிச் சோலையிலே தமிழர் வீடுகள் குடிசைகள் தோறும் எண்ணற்றோர் உயிரிழந்துள்ளனர் வடக்கில் செம்மணி, வயாவிளான் என்பன கொன்று புதைக்கப்பட்டவர்களுக்குச் சாட்சி பகர்கின்றன இறுதியாக இப்போது முள்ளிவாய்க்காலில் மீண்டும் புதைகுழி.வரலாறு எமது வழிகாட்டி என்று சொன்ன தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் “ சிங்களப் பயங்கரவாதம் எமது தேசிய ஆன்மாவில் விழுத்திய வடுக்கள் என்றுமே மாறப் போவதில்லை ‘என்று அடித்தக் கூறியுள்ளார் .
பிரபாகரனின் தனிப்பெரும் பண்புகளை இங்கு எடுத்துக் காட்டலாம் குறைந்த பேச்சு, நிறைந்த கேள்வி, தனித்த சிந்தனை, கருத்தில் தெளிவு சாதனைக்கு மதிப்பு எனலாம் அவர் மேடை போட்டு முழங்கியதில்லை. வேட்டி சால்வை அணிந்து அரசியல்வாதி வேடம் தரித்ததில்லை தந்தவனுக்கே திருப்பி கொடு இது தான் அவருடைய செய்தி அடித்தவனைத் திருப்பியடி என்பது இந்தச் செய்தியின் சாரம்சம் அறிவு ரீதியாகவும் விஞ்ஞான ரீதியாகவும் தமிழீழனம் வளர வேண்டுமென்டு ஆசைப்பட்டு அதற்காக உழைத்தவர் விடுதலைப் பெற்ற தமிழீழம் பொருளாதார சுபீட்சம் காணவேண்டுமென்டு திட்டமிட்டார்.சாதி ஒழிப்பிற்கு அவர் முன்னுரிமை அளித்தார் சீதனக் கொடுக்கல் வாங்கலைத் தடைசெய்தார் மதச் சமத்துவத்தைப் பேணினார் தமிழீழ காவல்துறையை உருவாக்கி சட்ட ஒழுங்கை அமுலாக்கினார் ; எல்லாவற்றிக்கும் மேலாக அவர் பெண்கள் வாழ்வில் புரட்சிகர மாற்றத்தைத் ஏற்படுத்தினார் ஒரு புதுமைப் பெண்னை, புரட்சிகரப் பெண்னை தமிழீழ விடுதலைப்புலிகள் உருவாக்கினார்கள் அதன் தாக்கம் நிரந்தரமானது.தேசியத் தலைவர் அவர்கள் ஒரு சந்தர்ப்பத்தில் “ மகளீர் படையணினின் தோற்றமும் வளர்ச்சியும் எழுச்சியும் எமது இயக்கம் படைத்த மாபெரும் சாதனைகளில் ஒன்று “ என்று சொன்னார்.
தன்னாட்சி பெற்ற தமிழீழத்திற்கான அரசியல் சாசனத்தை உருவாக்குவதற்காக உலகின் தலைசிறந்த அரசறிவியல் பேராசியர்களையும் புலிகள் அமைப்பில் உறுப்பியம் பெற்;ற வல்லுனர்களையும் ஒன்றிணைத்து ஒரு வரைவைத் தயாரித்தார் சாசனவியலாளர்களால் அந்த வரைவு போற்றி பாதுகாக்கப்படுகிறது.ஒடுக்கப்பட்ட இனம் தொடர்ந்து ஒடுங்கியிராது என்பதற்கு பிரபாகரன் தொடுத்த விடுலைப் போர் சாட்சியாக அமைகிறது பிரபாகரன் நேத்தாஜி சுபாஸ் சந்திரபோசை நேசித்தார். அவரைப் போலவே பிரபாகரன் தூய்மையாக வாழ்ந்தார் நேத்தாஜியின் போராட்டப் பங்களிப்பு இன்னும் சரிவர கணிப்பிடப்படவில்லை. மழங்ககடிக்கப் படுகிறது என்று கூடச் சொல்லலாம் தமிழினத்தை கடந்த முப்பதிற்கும் மேலான வருட காலம் வழிநடத்தி வரும் பிரபாகரன் அவர்களின் தாக்கம் உலகத் தமிழினத்தால் மிக நன்றாக உணரப்படுகிறது. உலக தமிழ்ச் சமுதாயத்தில் எது நடந்தாலும் அவருடைய தாக்கம் இல்லாமல் நடக்க முடியாதளவிற்கு அவர் முத்திரை பதித்துள்ளார்.
