

அன்று!
தந்தையின் கண்ணீர்,அன்னையின் அழுகுரல்
கடந்து மண்ணில் விழுந்தேன் நான்...
மண்ணைத் தொட்டதும் என்னைத் தொட்டனரோ
இல்லையோ... என் பெண்மையைத் தொட்டு என்னைத்
தொடவில்லை எவரும்..
கரைபடிந்த மனிதரெல்லாம் கரைவேட்டிகளிலிருக்க
கள்ளமறியா நாங்கள் மட்டும் கரைந்தோம்....
கருவறைக்குமின்றி கல்லறைக்குமின்றி கருவிலேயே
கலைந்தோம்....
தீண்டாமலிருக்க நாங்கள் என்ன பாம்பா?
தொடமலிருக்க நாங்கள் என்ன மின்சாரம?
வீட்டினுள் சிறை,கயவருக்கு இரை
அடிமைகளாய் சிறை,இதுவே எங்கள் வரையறை..
எதிர்பார்ப்புகள் எமாற்றங்களான பின் எண்ணங்களும்
எழுச்சியுறவில்லை...
நளினமென்னும் பெயரால் நசுக்கப்பட்டோம்..
அழகென்னும் பெயரால் அடிமையக்கப்பட்டோம்..
வெட்கமென்னும் பெயரால் வெகுளியாக்கப்பட்டோம்..
இன்று
மலர்ப்பாதைகள் எங்களை வரவேற்கத் தயாராக
உள்ளபோது நாங்கள் ஏன் முட்களுக்கு இரத்ததானம்
செய்யவேண்டும்?...
சொர்க்கம் எங்களைச் சிங்காரிக்கத் தயாராக
உள்ளபோது நாங்கள் ஏன் நரகத்தில் நாற்காலி கேட்க
வேண்டும்?...
என பட்டறிவு பகுத்தறிவூட்ட பயணிக்கின்றோம்
புதுவுலகில்..
சாதனைகள் மலைக்குமளவு சாதனைகள் புரிய
மனமிருக்க வானளவில் வளர்ந்தோம்...
தரணியெங்கும் பெண்கள் தலையெடுக்க
தனிச்சிறப்புடன் உயர்ந்தோம்..
பெண்வளர்ச்சியில்லா சமுதாயவளர்ச்சியில்லை என
பார் போற்ற திகழ்ந்தோம்..
பெண்வளர்ச்சியை மண்வளர்ச்சியாக்கி
மகத்துவங்கள் புரிகிறோம் இன்று..
நாளை!
ஆணுக்கு பெண் என்பது மேலாகி ஆணை விடப் பெண்
என்றாகும்..
பொறுமையுடன் பேறாற்றலும்,
அடக்கமுடன் ஆளுமையும்,
நளினமுடன் நாகரீகமும்,
அச்சமுடன் ஆர்வமும்,
நாணமுடன் நாவாற்றலும்,
மடமுடன் மாண்பும்,
பயிர்ப்புடன் பண்பும்,
கொண்டோராய் உலகை வென்றோராய்....
கனவுமங்கையாய்.......
by
YOURS SENTHAMIL
No comments:
Post a Comment