இவ்வுலம் இறைவன் தந்தது.
இனிமையின் உதயம் நட்பு தருவது.
இறப்பு வரை நீ இருந்தால் இழப்பில்லை,
இறக்கும் போது நீ இருந்தால் பயமில்லை..
மழலைப் பருவத்தில்
பார்த்து வியக்க
ஒரு நட்பு...
குழந்தைப் பருவத்தில்
ஓடி விளையாட
ஒரு நட்பு...
காளைப் பருவத்தில்
ஊர் சுற்ற
ஒரு நட்பு...
வாலிபப் பருவத்தில்
பேசி ரசிக்க
ஒரு நட்பு...
முதிர்ந்த பின்
அனுபவங்களைப்
பகிர்ந்து கொள்ள
ஒரு நட்பு...
நட்புகள் ஆயிரம் இருந்தும்
நட்பின் தேவை குறையவில்லை...
தேவையின் போது
தோள்களில் சாய
நட்பு வேண்டும்...
துன்பத்தின் போது
கண்ணீர் துடைக்க
நட்பு வேண்டும்...
மகிழ்ச்சியின் போது
மனம் மகிழ
நட்பு வேண்டும்...
நானாக நானிருக்க
நட்பே...
நீ எனக்கு
நட்பாக வேண்டும்...
பிரிவுகள்தான்
அன்பின் ஆழத்தை
அளக்கும் கருவியாமே…?
பார்த்தாயா
சின்னப் பிரிவிற்குள்
நீ சிதைந்து போனதை…?
இது
உனக்கு மட்டுமல்ல
எனக்கும் சேர்த்துத்தான்
சொல்கின்றேன்.
ம்…
இப்போது புரிகிறதா
என்மீது நீ கொண்ட நேசமும்
உன்மீது நான் கொண்ட நேசமும்
எவ்வளவு ஆழமானதென்று…?
தற்கால ஓய்வுகளாகவும்,
நிரந்தரச் சாய்வுகளாகவும்,
பிரிவுக்கு முன்னாலும்
பின்னாலும்
பிரியாமல் தொடர்பவை
பிரிவுகளே.
பிரிவுகளைப்
பிரியவேண்டுமென்று
மனங்கள் பிரியப்படும்.
ஆனால்,
நிஜத்தின் பாதங்களோ,
அந்த பிரியத்தின்
சந்திப்பிலும்
ஒரு பிரிவைச் சந்திக்கும்.
No comments:
Post a Comment