thanks: savukku blog
சுஜாதா

சுஜாதா (மே 3, 1935 - பெப்ரவரி 27, 2008) தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவராவார். இயற்பெயர் ரங்கராஜன். தனது தனிப்பட்ட கற்பனை மற்றும் நடையால் அவர் பல வாசகர்களை கவர்ந்துள்ளார். சுஜாதாவின் முதல் கதை 1953 ஆம் ஆண்டு சிவாஜி என்ற பத்திரிக்கையில் வெளிவந்தது. சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை-வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் என பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர் சுஜாதா.
வாழ்க்கைக் குறிப்பு
ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த சுஜாதா, திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பிஎஸ்.சி (இயற்பியல்) படிப்பை முடித்தார். அதன் பின்னர் சென்னை வந்த சுஜாதா, குரோம்பேட்டை எம்.ஐ.டியில் பிஇ (இலத்திரனியல்) முடித்தார். திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் ஏ. பி. ஜே. அப்துல் கலாம் மற்றும் சுஜாதா ஆகியோர் ஒரே வகுப்பில் படித்தார்கள்.அதன் பின்னர் மத்திய அரசுப் பணியில் சேர்ந்தார், டெல்லியில் முதலில் பணியாற்றினார். 14 ஆண்டு அரசுப் பணியில் இருந்த சுஜாதா பின்னர் பெங்களூர் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் இணைந்தார். அங்கு ரேடார்கள் குறித்த ஆய்வுப் பிரிவிலும் மேலும் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றினார். பின்னர் பொது மேலாளராக உயர்ந்தார். பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் சென்னைக்குத் திரும்பினார்.
அறிவியலை ஊடகம் மூலமாக மக்களிடம் கொண்டு சென்றதற்காக அவரைப் பாராட்டி தேசிய அறிவியல் தொழில்நுட்பக் கழகம் அவருக்கு 1993ம் ஆண்டு விருது வழங்கிக் கெளரவித்தது.
மின்னணு வாக்குப் பதிவுப் பொறியை உருவாக்க முக்கியக் காரணராக இவர் இருந்தார். இதை உருவாக்கிய பாரத் எலெக்ட்ரானிக்கில் முக்கிய உறுப்பினராக இருந்தார் சுஜாதா.
இப்பொறியை உருவாக்கியதற்காக அவருக்கு வாஸ்விக் விருது வழங்கப்பட்டது.
சுஜாதாவின் எழுத்துப் பணியைப் பாராட்டி அவருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருதும் வழங்கப்பட்டுள்ளது.
புனைபெயர்
இவருடைய, "இடது ஓரத்தில்" என்ற சிறுகதை 1962 ஆம் ஆண்டு குமுதம் இதழில் ரங்கராஜன் என்ற பெயரில் வெளிவந்தது. குமுதம் ரா. கி. ரங்கராஜனின் பெயரும் இவர் பெயரும் குழப்பிக் கொள்ளப்பட்டதால் தன் மனைவி பெயரான, 'சுஜாதா'வைத், தன் புனைபெயராக வைத்துக் கொண்டார். கணையாழி இதழில் கடைசிப் பக்கங்கள் எனும் கட்டுரைத் தொடரை ஸ்ரீரங்கம் எஸ். ஆர் எனும் பெயரிலும் எழுதி வந்தார்.
ஆக்கங்கள்
சுஜாதா இலக்கியம், நாட்டார் வழக்காறு, தமிழ்ச் செவ்விலக்கியம், துப்பறியும் கதை, அறிவியல் கதை, சிறுகதை, புதினம், குறும் புதினம், நாடகம், திரைப்படம், கணிப்பொறியியல், இசை என்று பல பாணிகளிலும் வகைகளிலும் எழுதியுள்ளார். புதினங்கள், சிறுகதைகள், நாடகங்கள், தொகை நூல்கள் என இருநூற்றுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். ஒரு கவிதைத் தொகுப்பும் படைத்துள்ளார்.
எழுதிய புதினங்கள்
பதவிக்காக,ஆதலினால்காதல்செய்வீர்,பிரிவோம்சந்திப்போம்,அனிதாவின்காதல்கள்,எப்போதும் பெண்,என் இனிய இயந்திரா,மீண்டும் ஜீனோ,நிலா நிழல்,ஆ,கரையெல்லாம் செண்பகப்பூ,யவனிகா,கொலையுதிர் காலம்வசந்த் வசந்த்,ஆயிரத்தில் இருவர்,பிரியா,நைலான் கயிறு,ஒரு நடுப்பகல் மரணம்,மூன்று நிமிஷம் கணேஷ்,காயத்ரி,கணேஷ் x வஸந்த்,அப்ஸரா,மறுபடியும் கணேஷ்,வீபரீதக் கோட்பாடுகள்,அனிதா இளம் மனைவி,பாதிராஜ்யம்,24 ரூபாய் தீவு,வசந்தகாலக் குற்றங்கள்,வாய்மையே - சிலசமயம் - வெல்லும்,கனவுத்தொழிற்சாலை,ரத்தம் ஒரே நிறம்,மேகத்தைத் துரத்தினவன்,நிர்வாண நகரம்,வைரம்,ஜன்னல் மலர்,மேற்கே ஒரு குற்றம்,உன்னைக் கண்ட நேரமெல்லாம்,நில்லுங்கள் ராஜாவே,எதையும் ஒருமுறை,செப்டம்பர் பலிஹாஸ்டல் தினங்கள்ஒருத்தி நினைக்கையிலே,ஏறக்குறைய சொர்க்கம்,என்றாவது ஒரு நாள்,நில் கவனி தாக்கு,காந்தளூர் வசந்தகுமாரன் கதை,பெண் இயந்திரம்,சில்வியா.
குறும் புதினங்கள்
• "ஆயிரத்தில் இருவர்"
• "தீண்டும் இன்பம்"
• "குரு பிரசாத்தின் கடைசி தினம்"
• "ஆகாயம்"
சிறுவர் இலக்கியம்
• "பூக்குட்டி"
சிறுகதைத் தொகுப்புகள்
• ஸ்ரீரங்கத்துத் தேவதைகள்
• நிஜத்தைத் தேடி
சிறுகதை மற்றும் குறும் புதினத் தொகுப்புகள்
• நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம்
கவிதைத் தொகுப்பு
• நைலான் ரதங்கள்
நாடகங்கள்
• Dr. நரேந்திரநாத்தின் வினோத வழக்கு
• கடவுள் வந்திருந்தார்
• பாரதி இருந்த வீடு
• ஆகாயம்
கட்டுரைத் தொகுப்புகள்
• கணையாழியின் கடைசி பக்கங்கள்
• கற்றதும் பெற்றதும் [பகுதி 1-5]
• கடவுள் இருக்கிறாரா
• தலைமை செயலகம்
• எழுத்தும் வாழ்க்கையும்
• ஏன் ? எதற்கு ? எப்படி ?
• சுஜாதாட்ஸ்
• இன்னும் சில சிந்தனைகள்
• தமிழ் அன்றும் இன்றும்
• உயிரின் ரகசியம்
• நானோ டெக்னாலஜி
• கடவுள்களின் பள்ளத்தாக்கு
• ஜீனோம்
• திரைக்கதை எழுதுவது எப்படி?
திரைப்படமாக்கப்பட்ட இவரின் கதைகள்
• காயத்ரி
• கரையெல்லாம் செண்பகப்பூ
• ப்ரியா
• விக்ரம்
• வானம் வசப்படும்
• ஆனந்த தாண்டவம்
பணியாற்றிய திரைப்படங்கள்
• ரோஜா
• இந்தியன்
• ஆய்த எழுத்து
• அந்நியன்
• பாய்ஸ்
• முதல்வன்
• விசில்
• கன்னத்தில் முத்தமிட்டால்
• சிவாஜி த பாஸ்
• எந்திரன்
• வரலாறு (திரைப்படம்)
• செல்லமே
மறைவு
உடல் நிலை மோசமானதால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சுஜாதா சிகிச்சை பலனின்றி பிப்ரவரி 27, 2008 இரவு 9.30 மணியளவில் மறைந்தார். மறைந்த ரங்கராஜனுக்கு அரங்கபிரசாத், கேசவ பிரசாத் என இரு மகன்கள் உள்ளனர். மகன்கள் இருவரும் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். சுஜாதாவின் இறுதிச் சடங்குகள் 29.02.2008 அன்று சென்னை பெசன்ட் நகர் மயானத்தில் நடைபெற்றன
எண்டோசல்ஃபான் தீமைகள்

எண்டோசல்ஃபான் எனும் எம தூதன்.. எதிர்ப்புக் காட்டும் உலகம்...வக்காலத்து வாங்கும் இந்தியா..!
''விவசாயப் பயிர்களுக்கான பூச்சிக்கொல்லி என்ற பெயரில் தெளிக்கப்படும் 'எண்டோசல்ஃபான்', மிக வீரியம் மிக்க விஷமாக இருக்கிறது. இது மனித இனத்துக்கே, பெரும்கேடாக முடியப்போகிறது'' என்று பல ஆண்டுகளாகவே மருத்துவர்களும், சூழல் ஆர்வலர்களும் எச்சரித்துக் கொண்டே இருக்கிறார்கள். இதன் பாதிப்பு எப்படி இருக்கும், என்பதற்கு சாட்சியாக கேரள மாநிலம், காசர்கோடு மாவட்டத்தில் நடைப்பிணங்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் மக்கள்.இதன் பிறகும்கூட, 'எண்டோசல்ஃபான் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கு ஆதாரம் வேண்டும்' என்று சொன்னபடி... அந்தப் பூச்சிக்கொல்லி பயன்பாட்டுக்கு தடைவிதிக்க மறுத்து வருகிறது, இந்திய அரசு.அது மட்டுமா... சமீபத்தில், சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனீவா நகரில் உலக நாடுகள் ஒன்றுகூடி, 'உலக அளவில் எண்டோசல்ஃபானுக்கு தடை விதிக்கப்படும்' என்று முடிவெடுக்க... அந்தக் கூட்டத்திலும்கூட, 'இந்தியா போன்ற வளரும் நாடுகளில் எண்டோசல்ஃபானுக்குத் தடை விதிக்க முடியாது. அதற்கு இணையாக இன்னொரு விஷத்தைக் கண்டுபிடித்து எங்கள் கையில் கொடுத்துவிட்டு தடை செய்யுங்கள்' என்று கோரிக்கை வைத்திருக்கிறது இந்தியா! எங்கே போய் முட்டிக் கொள்வது நாம்?
ஆளையே காவு வாங்கிவிடும் 'எண்டோசல்ஃபான்' பூச்சிக்கொல்லிக்கு எதிராகச் சுழன்று கொண்டிருக்கும் தன்னார்வலர்களில் முக்கியமானவர்... கேரளாவைச் சேர்ந்த 'தணல்' எனும் அமைப்பைச் சேர்ந்த ஸ்ரீதர். அவர் இதைப்பற்றி நம்மிடம் பேசியபோது, 'எண்டோசல்ஃபானை, 'பலரும் பூச்சிமருந்து'னு சொல்றாங்க. அது தப்பு... விஷம்னுதான் சொல்லணும். 'இரண்டாம் நிலை விஷப்பொருள்’னு உலகச் சுகாதார நிறுவனமும், 'முதல் நிலையில், இரண்டாம் பிரிவை சேர்ந்த நச்சுத்தன்மையுடைய பூச்சிக்கொல்லி’னு அமெரிக்கச் சுற்றுச்சூழல் கழகமும் எண்டோசல்ஃபானை அறிவிச்சிருக்கு.இத்தகைய நச்சுப்பொருளைத்தான், உணவுப் பொருள் உற்பத்தியில அளவுக்கு அதிகமா நாம பயன்படுத்துறோம். இதன் நச்சுத்தன்மை மனுஷங்களோட உடம்புல சுலபமா நுழைஞ்சிரும். மூச்சுக்குழாய் வழியா மட்டுமில்ல... தோல்ல இருக்கற நுண் துளைகள் வழியாகூட நுழையக்கூடிய சக்தி அதுக்கு உண்டு. நுரையீரல், வயிறுனு வசதியா அது இடம் புடிச்சுட்டா... சாமான்யமா அசையாது. மத்த நச்சுகள், மலத்தோட வெளியேறுற மாதிரி, இது வெளியேறாது. உடம்புலயே தங்கி, 'ஸ்லோ-பாய்சன்’ மாதிரி செயல்பட்டு ஆளையே காவு வாங்கிடும்.பயிர்கள்ல தெளிக்கப்படுற இந்த விஷம், காத்து மூலமா தண்ணியிலயும் கலந்திருது. அதை குடிக்கற கால்நடைகளின் ரத்தம் வழியா இறைச்சியில கலந்து, அதைச் சாப்பிடுற மனுசஷங்களோட ரத்தத்துலயும் கலந்து பல நோய்களை ஏற்படுத்துது. எண்டோசல்ஃபான் உள்ளிட்ட ரசாயனப் பூச்சிக்கொல்லிகளைத் தொடர்ந்து பயன்படுத்தினால், உயிருக்கும் சூழலுக்கும் மிகப்பெரிய அபாயம் ஏற்படுறதைத் தடுக்கவே முடியாது.
அமெரிக்கர்கள் மட்டும்தான் மனிதர்களா? பூச்சிக்கொல்லிகளோட தன்மை, அதனால ஏற்படுற பிரச்னைகள் இதையெல்லாம் தெரிஞ்சுகிட்டு, அவை பத்தின உண்மை நிலையை அரசுக்கு அறிக்கையா கொடுக்கறதோட, தடை செய்யப்பட வேண்டிய அவசியத்தையும் எடுத்து வைக்கறதுக்காக 'மத்தியப் பூச்சிக் கட்டுப்பாட்டுக் கழகம்' இயங்கிக்கிட்டிருக்கு. ஆனா, இந்த அமைப்பு தனியார் முதலாளிகளோட கட்டுப்பாட்டுலதான் முழுக்க இயங்கிக்கிட்டிருக்கு.கேரளாவோட காசர்கோட்டுல நடந்த விபரீதங்கள் (பார்க்க, பெட்டிச் செய்தி) கண்முன் சாட்சிகளா இருக்கு. அதை அடிப்படையா வெச்சே எண்டோசல்ஃபானைத் தடை செய்யலாம். பெரும்பாலான உலக நாடுகள் தடை விதிச்ச பிறகும், நம்ம அரசு அசையாம இருக்கு. 1952-ம் வருஷமே அமெரிக்காவுல டி.டி.டி ரசாயன மருந்தைத் தடை பண்ணிட்டாங்க. ஆனா, 50 வருஷம் கழிச்சு, 2002-ம் வருஷம்தான் இந்தியாவுல அதைத் தடை பண்ணியிருக்காங்க. ஒரு நாட்டுல வாழற மக்களுக்கு ஆபத்து ஏற்படுத்துற ரசாயனம், அடுத்த நாட்டுல இருக்கற மக்களை வாழவா வைக்கும்? இந்த அடிப்படை அறிவுகூடவா நம்ம அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இருக்காது? இல்ல... அமெரிக்காவுல இருக்கறவங்கதான் வாழத் தகுதியான மனுஷங்க... இந்தியா மாதிரியான நாடுகள்ல இருக்கறவங்க வாழத் தகுதியில்லாத இழிபிறவிங்களா?'' என்று கொதிப்புடன் கேட்ட ஸ்ரீதர்,
''போபால் விஷ வாயுக் கசிவு மாதிரியான மிகமோசமான விளைவுகள் ஏற்படுறதுக்குள்ள எண்டோசல்ஃபானை அரசு உடனடியா தடை செய்யணும்' என்று தங்களின் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினார்!
நாசமாகும் நரம்பு மண்டலம்!
தமிழகத்தில் எண்டோசல்ஃபான் தொடர்பாக விவசாயிகளுக்கு விழிப்பு உணர்வை ஏற்படுத்தி வரும் திண்டுக்கல்லைச் சேர்ந்த 'செரின்' அமைப்பின் நிர்வாகி ஜேம்ஸ் விக்டர், ''தமிழகத்தில், எண்டோசல்ஃபான் பாதிப்பு பற்றி சரியான ஆவணங்கள் இல்லை. அதனால், என்ன மாதிரியான பாதிப்புகள் என்பது குறித்து இங்கே யாருக்கும் தெரியவில்லை. அதேசமயம்... இதுதான் என்று தெரியாமலேயே பலவகையான பாதிப்புகள் பரவலாக நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. விவசாயிகளுக்கு அதை தெரிவிக்க, நாம் தவறி விட்டோம்.இந்தப் பூச்சிக்கொல்லியைத் தொடர்ந்து பயன்படுத்துபவர்களுக்கு உடல் மற்றும் மன ரீதியான பாதிப்பு ஏற்படுவதோடு, நிலத்தில் உள்ள நன்மை செய்யும் பூச்சிகளும் அழிந்து விடுகின்றன. இதனால் பல்லுயிர் பெருக்கம் பாதிக்கப்பட்டு, உயிர்ச்சூழல் மிகப்பெரிய அபாயத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறது. எண்டோசல்ஃபானின் நச்சுத் தன்மை, மனிதர்களின் மத்திய நரம்பு மண்டலத்தைத் தாக்கிச் செயலிழக்கச் செய்கிறது. இதை அதிகமாக நுகரும்போது தலைவலி, மயக்கம், சோர்வு, மனஅழுத்தம் ஏற்படுகிறது. அளவு கூடும்போது, கடும் விஷமாக மாறி, உயிருக்கே உலையாகிவிடும். புரோட்டின் குறைவாக உள்ளவர்களை இதன் நச்சு எளிதாக தாக்கும். இதனால் தோலில் வெடிப்புகள், புற்றுநோய், மலட்டுத்தன்மை போன்ற தொடர் பாதிப்புகளும் ஏற்படும்.
எண்டோசல்ஃபான் தெளித்த வயல்வெளிகளில் மேயும் ஆடு, மாடு போன்ற கால்நடைகளின் சிறுநீரகங்கள், கல்லீரல், விந்துப் பைகள் செயலிழந்து, நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து, கண்பார்வை இழப்பும் ஏற்படுகின்றன. பயிர்களில் தெளிக்கப்படும்போது நீரிலும், பழம் மற்றும் காய்கறிகளிலும் ஏழு நாட்கள் வரை இதன் வீரியத் தன்மை இருக்கும். அதேசமயம், மண் துகள்களில் அவை படிந்து 60 முதல் 800 நாட்கள் வரை வீரியம் குறையாமல் இருக்கும். எனவே, உணவுப் பயிர்களில் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும். எண்டோசல்பானைத் தடை செய்ய இந்தியா உடனடியாக முன்வரவேண்டும்'' என்று வலியுறுத்தினார்.
கல்யாணமா... கருமாதியா... என்பதை இனியாவது அரசு முடிவு செய்தால் நல்லது!.
நன்றி - பசுமை விகடன்
நட்பு-Dedicated to final year IT
இவ்வுலம் இறைவன் தந்தது.
இனிமையின் உதயம் நட்பு தருவது.
இறப்பு வரை நீ இருந்தால் இழப்பில்லை,
இறக்கும் போது நீ இருந்தால் பயமில்லை..
மழலைப் பருவத்தில்
பார்த்து வியக்க
ஒரு நட்பு...
குழந்தைப் பருவத்தில்
ஓடி விளையாட
ஒரு நட்பு...
காளைப் பருவத்தில்
ஊர் சுற்ற
ஒரு நட்பு...
வாலிபப் பருவத்தில்
பேசி ரசிக்க
ஒரு நட்பு...
முதிர்ந்த பின்
அனுபவங்களைப்
பகிர்ந்து கொள்ள
ஒரு நட்பு...
நட்புகள் ஆயிரம் இருந்தும்
நட்பின் தேவை குறையவில்லை...
தேவையின் போது
தோள்களில் சாய
நட்பு வேண்டும்...
துன்பத்தின் போது
கண்ணீர் துடைக்க
நட்பு வேண்டும்...
மகிழ்ச்சியின் போது
மனம் மகிழ
நட்பு வேண்டும்...
நானாக நானிருக்க
நட்பே...
நீ எனக்கு
நட்பாக வேண்டும்...
பிரிவுகள்தான்
அன்பின் ஆழத்தை
அளக்கும் கருவியாமே…?
பார்த்தாயா
சின்னப் பிரிவிற்குள்
நீ சிதைந்து போனதை…?
இது
உனக்கு மட்டுமல்ல
எனக்கும் சேர்த்துத்தான்
சொல்கின்றேன்.
ம்…
இப்போது புரிகிறதா
என்மீது நீ கொண்ட நேசமும்
உன்மீது நான் கொண்ட நேசமும்
எவ்வளவு ஆழமானதென்று…?
தற்கால ஓய்வுகளாகவும்,
நிரந்தரச் சாய்வுகளாகவும்,
பிரிவுக்கு முன்னாலும்
பின்னாலும்
பிரியாமல் தொடர்பவை
பிரிவுகளே.
பிரிவுகளைப்
பிரியவேண்டுமென்று
மனங்கள் பிரியப்படும்.
ஆனால்,
நிஜத்தின் பாதங்களோ,
அந்த பிரியத்தின்
சந்திப்பிலும்
ஒரு பிரிவைச் சந்திக்கும்.
Monday, May 23, 2011
குட்டி கதை

ஊருக்கு ஒதுக்குப் புறமாக ஒரு கொடிய விஷமுள்ள பாம்பு வாழ்ந்து வந்தது. ஊர் மக்கள் யாராவது அதன் புற்றின் பக்கம் போனால் சீறி வந்து கொத்தி விடும். பாம்புப் புற்று இருந்த பாதை அந்த ஊருக்கும் பக்கத்து சந்தைக்கும் குறுக்கு வழி. பாம்புக்கு பயந்தே ஊர் மக்கள் பல தொலைவு சுற்றி அந்த சந்தைக்குப் போய் வந்து கொண்டிருந்தார்கள். வேறு வழியில்லாததால் சலிப்புடனேயே வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தனர்.
ஒரு நாள் அந்த ஊருக்கு ஒரு யோகி வந்தார். அவர் மிருகங்களிடம் பேசக் கூடிய வரம் பெற்றவர். ஊர் மக்கள் தங்கள் குறையை அவரிடம் முறையிட்டனர். அவர் பாம்பிடம் பேசி அதற்கு ஊர் மக்களை கடிக்கக் கூடாது என்று கட்டளை இட்டு விட்டு பக்கத்து ஊருக்குச் சென்று விட்டார். பாம்பும் அவர் கட்டளைக்குக் கட்டுப் பட்டு நடந்தது.
ஆனால் ஊர் மக்கள் சும்மாயில்லை. வழியே போகும் சிறுவனுக்குக் கூட பாம்பிடம் இருந்த பயம் போய் விட்டது. பாம்பைக் கண்டால் அதைக் கல்லால் அடிப்பது, துன்புறுத்துவது, விரட்டியடிப்பது என்று அதன் வாழ்க்கையை நிம்மதியில்லாமல் செய்து கொண்டிருந்தனர். உடம்பில் பல காயங்களுடன் குற்றுயிரும் குலையுயிருமாகி விட்டது பாம்பு.
யோகி ஒரு நாள் பாம்புப் புற்று இருந்த வழியாக ஊருக்குள் திரும்ப வரும் போது பாம்பின் பரிதாபமான நிலையைக் கண்டு அதனை விசாரித்தார். பாம்பும் நடந்த கதையையெல்லாம் கூறி அழுதது.யோகி பாம்பைப் பார்த்து "அட முட்டாள் பாம்பே! உன்னை மக்களைக் கடிக்கவேண்டாம் என்றுதானே கூறிச் சென்றேன். பக்கத்தில் வருபவனைப் பார்த்து சீறாதே என்று ஒரு போதும் சொல்லவில்லையே" என்று கேட்டார். இதற்குப் பின் பாம்பும் பிழைத்துக் கொண்டது.
புற்றுநோய்' புத்தகம்.. இந்திய அமெரிக்கருக்கு புலிட்ஸர்!

இந்திய அமெரிக்க மருத்துவர் சித்தார்த்த முகர்ஜி எழுதிய 'தி எம்பெரர் ஆஃப் ஆல் மாலடிஸ்: எ பயோகிராஃபி ஆஃப் கேன்சர்' (The Emperor of All Maladies: A Biography of Cancer) என்ற புத்தகத்துக்கு ஃபிக்ஷன் அல்லாத பிரிவின் கீழ் 2011-ம் ஆண்டுக்கான புலிட்ஸர் விருது கிடைத்துள்ளது. எழுத்துலகில் மிக உயரிய விருதுகளில் ஒன்றாகக் கருதப்படும் புலிட்ஸரை வென்றுள்ள மருத்துவர் சித்தார்த்தாவின் புத்தகம், புற்றுநோயை ஆதி முதல் அந்தம் வரை அலசுகிறது விரிவாக அலசுகிறது.புற்றுநோயின் தோற்றம் தொடங்கி, மருத்துவ சிகிச்சையில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் என நீண்ட வரலாற்றை பதிவு செய்திருக்கிறார் சித்தார்த்தா. புலிட்ஸர் விருதுடன் 10 ஆயிரம் டாலர் பரிசுத் தொகையை அவர் பெறவுள்ளார்.
டெல்லியில் 1970-ம் ஆண்டு பிறந்த சித்தார்த்த முகர்ஜி, ஸ்டாண்ட்ஃபோர்ட் பல்கலைக்கழத்தில் மருத்துவம் பயின்றார். பின்னர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பி.எச்டி பெற்றார். ஹார்வர்டு மருத்துவப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்.
தற்போது நியூயார்க்கில் வசித்து வரும் அவர், கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராகவும், கொலம்பியா பல்கலைக்கழ மருத்துவ மையத்தில் புற்றுநோய் மருத்துவராகவும் உள்ளார்.புலிட்ஸர் விருது பெற்றுள்ள இவரது புத்தகத்தில் இருந்து சில பகுதிகளைக் காண.
83வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா - லாஸ் ஏஞ்சல்ஸ்


83வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருது 'தி கிங்ஸ் ஸ்பீச்' படத்தின் இயக்குநர் டாம் ஹூப்பருக்கு வழங்கப்பட்டது.
'பிளாக் ஸ்வான்' படத்தின் நாயகி நதாலி போர்ட்மேனுக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை காலின் ஃபிர்த் பெற்றார். 'தி கிங்ஸ் ஸ்பீச்' படத்தில் நடித்ததற்காக காலின் ஃபிர்த்துக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
வாய்ப்பை இழந்தார் ஏ.ஆ.ரஹ்மான்...
சிறந்த பின்னணி இசைக்காக இந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. இருப்பினும் இவ்வாண்டிற்கான சிறப்பு பின்னணி இசைக்கான விருதை 'தி சோசியல் நெட்வொர்க்' படத்திற்காக டிரன்ட் ரெஸ்னர் மற்றும் அடிகஸ் ரோஸ் ஆகியோர் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
விருதுப் பட்டியல்...
சிறந்த நடிகர் - காலின் ஃபிர்த் (தி கிங்ஸ் ஸ்பீச்)
சிறந்த நடிகை - நதாலி போர்ட்மேன் (பிளாக் ஸ்வான்)
இயக்குநர் - டாம் ஹூப்பர் (தி கிங்ஸ் ஸ்பீச்)
இசை (ஒரிஜினல் பாடல்) - டாய் ஸ்டோரி 3
சிறந்த எடிட்டிங் - தி சோஷியல் நெட்வொர்க்
விஷூவல் எபக்ட்ஸ் - இன்செப்ஷன்
சிறந்த டாக்குமென்டரி - இன்சைட் ஜாப்
குறும்படம் (லைவ் ஆக்ஷன்) - காட் ஆப் லவ்
காஸ்ட்யூம் வடிவமைப்பு - ஆலிஸ் இன் ஒன்டர்லேண்ட்
மேக்கப் - தி உல்ப்மேன்
ஒலிக் கலவை - இன்செப்ஷன்
இசை (ஒரிஜினல் ஸ்கோர்) - தி சோஷியல் நெட்வொர்க்
சிறந்த துணை நடிகர் - கிறிஸ்டியன் பாலே (தி பைட்டர்)
சிறந்த துணை நடிகை - மெலிஸா லியோ (தி பைட்டர்)
சிறந்த வெளிநாட்டுப் படம் - இன் எ பெட்டர் வேர்ல்ட் (டென்மார்க்)
திரைக்கதை (ஒரிஜினல்) - தி கிங்ஸ் ஸ்பீச்
திரைக்கதை (தழுவல்) - தி சோஷியல் நெட்வொர்க்
சிறந்த அனிமேஷன் படம் - டாய் ஸ்டோரி 3
அனிமேஷன் குறும்படம்- தி லாஸ்ட் திங்
ஒளிப்பதிவு - இன்செப்ஷன்
கலை இயக்கம் - ஆலிஸ் இன் ஒன்டர்லேண்ட்
Subscribe to:
Posts (Atom)